என் கருத்தைச் சொன்னால், 2 பேர் திட்டுவார்கள். 3 பேர் சிரிப்பார்கள். 5 பேர் புரிந்து கொள்வார்கள். நான் பேசினால் எனக்கு அந்த 5 பேர் இலாபம். ஏச்சுக்கும் நகைப்புக்கும் அஞ்சி பேசாமல் இருந்தால் 5 பேர் நட்டம். நம் கருத்துகளைச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களுக்காக நாம் பேச வேண்டுமே தவிர, என்றுமே இந்தப் பக்கம் வராமல் போகிறவர்களுக்காக அமைதியாக இருத்தல் ஆகாது. எனக்கு இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. பார்க்க – […]
BC+MBC மக்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு?
கேள்வி: SC மக்களை ஒடுக்கியவர்கள் தானே BC+MBC மக்கள். இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு? பதில்: BC+MBC மக்கள் என்றால் சின்னக் கவுண்டர் படத்தில் வருகிற விஜயகாந்த், எஜமான் படத்தில் வருகிற ரஜினி, மறுமலர்ச்சி படத்தில் வருகிற மம்முட்டி, தேவர் மகன் படத்தில் வருகிற கமல் போல் பண்ணையார்கள் மட்டும் தானா? 5 முறை முதல்வர் ஆன பிறகும் சாதியின் காரணமாக இழிவு படுத்தப்படுகிறாரே கலைஞர்.. அவரும் ஒரு MBC தான். துணிகளை வெளுக்கிறவர்கள், முடி திருத்துகிறவர்கள் […]
இட ஒதுக்கீடு என்பது ஒரு குழு அடையாளத்துக்குத் தரப்படுவது
இட ஒதுக்கீடு என்பது ஒரு குழு அடையாளத்துக்குத் தரப்படுவது. தனி நபருக்குத் தரப்படுவது அன்று. மகளிர் பேருந்தில் அனைத்து மகளிரும் ஏறலாம். பணக்கார மகளிர் எல்லாம் மகளிர் பேருந்தில் ஏறாதீர்கள் என்று சொல்ல முடியுமா? தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வந்தால், ஜெயலலிதா, கனிமொழி, இந்திரா காந்தி எல்லாம் அதில் போட்டி போடாதீர்கள் என்று சொல்ல முடியுமா? தேவர் மகன் திரைப்படத்தில் கமல் வெளிநாட்டுக்கு எல்லாம் போய் படித்து வந்தார். ஆனால், அவரது பங்காளிகள் ஊரில் மண்ணை […]
போராட்டம் என்றால் ஒரு நியாயம் வேண்டாமா?
தெரியாத ஊருக்குப் போகிறீர்கள். ஆட்டோ / taxi ஓட்டுநர் கொள்ளைக் காசு கேட்பதாகத் தோன்றுகிறது. உடனே Google Maps பார்க்கிறீர்கள். ஓ, இந்த இடத்தில் இருந்து நான் போக வேண்டிய இடம் இவ்வளவு தொலைவில் இருக்கிறதா? சரி, கிலோமீட்டருக்கு இவ்வளவு என்று வைத்துக் கொண்டாலும் இவர் கேட்பது நியாயம் தான் என்று தோன்றினால் வண்டியில் ஏறுவீர்கள். இல்லாவிட்டால், நடையைக் கட்டுவீர்கள். அது போல், சமூக முன்னேற்றத்திற்கான கோரிக்கைகளை வைப்பவர்கள், தங்கள் கோரிக்கையின் கணக்கீட்டு அடிப்படை என்ன, ஏரணம் […]
SC/ST மக்கள் தொகைக்கு 100% இட ஒதுக்கீடு
ஏ திராவிடக் கட்சிகளே! 1951ல் 25% இருந்த BC ஒதுக்கீடு 1980ல் 50% ஆக்கினாயே! அதே போல், ஏன் 1951ல் 16% இருந்த SC/ST ஒதுக்கீட்டை மேலும் கூட்டவில்லை? பதில்: தமிழ்நாட்டில் அதற்கு மேல் SC/ST மக்கள் தொகை இல்லை. 1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி SC – 18.35% ST – 1% அதற்கு ஏற்ப 1989ஆம் ஆண்டு, SC – 18%, ST – 1% என்று கலைஞர் அவர்கள் இட ஒதுக்கீட்டை […]
பட்டியல் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் திமுகவும்
1954. தமிழ்நாட்டில் SC/ST இட ஒதுக்கீடு 16%.1971. சட்டநாதன் ஆணையம் பரிந்துரையை ஏற்று கலைஞர் அதனை 18% ஆக உயர்த்தினார். 1989. SC/ST என்று ஒன்றாக இருந்த தொகுப்பைப் பிரித்து, கலைஞர் ST மக்களுக்கு 1% தனி இட ஒதுக்கீடு கொடுத்தார். இதன் மூலம் ST மக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாததால், SC மக்களுக்கும் கூடுதலாக 1% இடம் கிடைத்தது என்றும் கருத இடமுண்டு. 2009. SC மக்களிலேயே கடைநிலையில் இருந்த அருந்ததியர் […]
20 வயது தாண்டியும் தரையில் பாயில் படுத்துத் தான் தூங்கினேன்,
20 வயது தாண்டியும் தரையில் பாயில் படுத்துத் தான் தூங்கினேன், சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தேன், தீபாவளிக்கு மட்டும் தான் இட்லி சுடுவோம், வருசத்துக்கு ஒன்றிரண்டு முறை எங்காவது பயணம் போகும் போது தான் Hotel போய் சாப்பிடுவோம், திருவிழா கடையில் மட்டும் தான் பொம்மை வாங்குவோம், பிறந்த நாள், தீபாவளிக்கு மட்டும் தான் புதுத்துணி வாங்குவோம், என்பதை எல்லாம் என் மகள்களால் நம்ப முடியவில்லை. இனி நம்புவார்கள். பழைய ஏழ்மையான இந்தியாவை மோடிஜீ மீட்டெடுத்துவிட்டார்! பார்க்க… முகநூல் […]
கலைஞரின் பராசக்தி வெற்றி பெற்று ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தியது.
புராண படங்களாக வெளிவந்த காலத்தில் கலைஞரின் பராசக்தி வெற்றி பெற்று ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தியது. அதற்குப் பிறகு கலைஞரைப் போலவே பேச, எழுதத் தலைப்பட்டார்கள். ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக உள்ள நிலை என்ன? வெகுமக்களின் அரசியல் மலினமானது, அதுவும் தரமான இலக்கியம் என்றால் திராவிட அரசியல் பேசவே கூடாது, திராவிடத்தைத் திட்டுவதே காவியம், ஓவியம் என்று நம்மைக் காயடித்து வைத்திருந்திருந்தார்கள். இன்று நிலவரம் என்ன? எப்படி தேர்வுக்குத் தயார் ஆகிற மாணவர்கள் சென்ற ஆண்டு […]
Ashok Leyland தொழிற்சாலைகள் மாதம் பாதி நாள் மூடல்.
லாரி விற்பனை சரிவு. Ashok Leyland தொழிற்சாலைகள் மாதம் பாதி நாள் மூடல். ஆலை முதலாளிகள், தொழிலாளிகளைக் கட்டி அணைத்து, தடவி, ஆறுதல் சொல்லும் சடங்கு, நாளை மாலை 6 மணிக்கு ஊர் நடுத்தெருவில் நடைபெறும் என்று சார்ந்தோர் அனைவருக்கும் அறிவித்துக் கொள்கிறோம்.
சென்னை தான் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி.
உங்களுக்குத் தெரியுமா? சென்னை தான் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி. அதற்கு முன்பு இருந்தது இலண்டன் மட்டுமே! (செய்தி மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்