நீங்கள் ஒரு குழுவின் பிரதிநிதியாகச் செல்கிறீர்கள் என்றால்,கடைசி வரை உங்கள் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு முன்னும் பின்னும், சாதி அதே சாதி தான். பெண் எப்போதும் பெண் தான். மாற்றுத் திறனாளி தொடர்ந்தும் அதே இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறார். ஆனால், ஒரு ஏழை வேலையில் சேர்ந்த பிறகு பணக்காரராக மாறி விடுகிறாரே? குறைந்தபட்சம், அதே சம்பளம் பெறும் மற்றவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் ஈடாகி விடுகிறாரே? பிறகு அவரை யாரின் பிரதிநிதி என்று கணக்கெடுப்பது? ஒருவரின் […]
ஏழைகள்
அண்ணே.. அந்த ஏழை அர்ச்சகர் மேட்டர்!
கேள்வி: என் பக்கத்து வீட்டில் ஒரு ஏழை அர்ச்சகர் இருக்கிறார். God promise. அவருக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது? பதில்: யாருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க உன் பக்கத்து வீட்டைப் பார்க்காதே. அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்குச் செல். அங்கு முழுக்க ஆண்களாக இருக்கிறார்களா? பெண்களுக்கு இடம் கொடு. அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல், அங்கு முழுக்க இந்துக்களாக இருக்கிறார்களா? இசுலாமியர்களுக்கு இடம் ஒதுக்கு. அருகில் உள்ள மத்திய […]
ஏழைகள் எங்கே போவார்கள்?
கேள்வி: எல்லாம் சரி. ஏழைகள் எங்கே போவார்கள்? அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா? பதில்: இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமோ வேலை வாய்ப்புத் திட்டமோ அன்று. நாட்டில் ஒரே ஒரு வேலை, படிப்பு இடம் இருந்தாலும் அதனை எப்படி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒதுக்குவது என்பதை முடிவு செய்யத் தான் இட ஒதுக்கீடு. ஒரே ஒரு ஏழைக்கு இடம் ஒதுக்கி நாம் வறுமையை ஒழிக்க முடியாது. உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் […]