கேள்வி: இலவச பஸ் பாஸ், மிதிவண்டி போன்று கல்விக்கு உதவும் அத்தியாவசிய திட்டங்களை எல்லாம் எதிர்க்கவில்லை. மிக்சி, கிரைண்டர், டிவி எல்லாம் ஆடம்பரம் தானே? அவற்றுக்குச் செலவிடத் தான் வேண்டுமா? பதில்: அம்பானி மனைவி 5 நட்சத்திர விடுதியில் உண்பது ஆடம்பரம். ஆனால், அம்பானி மனைவி சமையலுக்கு மிக்சியும் கிரைண்டரும் பயன்படுத்துவது அத்தியாவசியம். ஆட்டாங்கல்லுக்குச் செலவிடும் நேரத்தில் அவர் பயனுள்ள இன்னும் பல வேலைகளைச் செய்ய முடியும். நம் அம்மாக்களுக்கும் இதே வசதிகள் கிடைத்தால் அவர்கள் நேரத்துக்கு […]
திராவிட அரசின் மக்கள் நலத் திட்டங்கள்
எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது.* கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார்.* கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், பெண்கள் உள்ள எங்கள் கிராமவாசிகளுக்கு உலக அறிவு வந்திருக்காது.* அம்மா தந்த மிக்சியும் […]
கல்வியில் சாதி
GATE, NEXT போன்று வெளியேறும் போது வடிகட்டும் தேர்வுகளின் பேராபத்து என்னவென்றால், அது சமூகநீதிக் கொள்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்பது தான். நீ உள்ளே போகும் போது இட ஒதுக்கீடு தருகிறாயா, நான் வெளியே அனுப்பும் முன் எல்லாரையும் fail ஆக்குவேன் என்பது தான் இந்தத் தேர்வுகளின் வன்மம். சந்தேகம் இருந்தால் IIT Kanpurல் வடிகட்டப்படும் மாணவர்கள் என்ன சாதி என்று பாருங்கள். இது புரிந்ததால் தான் கலைஞர் எட்டாம் வகுப்பு வரை All pass […]
கிராமப்புற, ஏழைகளுக்கும் பெண்களுக்கும் உலகைத் திறந்த விட்டது கலைஞர் தந்த தொலைக்காட்சி.
பழங்குடிகளுக்கு மட்டும் அல்ல, என் அம்மாவைப் போன்ற படிப்பறிவற்ற, கிராமப்புற, ஏழைகளுக்கும் பெண்களுக்கும் உலகைத் திறந்த விட்டது கலைஞர் தந்த தொலைக்காட்சி. பார்க்க… முகநூல் உரையாடல்
நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?
நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன? எங்கள் வீட்டில்: * கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும். * கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது. * கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார். * கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், […]
கலைஞர் TV
நான் எவ்வளவு பணக்காரனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், சில விசயங்களை அரசு முன்னெடுத்தால் மட்டும் தான் அதன் முழு பலன் கிடைக்கும். எடுத்துக்காட்டுக்கு, எங்கள் கிராமத்தில் நான் தொலைக்காட்சி வாங்கலாம். ஆனால், எல்லாரும் வாங்கினால் தான் கேபிள் தொழில் செய்ய ஒரு ஆள் துணிவார். இல்லாவிட்டால், நான் தூர்தர்ஷன் மட்டும் தான் பார்க்க முடியும். அதே போலத் தான் தொலைக் காட்சி பழுது பார்க்கும் கடையும். தமிழ்நாடு முழுக்க தொலைக்காட்சிகள் கூடினால் தான் தமிழில் பல புதிய […]
இலவச gas stove
இது 30 ஆண்டுகளாக விறகு அடுப்பில் சமைத்ததால் கரி ஏறிய என் வீடு. சமைத்தது என் அம்மா. நாங்கள் பள்ளிக்குப் போகும் போது அவர் விறகு பொறுக்கி கண் எரிய, இருமி இருமி, நாள் முழுக்க ஊதிச் சமைக்க வேண்டும். நான் வெளிநாடு போய் சம்பாதித்துக் காசு கொடுத்தாலும் Gas stove வாங்க அவருக்கு மனம் இல்லை. அப்படியே வாங்கினாலும் மாவட்டத் தலைநகரில் இருந்து 35 கிமீ உள்ளே இருக்கும் எங்கள் ஊருக்கு Gas Cylinder வராது. […]
அரசியல் வாரிசு
கேள்வி: உதயநிதி ஒரு பிரச்சினையே இல்லையா? பதில்: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு Vs உதயநிதிNEET Vs உதயநிதிஎட்டுவழிச்சாலை Vs உதயநிதிஒரு ஆண்டுக்கு மேலாக 18 சட்டமன்றத் தொகுதிகள் MLA இல்லாமல் இருக்கும் ஜனநாயகப் படுகொலை Vs உதயநிதி இன்னும் இது போல் எத்தனை Vs வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஏதாவது ஒன்றில் உதயநிதி தான் முக்கியமான பிரச்சினை என்று விடை வந்தால், வாருங்கள் பேசுவோம். நாட்டுப் பிரச்சினைகளைப் பேசுவது தான் அரசியல். ஒரு கட்சியில் யார் அடுத்த […]
இனி GATE தேர்வில் வெற்றி பெற்றால் தான் பட்டம்
பொறியியல் கல்லூரி மாணவர்கள் இனி GATE தேர்வில் வெற்றி பெற்றால் தான் பட்டம் கொடுப்பார்களாம். இதன் மூலம் நாட்டில் பலர் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதைத் தடுக்கப் போகிறார்களாம்! இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்குப் பதில் நீங்க எல்லாம் படிக்கத் தகுதியில்லாத சூத்திர முண்டங்கள் என்று நேரடியாகவே திட்டலாம். நான் B.Techல் 7.9 CGPA பெற்றேன். உலகளாவிய GRE, TOEFL தேர்வுகளில் வெற்றி பெற்று சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றிருக்கிறேன். ஆனால், நான் […]
சமூகநீதி, திராவிடம் பற்றிய கருத்துகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே?
கேள்வி: சமூகநீதி, திராவிடம் பற்றி எவ்வளவு தான் தரவுகளுடன் விளக்கினாலும் என்னுடைய கல்லூரி, பள்ளிக்கூட, அலுவலக நண்பர்கள், உறவினர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே? பதில்: உங்கள் வாட்சப் குழுக்களில் உள்ள 10, 20 பேரை மனம் மாற்ற முயலாதீர்கள். அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது விழலுக்கு இறைக்கும் நீர். அவர்கள் தங்கள் கருத்துகளை உங்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்வதில்லை. சமூகத்தின் மிகப் பெரிய ஆளுமைகள் என்று அவர்கள் நம்புகிறவர்களைப் பார்த்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அப்படி ஒரு […]