கேள்வி: SBI மீது வழக்கு தொடுக்கலாமா?
பதில்: இது தேவையில்லாத ஆணி.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அறிவிக்காமல் தேர்வு நடத்தியதற்கு வேண்டுமனானால் விளக்கம் கேட்கலாம். ஆனால், இது தான் சாக்கு என்று கேள்வித்தாளைக் கடினமாக்கி நம்ம ஆட்களையும் சேர்த்து தோல்வியுறச் செய்வார்கள்.
மற்றபடி, இது ஒரு SBI தேர்வில் மட்டும் நடக்கவில்லை. BHEL தேர்வு, அஞ்சல் துறைத் தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என்று பல இடங்களிலும் இதே போக்கு தான்.
BHEL தேர்வு முடிவு பாருங்கள்.
HR, Finance என்று அவர்கள் வழக்கமாக கறை படியாமல் நோம்பி கும்பிடும் வேலைகளில் SC, ST, OBC எல்லோரையும் விட குறைவான மதிப்பெண்களைப் பெற்றும் வேலை பெறுகிறார்கள்.
10% பிராடு ஒதுக்கீடு என்னும் சட்டத்தையே முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
பார்க்க… முகநூல் உரையாடல்