ஏன் ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டு பசங்க எந்த உறுத்தலும் இல்லாமல் மொழிபெயர்ப்பதற்குப் (translate) பதில் எழுத்துப்பெயப்பு செய்கிறார்கள் (transliterate) ? ஏன் என்றால், ஒரு புதிய சொல் விடாமல் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டும் என்ற கொலை வெறியுடன் திரியும் ஒரே இந்திய மொழிச் சமூகம் தமிழ்ச் சமூகம் தான். திராவிடத்தைக் காதலித்த நமது தமிழாசிரியர்கள் எப்படியோ இந்த உணர்வை நமக்குள் கடத்தி விட்டிருக்கிறார்கள்! பெரும்பாலான மற்ற இந்திய மொழிகளில் எல்லாம் Bus, bus தான். Telephone, telephone […]
குழந்தைகள் இறப்பு விகிதம்- தமிழ்நாடு
2030 ஆம் ஆண்டு அடைய வேண்டிய இலக்கை 2016 ஆம் ஆண்டே தமிழ்நாடு எட்டி விட்டது. பச்சிளங் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 1000க்கு 12 என குறைத்து விட்டார்கள் நீட் தேர்வு இல்லாமல் படித்து வந்த தமிழக மருத்துவர்கள் . ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக சாதனை புரிந்தாலும் ,தமிழக அரசு மருத்துவர்களின் ஊதியம் என்னவோ பீகார் அரசு மருத்துவர்களை விட மிகவும் குறைவு தான். பார்க்க… முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு – உரைகள் பட்டியல்
இட ஒதுக்கீடு தொடர்பாக யூடியூபில் காணக் கிடைக்குப் பல்வேறு உரைகளை கீழே உள்ள Playlistல் காணலாம்:
Civil Services தேர்வுகளில் இட ஒதுக்கீடு மோசடி
Civil Service தேர்வுகளில் இட ஒதுக்கீட்டு மோசடி பற்றி சங்கர் IAS Academy நிறுவனர் பேசுகிறார். இவர் இட ஒதுக்கீட்டு உரிமைக்குத் தொடர்ந்து குரல் கொடுத்திருக்கிறார் என்று அறிகிறேன். அவரின் அகால மரணத்துக்கு வருந்துகிறேன். பார்க்க – முகநூல் உரையாடல்
சாதி என்னும் பேய்
கேள்வி: சாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் செய் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் சாதி மாறித் திருமணம் செய்தாலும் சாதிச் சான்றிதழ் வாங்குவது பற்றி எழுதுகிறீர்கள். இது முரணாக உள்ளதே? ஏன் இப்படி சாதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? பதில்: சாதி ஒரு பேய். நாம் பேயைப் பிடிப்பதில்லை. பேய் தான் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கலப்புத் திருமணம் செய்வதால் மட்டும் சாதி ஒழியாது. அப்படிப் புரட்சிகரமான எண்ணங்களுடன் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம். பிறகு எப்படித் […]
தமிழர்களின் நான்கு உயிர்நாடிகள்
அறிஞர் அண்ணா தமிழர்களின் உயிர்நாடிகள் என்று நான்கு பிரச்சினைகளைக் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு உலை வைத்தால் திராவிடம் வீழும் என்று எச்சரிக்கிறார். 1. தமிழ் மொழி 2. இட ஒதுக்கீடு 3. இந்து சமய அறநிலையத் துறை 4. நில உச்சவரம்புச் சட்டம் (இது தற்போதைய அரசியல் சூழலில் குறி வைக்கப்படாமல் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், வட நாட்டவர் தமிழ் நாட்டு நிலங்களை வளைத்துப் போடுவதை இந்தக் கோணத்தில் பார்க்கலாம்) மற்ற மூன்றும் தொடர்ந்து குறி வைத்துத் […]
கலப்புத் திருமணக் குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ்
கலப்பு மணம் புரிந்த தம்பதியருக்குப் பிறந்தது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் அதில் தாய் அல்லது தந்தையின் சாதியில் எதுவொன்றை மூத்த குழந்தைக்குச் சூட்டப்பட்டதோ, அதே சாதியே அடுத்தடுத்த குழந்தைக்கும் சூட்டப்பட வேண்டும். மாறாக, ஒரு பிள்ளைக்குத் தாயின் சாதியும், ஒரு பிள்ளைக்குத் தந்தையின் சாதியும் சூட்ட விரும்பினாலும் சூட்ட முடியாது. அவ்வாறில்லாமல் நான் சாதிகளில் நம்பிக்கை இல்லாதவர் எனச் சொல்லிக் கொண்டு, இருவரின் சாதியை விட்டுவிட்டு மூன்றாவது சாதியைச் சூட்டிக் கொள்வேன் எனவும் சொல்ல இயலாது. […]
அருந்ததியர் இட ஒதுக்கீடு
கேள்வி: தமிழக அரசு அருந்ததியர்களுக்கு வழங்கும் உள் இட ஒதுக்கீட்டை எப்படி நடைமுறைப்படுத்துகிறது? பதில்: * SC பிரிவுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 3% இடங்களை அருந்ததியர்களுக்கு (SCA) உள் ஒதுக்கீடாகத் தருகிறார்கள். * கூடுதல் எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர்கள் இருந்தால், 3% உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு மேற்பட்டு உள்ள அனைத்து SC இடங்களுக்கும் அவர்கள் போட்டியிடலாம். அதே போல், போதுமான எண்ணிக்கையில் தகுதியான அருந்ததியர் இல்லாவிட்டால், அந்த இடங்கள் அதே ஆண்டு மற்ற SC சாதியினருக்கு […]
சாதி மாறிய திருமணத்தில் இட ஒதுக்கீடு
கேள்வி: நான் சாதி மாறி திருமணம் செய்தால் இட ஒதுக்கீடு எப்படி நடைமுறைப்படுத்தப்படும்? பதில்: இட ஒதுக்கீடு என்பது சாதியோடு தொடர்பு உடையது. சாதி உங்கள் பிறப்போடு தொடர்பு உடையது. திருமணம் செய்தாலும் உங்கள் சாதி மாறாது. எனவே, சாதி மாறி திருமணம் செய்தாலும் உங்களுக்கு உங்களின் சாதியின் அடிப்படையில் எப்போதும் என்ன இட ஒதுக்கீடு கிடைத்ததோ அதே தான் கிடைக்கும். உங்கள் மனைவி/கணவர் சாதியின் அடிப்படையில் இடம் பெற முடியாது. உங்கள் குழந்தையின் சாதி என்ன […]
தமிழக இட ஒதுக்கீடு விவரம்
தமிழக அரசு தரும் இட ஒதுக்கீடு விவரங்கள் இதோ! * 31% பொதுப்பிரிவு இடங்களுக்கு அனைத்து சாதிகளும் போட்டியிடலாம். பொதுப்பிரிவு இடங்கள் நிரம்பிய பிறகு தான் 69% இட ஒதுக்கீடு தொடங்கும். நீங்கள் BC/MBC/SC/ST ஆக இருந்தாலும் 200/200 பெற்றால், பொதுப்பிரிவிலேயே உங்கள் இடம் கணக்கு வைக்கப்படும். * பொதுப்பிரிவு இடத்தைத் தான் நீங்கள் பெற வேண்டும் என்று கட்டாயம் இல்லை. நீங்கள் 199/200 பெற்று பொதுப்பிரிவு தர வரிசையில் இருக்கிறீர்கள். ஆனால், பொதுப்பிரிவின் கீழ் சென்னை […]