• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

இட ஒதுக்கீடு – பலன் பெறுவது யார்?

October 3, 2018

உங்களுக்குத் தெரியுமா? தமிழகத்தில் கிறிஸ்தவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள முறையிலேயே தங்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைப்பதால் இந்தச் சட்டம் வேண்டாம் என திரும்பப் பெற கேட்டுக் கொண்டார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப 100% இட ஒதுக்கீடு அளித்தால், அதை முதலில் எதிர்ப்பவர்கள் ஆதிக்கச் சாதிகளாகத் தான் இருப்பார்கள். ஏன் எனில், தற்போது இருக்கும் முறையிலேயே அவர்கள் தான் கூடுதலாகப் பயன் பெறுகிறார்கள். அனுபவிப்பதையும் அனுபவித்து விட்டு “இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டோம், தரம் போனது, […]

Filed Under: இட ஒதுக்கீடு

DRDO இட ஒதுக்கீடு மோசடி

October 3, 2018

DRDO விஞ்ஞானிகள் வேலைவாய்ப்பு 62% ஆதிக்கச் சாதிகள் கையில். இது Group A Gazetted officer நிலை உடைய பணி. வழக்கம் போல் OBCக்கு அல்வா! ஆதாரம் – DRDO பணியாளர் விவரங்கள் ஆனால், ஆதிக்கச் சாதிகள் ஆக்கிரமித்து இருக்கும் இந்த நிறுவனத்தின் தகுதி என்ன? தொடர்புடைய செய்திகள் காணுங்கள்: DRDO has much to answer for its poor performance Is DRDO really incompetent? What numbers say Shut Down Laboratories […]

Filed Under: இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடும் பொதுப்புத்தியும்

October 3, 2018

ஒரு பாலம் இடிந்து விழுந்தால், கோட்டாவில் படித்து வந்த பொறியாளர்கள் தரம் இல்லை என்பார்கள். ஒரு ராக்கெட் கடலில் விழுந்தால், ISRO விஞ்ஞானிகள் என்ன சாதி என்று யாரும் கேட்க மாட்டார்கள். இத்தனைக்கும் திருப்பதிக்குப் போய் சாமி கும்பிட்டு வேறு ராக்கெட் அனுப்புவார்கள். பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் யார்?

October 3, 2018

இந்தியா விடுதலை பெற்றதில் இருந்து ஒரு ரிசர்வ் வங்கி கவர்னர் கூட SC/ST/OBC சாதிகளைச் சேர்ந்தவர்கள் இல்லை என்கிறார்கள். இந்தத் தகவல் சரியா என்று உறுதிப்படுத்திச் சொல்லுங்கள். இது தான் இன்றைய வீட்டுப் பாடம். தகவல் – List of Governors of Reserve Bank of India பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

100% இட ஒதுக்கீடு நிறைவேற்றலாமா?

October 3, 2018

கேள்வி: சாதி வாரி கணக்கெடுத்து 100% இட ஒதுக்கீடு நிறைவேற்றலாமே? பதில்: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டின் சாதி வாரி மக்கள் தொகை விவரம் பின்வருமாறு: * பிற்படுத்தப்பட்ட சாதிகள் – 68% * பட்டியல் இனத்தவர் – 20.01% * பட்டியல் இனப் பழங்குடிகள் – 1.10% எஞ்சி இருக்கும் முன்னேற்றப்பட்ட சாதிகள் = 10.89% இந்த 10.89% இட ஒதுக்கீட்டை விட இப்போது இருக்கும் 31% பொதுப்பிரிவு இட ஒதுக்கீடு முன்னேற்றப்பட்ட […]

Filed Under: இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு – வாசிப்புப் பட்டியல்

October 3, 2018

* நிறைய பேர் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதினால் பிற மொழி நண்பர்களுக்கு விளக்க உதவியாக இருக்கும் என்றார்கள். Mohan Vanamalai என்று ஒருவர் இது தொடர்பாக Quoraவில் எழுதிக் குவித்திருக்கிறார். ஒவ்வொரு விடையும் ஒரு தோட்டாவின் கூர்மையோடு பாய்கிறது. தவற விடாதீர்கள். * சமூகநீதி வரலாற்றைச் சுமக்கும் தமிழ்நாடு கடந்துவந்த பாதை – இட ஒதுக்கீடு வரலாறு * இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதன் அடிப்படையை விளக்கும் இரண்டு Power point கோப்புகள். கட்டாயம் […]

Filed Under: இட ஒதுக்கீடு

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தரலாமே?

October 3, 2018

கேள்வி: பொருளாதார அடிப்படையில் ஏன் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது? பதில்: ஒருவரிடம் பணம் இல்லை என்றால் அவருக்கு வங்கிக் கடன், கல்வி உதவித் தொகை தாருங்கள். ஏன் அவர் வாழ்நாளுக்கும் கல்வி, மருத்துவம், உணவு, இருப்பிடம் அனைத்தும் இலவசம் என்று கூட திட்டம் கொண்டு வாருங்கள். வேலை பார்க்க சம்பளமே தராவிட்டாலும் கூட பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு பார்த்து யாருக்கு கல்வி, வேலை, பதவி உயர்வு தர மறுக்கிறார்களோ அவர்களின் உரிமையைப் பெற்றுத் தரும் போராட்டம் […]

Filed Under: இட ஒதுக்கீடு

Communal G.O.

October 2, 2018

உங்களுக்குத் தெரியுமா? இந்திய விடுதலைக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 100% இட ஒதுக்கீடு இருந்தது. அதில் பார்ப்பனர்களுக்கு 17% தனி ஒதுக்கீடு இருந்தது! இந்த இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இல்லாமல் இசுலாமியர், கிறிஸ்தவர்/ஆங்கிலோ இந்தியர், இந்துக்கள் என்று வகுப்பு வாரியாக (Communal G.O) அமைந்திருந்தது. . 1947ல் தான் மதராஸ் மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத் தனியாக 14% இட ஒதுக்கீடு அளித்தார்கள். ஆனால், 1927 முதலே மக்கள் தொகையில் 3% மட்டுமே இருந்த […]

Filed Under: இட ஒதுக்கீடு

ISRO இட ஒதுக்கீடு மோசடி

October 2, 2018

நாட்டின் உயர் ஆய்வு நிறுவனமான ISRO வின் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு மோசடி! பொதுப்பிரிவு இடங்களை மொத்தமாகச் சுருட்டும் ஆதிக்கச் சாதிகள்! அதுவும் அவர்கள் அதிகமாக வேலைக்கு எடுக்கும் Electronics, Mechanical, Computer Science பிரிவுகளில் இட ஒதுக்கீடே இல்லை. குறைவான ஆட்களை எடுக்குப் பிரிவுகளில் மட்டும் இட ஒதுக்கீடு. அதிலும் மோசடி. ISROவே இப்படித் தான் என்றால் நாடு முழுக்க இது தான் நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் இட ஒதுக்கீட்டால் தரம் குறைகிறது […]

Filed Under: இட ஒதுக்கீடு

எங்கெல்லாம் இட ஒதுக்கீடு இல்லை?

October 2, 2018

எனக்குத் தெரிந்து, இந்தியாவில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத துறைகள் மூன்று: * இராணுவம் * மாநில உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதி மன்றம் * ISRO போன்ற உயர் அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் வேறு எங்கெல்லாம் இல்லை? பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 28
  • Page 29
  • Page 30
  • Page 31
  • Page 32
  • Page 33
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1566