• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது?

SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது?

July 25, 2019

கேள்வி: SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது?

பதில்:

குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தால் cut-off ஒன்றாக வர வாய்ப்பிருக்கிறது.

SC, ST, OBC பாவம் என்று யாரோ ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ இத்தனை நாள் குறைவான cut-off முடிவு செய்யவில்லை.

இருக்கிற இடங்களுக்கு எத்தனைப் பேர் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பொருத்து cut-off மாறும்.

மருத்துவப் படிப்புக்குப் போட்டி அதிகம். அதனால் cut-off அதிகம்.

கலை, அறிவியல், பொறியியல் படிப்புகளுக்கு மருத்துவத்தை விட இடங்கள் அதிகம். அதனால், போட்டி குறைவு. Cut-offம் குறைவு.

ஒரே படிப்பு என்றாலும் நல்ல கல்லூரிக்குப் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் cut-off அதிகமாகத் தேவைப்படும்.

பொறியியல் படிப்பு இடம் மொத்தமே 10 சீட் தான் என்று வைத்துக் கொள்ளுங்கள். GEN, SC, OBC எல்லோரிலும் 200/200க்கு எடுத்த மாணவர்கள் ஓரிருவராவது இருப்பார்கள் அல்லவா?. அப்போது, அது தான் எல்லோருக்குமே cut-off ஆக அமையும்.

SBI போன்ற அரசுத் தேர்வுகளுக்கு இலட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள். காலியாக இருப்பதோ மிகக் குறைவான இடங்கள். அதனால் தான் இந்த நிலை.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2290