அரக்கர்கள் யாரையாவது அடித்தால் சற்று சிந்தியுங்கள். இவர் எனக்குத் தெரிந்தவர் வலிக்காமல் அடியுங்கள் என்று வராதீர்கள். முருகநோலனைப் பல ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் அவரது முழு விசம் மக்களுக்குப் புலப்பட்டிருக்கிறது. தமிழில் வந்த சமூக விரோதப் படங்களின் பட்டியல்: 1. Gentleman – ஊழல் அமைச்சரால் உயர் சாதி மாணவன் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்வதாகக் காட்டியது. ஆனால், உண்மை இது தான்: திராவிட ஆட்சிக்குப் பின் ஆயிரக்கணக்கான பின் தங்கிய மாணவர்கள் […]
எங்கள் தலைவர்கள் பொருளாதார மேதைகள்
பல கணித மேதைகள் எந்த நிறுவலும் இன்றி மொத்தமாக பல தேற்றங்களை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவற்றை நிறுவுவது தான் பல ஆய்வு மாணவர்களின் வேலையாக இருக்கிறது. அது போல் திராவிடப் பொருளாதாரம் என்பது பல்கலைக்கழககங்களில் ஆராய்ச்சி செய்து, காரல் மார்க்ஸ் போல் புத்தகம் எழுதி வைத்து நிறுவியது அல்ல. இது மக்களிடம் தோன்றிய தலைவர்கள் மக்களுக்காக உருவாக்கிய பொருளாதார மாதிரி. நூறு ஆண்டுக்கு முன்பு நீதிக் கட்சி மாணவர்களுக்கு உணவு தந்து படிக்க […]
இது தான் திராவிடப் பொருளாதாரம்
ஒரு உணவு சமைக்கிறீர்கள். சமைக்க எவ்வளவு செலவு என்று மட்டும் பார்த்தால் நீங்கள் அடிமட்ட ஏழை. சமைக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் நடுமட்ட ஏழை. சமைத்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் பணக்காரர். அடிமட்ட ஏழைக்கு விலையில்லா அரிசி, சத்துணவு, குறைந்த விலையில் அம்மா உணவகம் கொடு. நடுமட்ட ஏழையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நேரத்தை மிச்சமாக்க மடிக்கணினி, தொலைக்காட்சி, மிதிவண்டி, ஸ்கூட்டி, மிக்சர், கிரைண்டர், […]
உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?
உங்கள் குடும்பம் வறுமையில் உழன்ற கதையை உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்? எங்கள் இளமையில் வீட்டில் கடிகாரம் இல்லை. அதிகாலை 5 மணிக்கு எழுந்து தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்றால் கோழி கூவும் சத்தத்தைக் கேட்டு எங்கள் அம்மா எழுப்பி விடுவார். அந்த வீணா போன கோழி 2 மணிக்குக் கூவினாலும் விழித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்போம். இத்தனைக்கும் எங்களிடம் நன்செய், புன்செய் நிலங்கள், கேணி, மாடுகள் இருந்தன. ஆனால், ஒரு கடிகாரம் வாங்கக் கூட காசு […]
திராவிட அரசியல் தத்துவத்திற்கு எதிராக
73% மக்கள் ஆதரிக்கும் திராவிட அரசியல் தத்துவத்திற்கு எதிராக, ஒரு சீட்டு கூட தனியே வெல்ல வக்கில்லாத சக்திகள் தான் இந்த நாட்டின் அறிவுஜீவிகள் என்றால், இவர்கள் மக்களாட்சியை ஆதரிக்கிறார்களா இல்லை சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்களா? இல்லை, திராவிடம் வீழ்ந்து ஆரியம் வென்று மீண்டும் சாதிய அடிமைத்தனம் மேலோங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? பார்க்க… முகநூல் உரையாடல்
திமுக ஏன் இதைச் செய்யவில்லை? அதைச் செய்யவில்லை?
பதில்: நேரு தொடர்ந்து 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். காங்கிரசு 1952-71 தொடர்ச்சியாக 5 முறை ஆண்டிருக்கிறது. 6 முறை தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 4 முறை கூட்டணி ஆட்சிகளைச் செலுத்தி இருக்கிறது. நல்லதோ கெட்டதோ நாட்டின் நிறுவனங்களைக் கட்டமைக்க இந்தத் தொடர்ச்சியும் வலுவான அடித்தளமும் முக்கியம். ஒரு அரசே போனாலும், இந்த நிறுவனங்கள் தான் நாட்டைக் கட்டிக் காக்கும். இப்படி எல்லாம் கட்டமைத்த நாட்டைத் தான் மோடி நான்கே ஆண்டுகளில் சுக்கு நூறாக்கி விட்டிருக்கிறார். முதல்வர் ஆன […]
நம்முடைய மாநிலத்தை முன்னேற்ற ஒரே வழி.
கத்தார் என்று ஒரு அரபு நாடு இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய GDP அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு இது தான். இதன் பரப்பளவு தமிழ்நாட்டைக் காட்டிலும் 11 மடங்கு குறைவு. 335 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வெளிநாடுகளில் மட்டும் முதலீடு செய்துள்ளது. இந்த நாட்டில் வருமான வரி இல்லை. வெளிநாட்டில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் கூட மருத்துவம் கிட்டத்தட்ட இலவசம். இந்த நாட்டை Black Panther படத்தில் வருகிற வக்காண்டா […]
இலவசங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அவை தரமாக இருக்க வேண்டாமா?
பதில்: 2006ல் தந்த கலைஞர் டிவி 12 ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடையில் விற்கிற டிவி ஏதாவது இத்தனை ஆண்டுகள் warranty தருகிறதா? இல்லை, ரிப்பேரே ஆகாத மிக்சி, கிரைண்டர் யாராவது விற்கிறார்களா? ஆனால், தரம் இல்லை தரம் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைப்பீர்கள். சமச்சீர் கல்வி விசயத்திலும் இது தான் நடந்தது. பார்க்க… முகநூல் உரையாடல்
வீட்டில் அரசியல் பேசுவோம்.
கேள்வி: என் பிள்ளைகளுக்குச் சாதி என்றால் என்ன என்றே தெரியாது. இது நல்லது தானே? பதில்: இல்லை. நிறவெறி என்றால் என்ன என்றே என் குழந்தைக்குத் தெரியாது என்று ஒரு கருப்பினத்தவர் கூட சொல்ல மாட்டார். உங்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இருந்தால் கண்டிப்பாக உங்கள் பிள்ளைக்கும் அதை ஊட்டி வளர்க்க வேண்டும். சொன்னால் புரியாது என்றால், இன்றைய பிள்ளைகள் சூட்டிகையானவர்கள்; இணையத்தில் உள்ள நல்ல வீடியோக்களை அறிமுகப்படுத்தலாம். நம் பெற்றோர்கள் அன்று நமக்கு அரசியலை அறிமுகப்படுத்தாமல் விட்டதன் […]
அறிஞர் அண்ணாவின் 24 உரைகள்
அறிஞர் அண்ணாவின் 24 உரைகள். ஒலிப்பதிவாக. இது ஒரு தங்கப் புதையல். பகிர்வுக்கு நன்றி. Fuzail Ahmad பெரியார், கலைஞர், அண்ணா உரைகள் மிக அரிதாகவே இணையத்தில் கிடைக்கின்றன. வாழ்நாள் முழுதும் பேசித் தீர்த்தவர்களுக்கு இது மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம். உங்களிடம் இவர்கள் உரைகள் இருந்தால் தயவு செய்து இணையத்தில் பதிவேற்றுங்கள். https://drive.google.com/drive/folders/1_p_EQhOY9owoKpRLK7tLaiakMEdRhfW1?fbclid=IwAR39Yqj_V1m5Stdag73KQ5eotVNuBQ7VLYZxluipxpnkAfUfO0ebJ18fhDU பார்க்க… முகநூல் உரையாடல்