கேள்வி: இட ஒதுக்கீட்டால் தகுதி, தரம் பாதிக்கப்படாதா? பதில்: இந்த தகுதி, தரம், திறமை என்பதே ஒரு ஏமாற்று வாதம் என்று அறிஞர் அண்ணா, அம்பேத்கர் இருவருமே தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். அம்பேத்கர் ஒரு படி மேலே போய் தகுதி பற்றிய பேச்சு ஒரு fetish என்கிறார்! எப்படி? ஒரு பேருந்தை ஓட்ட ஆள் வேண்டும் என்றால் அவரிடம் பேருந்து ஓட்டுநருக்கான உரிமம் இருந்தால் போதும். மைக்கேல் சூமாக்கர் தான் உலகத்திலேயே சிறந்த ஓட்டுநர் என்று நாம் அவரை அழைத்து […]
அணையை உடைக்கிறார்கள். வெள்ளம் என்ன செய்யும் என்பதை அறியாமல்!
1949. நீதிக் கட்சி நடைமுறைப்படுத்தி இருந்த Communal G.O. என்ற இட ஒதுக்கீட்டு முறையை நீதிமன்றத்தில் தோற்கடிக்கிறார்கள் பார்ப்பனர்கள். அறிஞர் அண்ணா சொல்கிறார். “அணையை உடைக்கிறார்கள். வெள்ளம் என்ன செய்யும் என்று அறியாமல்” அன்று அவர் எழுதிய கட்டுரை நீட் தீர்ப்புக்குப் பிறகான காலகட்டத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது. வரலாறு திரும்புகிறது. இங்கு எதுவுமே புதிதில்லை. தகுதி, தரம், திறமை என்பது ஈராயிரம் ஆண்டு கால மோசடி. ஆதாரம் – திராவிட நாடு, 27-2-1949 கட்டுரை, சாதி அடிப்படையில் […]
திராவிடர் படித்த பள்ளிகள்
கேள்வி: அந்தக் காலத்தில் நம்மை எல்லாம் படிக்க விட வில்லை என்பதை நம்ப முடியவில்லையே? ஒரே ஒரு பள்ளிக் கூடத்தில் கூடவா திராவிட மாணவர்கள் கூடுதலாகப் படிக்கவில்லை? பதில்: படித்தார்கள். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் மட்டும். ஆதாரம் – கல்வி நீரோடை, இட ஒதுக்கீடு பற்றி அறிஞர் அண்ணா 30.06.1946 அன்று திராவிட நாடு இதழில் எழுதிய கட்டுரை. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஏன்? என்னும் நூலில் இருந்து. பார்க்க – முகநூல் உரையாடல்
துரத்தும் தீண்டாமை. தீட்டான சிலை!
1970. ஜகஜீவன் ராம் என்ற இந்திய ஒன்றிய அமைச்சர் முன்னாள் உத்திரப் பிரதேச முதல்வரின் சிலையைத் திறந்து வைக்கிறார். ஜகஜீவன் ராம் பட்டியல் இனத்தவரைச் சேர்ந்தவர் என்பதால் அவர் திறந்து வைத்த சிலைக்குத் தீட்டு கழிக்கப்பட்டது. இது தான் இந்தியா. ஒருவர் அமைச்சர் ஆனாலும் IAS அதிகாரி ஆனாலும் சாதியும் தீண்டாமையும் அவரைத் துரத்தும். இதனால் தான் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. “Untouchability is deeply ingrained in us. An individual can […]
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு ஏன்?
கேள்வி: கல்வியில் இட ஒதுக்கீடு கொடுத்தால் போதாதா? ஏன் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு? பதில்: ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் தலைகீழாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அனைத்துச் சமூகங்களுக்கும் வேலை கொடுத்து அதிகாரத்தைப் பகிர வேண்டும் என்பதற்காகத் தான் தொடக்கப் புள்ளியாக கல்வியில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. 1900களில் படித்த ஆளே இல்லை என்று தான் எல்லா வேலைகளையும் ஆதிக்கச் சாதிகள் சுருட்டினார்கள். இப்போது அனைவரும் படித்து வந்த பிறகு, தகுதியான ஆட்கள் இல்லை என்று […]
இட ஒதுக்கீடு – தமிழர் இந்தியாவுக்காக போராடிப் பெற்ற உரிமை
உங்களுக்குத் தெரியுமா? 1921. இந்தியாவிலேயே முதன்முறையாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று இட ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றியது. இதைச் செய்தது மதராஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சி. திராவிட இயக்கத்தின் முன்னோடி. 1951. இட ஒதுக்கீட்டுக் கொள்கை செல்லும் என்பதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாகத் திருத்தப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சம்பகம் என்ற பார்ப்பனர் ஒருவர் இட ஒதுக்கீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்றார். பெரியார் இந்தத் தீர்ப்புக்கு எதிராக […]
வேலையும் சாதியும்
இட ஒதுக்கீடு கொடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைக் கொடுக்க மாட்டார்கள். மலம் அள்ளுவதைத் தடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க மாட்டார்கள். அவர்கள் வேலையை உனக்குத் தர மாட்டார்கள். உன் வேலையைச் செய்ய அவர்கள் வர மாட்டார்கள். இது தான் சாதி. பி.கு. போதுமான தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்று இந்தச் செய்தி கூறுகிறது. எனவே, தமிழகத்தில் இருந்து மட்டும் சாவுகள் கூடுதலாக இருப்பதாக படம் காட்டுகிறது. பார்க்க – முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு – இல்லங்களில் உரையாடல் தேவை
இட ஒதுக்கீடு தங்களுக்கு எதிரானது என்பதை ஆதிக்கச்சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சொல்லித் தருகிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் தான் நாம் முன்னுக்கு வந்தோம் என்பதை பயன் பெற்ற சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. இல்லாத நாட்டைக் கட்டியாண்ட பெருமையைத் தான் சொல்லித் தருகிறோம். இட ஒதுக்கீட்டைப் பற்றிய பொது உரையாடல் இப்படித் தான் கட்டமைக்கப்படுகிறது. பார்க்க – முகநூல் உரையாடல்
YouRTI
கல்வி, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு தொடர்பாக RTI பதிய நினைப்பவர்கள் https://yourti.in/ பயன்படுத்தலாம். உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் கேள்வி கேட்கலாம். பெறும் பதில்களை அதே தளத்தில் பொதுப் பார்வைக்கும் வைக்கலாம். பார்க்க – முகநூல் உரையாடல்
உரிமைக்குரல் எழுப்பத் தயங்குவது ஏன்?
Overஆக சமூக நீதி பேசினால் எங்கே நம்மை ஒடுக்கப்பட்ட சாதி என்று நினைத்து விடுவார்களோ என்று நீங்கள் தயங்கியதுண்டா? அதே போல், சமூக நீதியை எதிர்த்துப் பேசினால் தான் நம்மை தகுதி, திறமை உடையவன் என்று நினைப்பார்கள் என்று ஒருவர் எண்ண வாய்ப்பிருக்கிறதா? பொதுப்பிரிவுப் போட்டியில் தேர்வானவர்கள் ஒன்றுக்குப் பல முறை “நான் மெரிட், நான் மெரிட்” என்று அழுத்திச் சொல்வது கூட “நீ கோட்டா, உனக்குத் தரம் இல்லை” என்ற மற்றவர்களைப் பார்த்துச் சொல்லும் தொனி […]