கேள்வி: SSLC, +2 வகுப்புகளில் தோல்வி அடைகிறவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இந்தத் தேர்வுகளைத் தடை செய்து விடலாமா?
பதில்:
பொதுவாக, எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை நாடுவது தெரிந்தது தான்.
ஆனால்,
நீட்டில் தான் வெற்றி பெற்று பெயரும் புகழும் அடைய வேண்டியவர்கள் மாள்கிறார்கள்.
அனிதா 1176/1200 எடுத்தது தோல்வியா?
நீட் சாவுகள் தனிநபர் தோல்வியால் விளைவது அல்ல. அநீதியான சமூகத்தால் விளைவது.
12 ஆண்டுகள் படித்து வாங்கிய மதிப்பெண் செல்லாது என்று திடீரென ஒரு நாள் அறிவிப்பது சமூக அநீதி.
அந்த அநீதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடியும் தனக்கு நீதி கிட்டவில்லை என்றே அனிதா உயிரை மாய்த்துக் கொண்டாள்.
கதையில் வருகிற கண்ணகி அநீதி கண்டு மதுரையை எரித்தாள். இன்றைய கண்ணகிகள் தங்களையே எரித்துக் கொள்கிறார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்