OBC இட ஒதுக்கீடு கேட்கிறோம். மேலே உள்ள சாதிகள் விட மாட்டேன் என்கிறார்கள். SCA இட ஒதுக்கீடு தருகிறோம். SCAவுக்கு மேலே உள்ள சாதிகள் வழக்கு போடுகிறார்கள். எனக்கு மட்டும் ஒரு கால இயந்திரம் கிடைத்தால், இந்தக் கருமம் பிடிச்ச சாதியை எவன் கண்டுபிடிச்சான் என்று பார்ப்பேன். பார்க்க – முகநூல் உரையாடல்
பெண்கள் முன்னேற்றத்தில் கலைஞரின் பங்கு
13 ஆண்டுகள் ஆட்சி இழந்திருந்த கலைஞர், 1989ல் ஆட்சிக்கு வருகிறார். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆனால், முதலில் பெண்கள் படித்தால் தானே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்? பத்தாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் ஊக்கத் தொகை அறிவித்தார். 30 கிலோ மீட்டர் சுற்றவில் பெண்கள் கல்லூரி ஏதும் இல்லை என்றால், அருகில் உள்ள கல்லூரிகளில் 30% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார். இன்னொரு வீட்டுக்குப் […]
Zero-sum game
போராளி: எங்கள் சாதிக்கு ஏன் ஆண்டுக்கு 2% கூட இட ஒதுக்கீட்டை உயர்த்தவில்லை? புள்ளிவிவரம்: மேடம், தமிழ்நாட்டுல உங்க சாதி இருக்கிறதே 20% தான். ஆண்டுக்கு 2% கொடுத்தால் தமிழ்நாட்டில் இருக்கிற 100% மக்கள் தொகை கணக்கையும் தாண்டிப் போகுது. போராளி: ஓ! அப்படியா! சரி, ஆண்டுக்கு 2% சொன்னேன்ல…அந்த ஆண்டு வேண்டாம். வெறும் 2% ஏற்றிக் கொடுக்கச் சொல்லு… பார்க்க – முகநூல் உரையாடல்
இல்லாதவர்களுக்கே இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை
தமிழ்நாட்டு அரசுப் பணிகளில், கல்வியில் SCA பங்கேற்பு போதவில்லை என்றார்கள். ஆகவே கலைஞர், SC இடங்களில் முதல் இடம் SCAக்கு என்று முன்னுரிமை கொடுத்தார். தோசை மாவில் உப்பு இல்லை என்றால் உப்பைத் தானே முதலில் சேர்க்க வேண்டும்? சமைக்கத் தெரிந்த யாராவது, உப்பு போதவில்லை என்று, மீண்டும் மாண்டும் மாவையும் தண்ணீரையும் கலக்கிக் கொண்டே இருப்பார்களா? யாருக்கு இடம் போதவில்லையோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் தானே அவர்கள் பங்கேற்பு உரும்? பார்க்க – முகநூல் உரையாடல்
ஒன்றிய அரசுப் பணிகளில் 12% OBC ஒதுக்கீடு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது
அரசு தண்ணீர் கொடுக்கிறது. எங்களுக்குத் தண்ணீர் வேண்டாம், பால் கொடு என்று கேட்கிறோம். அரசு பால் கொடுப்பதற்குப் பதில், ஏற்கனவே உள்ள தண்ணீரில் ஒவ்வொரு சொட்டு சொட்டாகப் பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது. அதே சட்டியில் வண்டி வண்டியாகத் தண்ணீரையும் ஊற்றிக் கொண்டிருக்கிறது. அது என்றைக்குப் பாலாக மாறுவது? 27% OBC இட ஒதுக்கீடு வந்து 30 ஆண்டுகள் ஆகியும் இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் 12% மட்டுமே OBCக்கள் உள்ளனர். ஏன் இந்த நிலை? புதிதாக உருவாகிற […]
உள் இட ஒதுக்கீடுகள் தந்த கலைஞர்
இட ஒதுக்கீட்டின் பயன் அனைத்துச் சாதிகளுக்கும் கிடைக்க வேண்டும், அதனைக் குறிப்பிட்ட சாதிகள் மட்டும் அவர் தம் மக்கள் தொகைக்கு மீறி பெற்றுக் கொள்ளக் கூடாது என்று, தொடர்ந்து உள் ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்தியது, திராவிட முன்னேற்க கழகமே! SC/ST என்று இருவருக்கும் பொதுவாக இருந்த ஒதுக்கீட்டை SC-18% தனி, ST-1% தனி என்று புதிதாக உருவாக்கியது. BC என்று பொதுவாக இருந்த 50% இட ஒதுக்கீட்டை BC – 30%, MBC – 20% தனி என்று […]
3% மக்கள் சாப்பிடும் 90% வாய்ப்புகள்
3% மாணவர்களுக்காக 50% நிதியைச் செலவழிக்கிறது இந்திய அரசு. இதே போல் வேறு சில 3% ஆட்கள் மட்டுமே கல்வி, அரசுப் பணி இடங்களை ஆட்டையைப் போட வேண்டும் என்று தான், 50%க்கு மேல் இட ஒதுக்கீடு கொடுக்காதே என்றும் சொல்கிறது. பார்க்க – தொடர்புடைய செய்தி பார்க்க – முகநூல் உரையாடல்
அரசியல் ஞான சூனியங்கள்
தன்னை உத்தமன், நல்லவன், அறிவாளி என்று காட்டிக் கொள்ள, சிலர் அவ்வப்போது திமுகவையும் திட்டித் தன்னை நடுநிலை என்று காட்டிக் கொள்ளத் தவியாய் தவிக்கிறார்கள். எனக்கு அந்த மயக்கம் இல்லை. எனக்குக் கொஞ்சமாவது அரசியல் அறிவு இருந்திருந்தால், 2G, ஈழம் பிரச்சினைகளில் ஏமாந்து இருக்க மாட்டேன். என் ஒரு ஆள் மூளையை விட, நூறு ஆண்டு கண்ட இயக்கம், 70 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிக்குக் கூடுதல் அறிவு இருக்கும் என்று நம்புகிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்
திட்டமும் சட்டமும்
உழவர் சந்தை, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகங்கள் போன்றவை எல்லாம் திட்டங்கள். அடுத்த கட்சி ஆட்சி வரும் போது காழ்ப்புணர்வின் காரணமாக முடக்கப்படக் கூடும். ஒரு கட்சி தானே கொண்டு வந்த நல்ல திட்டம் என்றாலும் அரசிடம் காசு இல்லை என்றாலும் முடங்கக் கூடும். ஆனால், இந்தச் சட்டம் இருக்கிறதே சட்டம்! அது எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சென்றாலும் நின்று விளையாடும்! நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சட்டங்கள் யாவற்றையும் திமுகவின் அண்ணாவும் கலைஞரும் […]
Reservation is representation
Reservation is representation. It is neither the resolution for all social evils nor the retributions for all historical crimes. பார்க்க – முகநூல் உரையாடல்