கேள்வி: விஜய்ணா ரசிகர்களைப் பார்த்த பிறகும் உங்களுக்கு அரசியல் மீது நம்பிக்கை இருக்கிறதா? இந்த முட்டாள்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பதில்: முட்டாள்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது என் கவலை இல்லை. அவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அறிவாளிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தான் என் கவலை. இயற்பியல், உயிரியல் போல அரசியலும் ஒரு அறிவியல் தான். அதை முறையாகப் பயின்றால் சரியான நிலைப்பாடு எடுக்கக் கூடிய எத்தனையோ அறிவாளிகள் இருக்கிறார்கள். அவர்களில் […]
அதிமுக ஒரு திராவிடக் கட்சியா?
பதில்: இதயம் பலகீனமானவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். அதிமுக என்பது என்ன? 1949ல் தொடங்கிய திமுக, 1972ல் பிளவுற்று அதிமுக பிறக்கிறது. அதிமுகவின் அடித்தளம் 23 ஆண்டுகள் திமுகவிலும் அதற்கு முன்பு திராவிட இயக்கத்தின் மீதும் கட்டமைக்கப்பட்டது. பெரியார் என்னும் மருந்தைத் திமுக தேன் தடவித் தருகிறது என்று அறிஞர் அண்ணா சொன்னார். அந்த மருந்தில் நிறைய தண்ணீர் கலந்த பானம் தான் அதிமுக. ஆனால், அது ஒரு போதும் பாலில் விசம் கலக்கும் சங்கி […]
இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்!
இந்த மண்ணுக்கேற்ற கம்யூனிசம் திராவிடம் தான்! 2006 – 2008 ஆட்சிக்காலத்தில் திமுக 1,60,671 ஏக்கர் நிலத்தை இலவசமாக மக்களுக்கு அளித்தது. 2009 ஆம் ஆண்டு வரை, 1,75,798 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 2,10,747 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது. அதே போல், 6,46,785 இலவச பட்டாக்களும் வழங்கப்பட்டிருந்தன. இதே காலக்கட்டத்தில், மேற்கு வங்கத்தை ஆண்ட கம்யூனிஸ்டுகள் 26,838 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கினர். 3416 பட்டாக்களை மட்டுமே வழங்கி இருந்தனர். திமுக 1970ல் அறிமுகப்படுத்திய நில உச்ச […]
இது தான் திராவிடத்தின் பொருளாதார நீதி.
உங்களுக்குத் தெரியுமா? 1960களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வானொலி அறை கட்டி கிராம மக்கள் கேட்பதற்காக ஒரு வானொலியும் இரண்டு ஒலி பெருக்கிகளும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தியும் விவசாய அறிவுரையும் ஒலிபரப்பப்படும். ஒரு வானொலி வாங்கக் கூட காசு இல்லாமல் இருந்த சமூகம். பணக்காரர்களிடம் மட்டுமே வானொலி இருக்கும். எல்லாரும் வானொலி வாங்க முடிந்த காலத்தில், பணக்காரர்களிடம் தொலைக்காட்சி இருந்தது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பஞ்சாயத்து டிவி கொடுத்தோம். மக்கள் அன்று வேட்டி, சேலை, உணவு கூட […]
ஆண்டான் அடிமைக் காலம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் உங்கள் உள்மன அரிப்பா?
1990கள் வரை தீபாவளி அன்று பண்ணையார்கள் வீடுகளில் பலகாரம் வாங்க அக்கம் பக்கம் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகள் வருவார்கள். ஏன் அன்றாடம் கூட இரவு வேளைகளில் எஞ்சிய உணவை வாங்கிக் கொள்ள தட்டை ஏந்திக் கொண்டு வருவார்கள். நாட்டாமை, சின்னக் கவுண்டர் என்று நீங்கள் பார்க்கிற பண்ணையார் படங்களில் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை அளிக்கும் காட்சிகள் தவறாமல் வரும். இன்று இந்த வேலையை அரசு செய்கிறது. மக்கள் பிச்சையாக இல்லாமல் உரிமையாக வாங்கிக் […]
அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா?
கேள்வி: அடித்தட்டு மக்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா? பதில்: இந்தியாவில் தொலைகாட்சிகள் வைத்திருப்போர் 47% மட்டுமே. GDPல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மராட்டியத்தில் இது 56% தான். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு இதனை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடித்து விட்டது. தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் குடும்ப வன்முறை குறைகிறது, வாழ்க்கைத் தரம் கூடுகிறது என்று பல பல சமூக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. […]
அரசு தரும் மடிக்கணினியில் எல்லாரும் பாட்டு கேட்கிறார்கள். படம் பார்க்கிறார்கள். இது எல்லாம் வீண் இல்லை?
பதில்: நாம் எல்லாரும் காசு கொடுத்து கணினியும் இணையமும் வாங்கிய பிறகு என்னவெல்லாம் செய்வோமோ அவை எல்லாவற்றையும் அரசின் பயனாளிகளும் செய்யலாம். நீங்கள் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கினால் கூட எது நல்ல பயனைத் தரும் என்று தெரியாது. அதற்காகத் தான் கலவையாகப் பல நிறுவனப் பங்குகளை வாங்குகிறீர்கள். இது பங்குச் சந்தை முதலீடு. நாளைய சமூகத்தில் யார் சச்சின், ஏ. ஆர். ரஹ்மான், கலாம் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு இன்று எல்லா வாய்ப்புகளும் […]
எதுடா மெரிட்?
நீட் வந்த பிறகும் கூட தனியார் கல்லூரியில் பணம் கட்டிப் படிப்பவர்களின் மதிப்பெண்ணைக் காட்டிலும் அரசு கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண் அதிகம். எதுடா மெரிட்? ** “மெரிட்டில் படித்தேன்” என்கிற வசனத்துக்கு கை தட்டி ரிசர்வேஷனை ஒழிக்கனும் என கத்திய IT மேனஜர் ஒருவரை பார்த்து நீங்கள் எங்கே படித்தீர்கள் என்று கேட்டேன். அவர் சென்னையில் பிரபல தனியார் கல்லூரியில் பணம் கட்டி படித்ததாக கூறினார். தனியார் கல்லூரியில் பணம் கொடுத்து படித்தவர்களை […]
கல்வி தான் உன்னை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கும்
ஒரு நகரத்தின் மிகச் சிறந்த புரோட்டா மாஸ்டருக்குக் கிடைக்கும் சம்பளம் தான் ரூ.18,000. இந்த நிலைக்கு வர அவர் பத்து ஆண்டுகளாவது பரோட்டா சுட்டிருப்பார். கல்லூரியை விட்டு வெளியே வரும் ஒரு பொறியாளருக்கு ரூ. 10,000 என்பது மிக நல்ல சம்பளம். பத்து ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றி நகரத்தின் சிறந்த பொறியாளர் ஆனால் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம். நீ Engineer ஆவது பொறுக்காமல் ITIல் ஒரு Fitterஆகவோ, electricianஆகவோ பயின்று வாழ்நாள் முழுதும் அடிமைச் சேவகம் செய்ய […]
இலவசத் திட்டங்கள் சரி. ஆனால், அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் கண்டறிந்து தரலாமே?
பதில்: ஒரு ஊரில் ஒரே ஒருவருக்குத் தான் போலியோ தாக்கும். அது யாரென்று நமக்குத் தெரியாது. அவரைக் காக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து தரத் தான் வேண்டும். புண்ணியம் வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் செய்கிறோம். பணக்காரன் எல்லாம் சாப்பிட வராதே என்று விரட்டி விடுகிறோமா? உறவினர், நண்பர் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று தான் திருமணத்தில் விருந்து வைக்கிறோம். உணவு வீண் ஆனாலும் பரவாயில்லை என்று […]