ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயற்படுகிறது என்பது புரிந்து விட்டாலே, பல அரசியல் பிரச்சினைகளில் சரியான நிலைப்பாடுகளை எடுக்க முடியும். இது ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கிய கதை! கட்டாயம் முழுமையாகப் படியுங்கள்! ** 1995ல் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல் மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை சொன்னபோது எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள். இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட […]
நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்?
கேள்வி: நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விடாமல் ஏன் இட ஒதுக்கீடு பற்றி எழுதுகிறீர்கள்? பதில்: ஆளானப்பட்ட Avengers Supermanஆக இருந்தாலும் கூட ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை, ஆளுக்கு ஒரு கிரகம் என்று பிரித்துத் தான் சண்டை போடுகிறார்கள். நடப்பது ஆரிய திராவிடப் போர். இதில் பல போர் முனைகள் உள்ளன. ஒரு ஆள் ஒரு நேரத்தில் ஒரு களத்தில் போராடுவது தான் புத்திசாலித்தனம். இந்தியப் பொருளாதாரம் அதளபாதாளத்தில் இருக்கிறது. அதில் இருந்து திசை திருப்ப காஷ்மீர் […]
பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள்.
பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். இதற்கு முன்பு Associate Professorஆகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தான் Professor பணிக்குத் தேர்வாவார்கள். இந்தப் பணிகளுக்குப் பரிந்துரைக்கும் சம்பளம் என்ன என்பதையும் படத்தில் காணலாம். ஏற்கனவே மாதம் 2 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் Associate Professor ஒருவர் எப்படி ஏழை ஆவார்? அதெல்லாம் தெரியாது பாஸ்! மோடி சொன்னார்! நாங்க உயர் சாதியினருக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்போம்! இனி எல்லா […]
OBC/BC/MBCக்கள் ஏன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார்கள்?
கேள்வி: OBC/BC/MBCக்கள் ஏன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார்கள்? தலித்களைச் சுட்டாமல் தங்கள் சாதிக்கு நேர்ந்த இழிவுகளைச் சுட்டி இட ஒதுக்கீடு கோர முடியாதா? பதில்: ஏதோ திராவிடத்துக்கு இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று தெரியாதது போலவும், இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து தலித்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு, அதைச் சுட்டி OBCக்கள் இட ஒதுக்கீடு கேட்பதாக நினைப்பதாலுமே இந்தக் குழப்பம். திராவிடம் எப்போதும் பார்ப்பனர் எதிர் பார்ப்பனர் அல்லாதார் என்றே அரசியலைக் கட்டமைத்தது. தலித்கள் உட்பட்ட […]
இதற்குப் பெயர் தான் மனுநீதி!
கல்லூரிப் படிப்பு முடித்த 10% பிராடு ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு விண்ணப்பக் கட்டணங்களைப் பாதியாக்குவார்கள். உண்மையிலேயே ஏழைகள் நிறைந்துள்ள SC/STகள் பத்தாவது படிப்பதற்கே தேர்வுக் கட்டணத்தை 24 மடங்கு கூட்டுவார்கள். இதற்குப் பெயர் தான் மனுநீதி! https://timesofindia.indiatimes.com/home/education/news/cbse-hikes-exam-fees-for-sc/st-pupils-by-24-times-general-category-to-pay-double/articleshow/70629330.cms?fbclid=IwAR1yvC3YEu2KJJcx_IEe7mU7oEgdwfbmJi1ZB3JQ8AvCRyIcwspdcHl3jnw பார்க்க… முகநூல் உரையாடல்
சில புதிய புரட்சியாளர்கள் கோருவது என்ன?
சில புதிய புரட்சியாளர்கள் கோருவது என்ன? திராவிட இயக்கத்தவர்கள் திருமாவைக் கொண்டாட வேண்டுமாம். ஆனால், ஆ. ராசாவைக் கொண்டாடக் கூடாதாம்! என்ன ஒரு வேடிக்கை! தலித்களுக்குத் திராவிட இயக்கத்தில் வளர்ச்சியும் இல்லை வாய்ப்பும் இல்லை என்ற மாயையை உருவாக்கி, தலித்களைப் பொது நீரோட்ட அரசியலில் இருந்து தனிமைப்படுத்துவது தான் உங்கள் Agendaவா? இல்லை, அவர்களை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில் எல்லா சாதிக் கட்சிகளையும் போல் அதிகாரப் பேரம் நடத்துவது தான் உங்கள் செயல் திட்டமா? இதே […]
மோடி அரசில் 89 செயலாளர்கள்
மோடி அரசில் 89 செயலாளர்கள். இவர்களுள் SC – 1ST – 3OBC – 0 இட ஒதுக்கீட்டின் மூலம் எல்லோரும் பணியில் சேரும் போது, உயர் சாதியினர் மட்டும் உயர் பொறுப்புகளைப் பெறுவது எப்படி? இது தான் சாதிப் பாகுபாடு. அதனால் தான் பதவி உயர்வுகளில் கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால், நடப்பது என்ன? ஏற்கனவே உயர் சாதியினர் ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுத்துள்ள அதிகாரத்தில் அவர்களுக்கு மேலும் 10% இடத்தை உறுதி […]
கழகத்தோழர்களுக்கு நான்கு முக்கிய குணங்கள் இருக்க வேண்டும்.
கழகத்தோழர்களுக்கு நான்கு முக்கிய குணங்கள் இருக்க வேண்டும். ஒன்று, எதையும் சகித்துக்கொள்ளும் பொறுமைக் குணம். மற்றது எதற்கும் கோபம் கொள்ளாமல் இருப்பது. இன்னொன்று எதற்காகவும் சலித்துக்கொள்ளாமல் இருப்பது. நான்காவது எதற்கும் வேதனைபட்டுக்கொள்ளாமல் இருப்பது. – அறிஞர் அண்ணா. நமது பாதை, மன்றம் ஆண்டு மலர் 1962. பார்க்க… முகநூல் உரையாடல்
அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்! அது என்ன காரணம் என்று அஞ்சல் துறை தெளிவுபடுத்த வேண்டும். SC, ST, OBC வேலை எதுவும் இப்படி காலியாக இல்லை. ஒரு வேளை, அரிய வகை ஏழைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ? இனிமேல் பிறந்து வரப் போகிற முன்னேறிய சாதியினர் யாரும் 42க்கு கீழாக மதிப்பெண் பெற்றால் தருவார்களோ? பார்க்க… முகநூல் உரையாடல்
பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவு
பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவைப் பாரீர்! SCஐ விடக் குறைவான மதிப்பெண், 196/720 நீட் மதிப்பெண் பெற்ற அரிய வகை ஏழைகளுக்கு எல்லாம் இடம் உறுதி! அதாவது, அனிதாவுக்குக் கிடைக்காத இடம் ஸ்வாதிக்குக் கிடைக்கும்! பார்க்க… முகநூல் உரையாடல்