SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியும் ஏமாற்றுவார்களா என்று எண்ணி மாய்கிறார்கள்!
இவர்கள் இதுவும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள் என்று புரிந்து தானே திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக இவர்களை எதிர்த்து வருகிறது!
2019லேயே ஒரு மக்களாட்சி நாட்டில் சட்டப்படி இந்தப் பிராடு வேலை செய்கிறவர்கள்,
2000 ஆண்டுகளாக முட்டாள் ராசாக்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு என்னவெல்லாம் கொடுமைகள் செய்திருப்பார்கள்?
மற்றபடி, பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் என்ன ஐயர் வீட்டில் பெண் கொடுக்கவில்லை என்றா எதிர்த்தார்கள்? இல்லை, அவர்களுக்குள் தான் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா பொறாமையா, வன்மமா?
இங்கு சாதியின் பெயரால் நிகழ்வது ஒரு சமூக அநீதி!
அந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் புரட்சி தான் திராவிடம்!
நமக்காக போராடிய புரட்சியாளர்களை வில்லன்களாக்கி நம்மையே நம்ப வைப்பது தான் பார்ப்பனீயம்!
புராணக் கதைகள் முதற்கொண்டு நம்மை இப்படி நம்ப வைப்பது அவர்களுக்குக் கை வந்த கலை!
பார்க்க… முகநூல் உரையாடல்