சாதிப் படியமைப்பில் கீழே இருப்பவர்கள் ஏன் தங்களுக்கு மேல் உள்ள சாதிகள் போல் பேச, உடுத்த, நடக்கத் தொடங்குகிறார்கள்? எளிய எடுத்துக்காட்டு: பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றுக் கொள்வது. இந்தப் போக்குக்குப் பெயர் சமசுகிருதமயமாக்கம். இதற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்கள் ஏன் அதையே பழித்துப் பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்குக் கூட இதில் விடை இருக்கலாம். தகவல்: Sanskritisation சமசுகிருதமயமாக்கம் பார்க்க – முகநூல் உரையாடல்
நீதி
கன்றை இழந்த பசுவுக்கு ஈடாக தன் மகனையே கொல்ல ஆணையிட்டான் மனுநீதிச் சோழன் என்கிறார்கள். ஒரு உயிர் போனதற்கு நட்ட ஈடும் தண்டனையும் வழங்கினால் போன உயிர் திரும்ப வருமா என்கிறார்கள். நீங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கல்வியும் மானமுள்ள வேலையும் மறுத்ததற்கு நீதியாக, உங்களைப் படிக்கக் கூடாது என்றோ சிறந்த வேலைகளுக்குச் செல்லக்கூடாது என்றோ கீழான வேலைகளைச் செய் என்றோ உரிமைகளைப் பறித்தோமா? அதே கல்வியையையும் வேலையையும் தாருங்கள் என்று எங்கள் உரிமைகளைத் தானே கேட்கிறோம். […]
17ஆம் நூற்றாண்டில் 100% இட ஒதுக்கீடு
உங்களுக்குத் தெரியுமா? 1610. விஜயநகர நாயக்க மன்னர் ஆட்சியின் கீழ் மதுரையில் எண்ணற்ற கல்லூரிகள் இருந்தன. இக்கல்லூரிகளுள் 10,000க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அனைவரும் பார்ப்பனர்கள். வேறு யாருக்கும் உயர் அறிவு பெறும் உரிமை இல்லை என்று கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிறுவி உதவித் தொகையும் வழங்கி வந்தார்கள். ஆதாரம்: சத்தியநாதையர் எழுதிய பதினேழாம் நூற்றாண்டில் தமிழகம், பக்கம் 177. Laerzio’s letter of 1610 notes […]
சோழர் காலத்தில் 100% இட ஒதுக்கீடு
உங்களுக்குத் தெரியுமா? சோழர் காலத்தில் உண்டு உறைவிட விடுதிகளுடன் முதுநிலைக் கல்வி வழங்கிய கல்லூரிகள் இருந்துள்ளன. மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் உண்டு. பேராசிரியர் சம்பளம் இன்றைய மதிப்பில் 2.32 இலட்சம் ரூபாய். வேலை, படிப்பு இரண்டுக்கும் 100% இட ஒதுக்கீடு. யாருக்கு? யாருக்கோ! ஆதாரம்: People from non-brahmin communities were not encouraged to join major educational institutions. This practice had been prevailing for several centuries. …All the […]
இட ஒதுக்கீடு இல்லாத இன்ப உலகம்
கேள்வி: இட ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால் பொறியியல் படித்த எனக்கு மருத்துவ இடம் கிடைத்து இருக்குமே? பதில்: இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், இன்னொரு சாதியில் உங்கள் cut-off மதிப்பெண்ணுக்கு கீழே உள்ளவர் இடம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இப்போது உங்களுக்கு இருக்கும் இடத்தையும் உங்களுக்கு மேலே உள்ளவர் பறித்து இருப்பார். இட ஒதுக்கீடு இல்லாத உலகில் கல்லூரியும் இருக்காது. வெளிப்படையான cut-off மூலம் அனுமதி நடத்தும் Single Window Systemம் இருக்காது. இந்த முறைகள் […]
Creamy Layer அயோக்கியத் தனம்
ஒரு புறம் Creamy layerல் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அகற்றி விடுகிறார்கள். இன்னொரு புறம், இட ஒதுக்கீட்டின் மூலம் போட்டி இடுபவர்களுக்குத் தகுதி இல்லை என்று விரட்டி விடுகிறார்கள். பிறகு, தகுதியான ஆள் இல்லை என்று சொல்லி அனைத்து இடங்களையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி ஆக்கிரமிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! பார்க்க – முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடும் பெண்களும்
இட ஒதுக்கீடு போதும் என்று நினைப்பவர்களே, உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் ISRO வில் ராக்கெட் விட்டுக் கொண்டிருக்கிறார்களா? பார்க்க – முகநூல் உரையாடல்
66 தலைமுறைகள்
2000 ஆண்டுகளாகச் சாதி இருந்திருக்கிறது என்று மிக எளிமையாக எண்களைக் கடந்து விடுகிறோம். 30 ஆண்டுகள் ஒரு தலைமுறை என்று கணக்கு வைத்தால் கூட 2000 ஆண்டுகள் என்பது 66 தலைமுறைகளைத் தாண்டும். நான் இப்போது தான் இரண்டாவது தலைமுறையாகப் படிக்கிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்
படிக்கவே விடாமல் வேலையில் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து என்ன பயன்?
உங்களுக்குத் தெரியுமா? 2008 வரை, நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களான IIT, IIM, AIIMS, மத்தியப் பல்கலைகளில் 27% OBC இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. வெறும் 10 ஆண்டுகளாகத் தான் OBC மாணவர்களுக்கு இந்தக் கல்வி நிறுவனங்களில் கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதுவும் creamy layer மாணவர்கள் சேர முடியாது. ஆனால், ஏதோ 10,000 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு வழங்கப்படுவது போல் அங்கலாய்த்து “போதும் இட ஒதுக்கீடு” என்று முழங்குவார்கள். IIMகளில் பணிபுரியும் பேராசிரியர்களில் மூன்றில் ஒருவர் […]
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இட ஒதுக்கீடு நிலவரம்
சமூக நீதியின் தொட்டிலாம் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே குந்த வைத்து உட்கார்ந்திருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு நிலவரம். Total employees 15085, out of which 7868 are from General category i.e. 52.2% employees at NLC India Limited are from General. If you notice different Groups, you can find how SC/ST/OBCs are mostly in the lower Groups/Levels. In Group A there […]