நான் அறிஞர் அண்ணாவைப் படித்துப் புரிந்து கொண்ட வரையில், அவருடைய வடநாட்டு எதிர்ப்பு என்பது, * இந்தியைத் திணிக்கும் மொழி ஆதிக்கத்திற்கு எதிரானது* தில்லியில் அதிகாரத்தைக் குவிக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரானது* வட நாட்டு முதலாளிகள் கொழுக்க தமிழ்நாட்டைச் சந்தையாகப் பயன்படுத்தும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரானது* பார்ப்பன – பனியா சாதி ஆதிக்கத்திற்கு எதிரானது வட நாட்டு எதிர்ப்பு என்பது ஆதிக்க எதிர்ப்பாக இல்லாமல், பிழைக்க வழியில்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்த சாமானியர்களை இழிவாகப் பார்க்கும் தமிழின ஆதிக்கப் […]
அண்ணா
மத்திய அரசுக்குப் பலம் எதற்காக?
“தேவைக்கு அதிகமான அதிகாரங்களை மத்தியில் குவித்து வைத்துக் கொண்டிருந்தால், நாட்டின் பாதுகாப்பு போன்ற முக்கியப் பொறுப்புகளில் சோடை போகக் கூடும்” அன்றே எச்சரித்தார் அறிஞர் அண்ணா. இன்று சீனாவிடம் எல்லையைக் கொடுத்து விட்டு PubG தடை செய்து கொண்டிருக்கிறார் மோடி.
திட்டமும் சட்டமும்
உழவர் சந்தை, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகங்கள் போன்றவை எல்லாம் திட்டங்கள். அடுத்த கட்சி ஆட்சி வரும் போது காழ்ப்புணர்வின் காரணமாக முடக்கப்படக் கூடும். ஒரு கட்சி தானே கொண்டு வந்த நல்ல திட்டம் என்றாலும் அரசிடம் காசு இல்லை என்றாலும் முடங்கக் கூடும். ஆனால், இந்தச் சட்டம் இருக்கிறதே சட்டம்! அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சென்றாலும் நின்று விளையாடும்! நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சட்டங்கள் யாவற்றையும் திமுகவின் அண்ணாவும் கலைஞரும் […]
அண்ணா சொல்லிக் கொடுத்த கணக்கு
என் கருத்தைச் சொன்னால், 2 பேர் திட்டுவார்கள். 3 பேர் சிரிப்பார்கள். 5 பேர் புரிந்து கொள்வார்கள். நான் பேசினால் எனக்கு அந்த 5 பேர் இலாபம். ஏச்சுக்கும் நகைப்புக்கும் அஞ்சி பேசாமல் இருந்தால் 5 பேர் நட்டம். நம் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்காக நாம் பேச வேண்டுமே தவிர, என்றுமே இந்தப் பக்கம் வராமல் போகிறவர்களுக்காக அமைதியாக இருத்தல் ஆகாது. எனக்கு இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. பார்க்க – […]