The Law of the Vital Few என்று ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு சிறிய வட்டத்திடம் பெரும்பான்மை வளங்களோ, அதிகாரங்களோ குவிந்திருக்கும். இதை நீங்கள் 80/20 விதி என்றும் கேள்விப்பட்டிருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, அமெரிக்காவில் 99% ஏழைகளை 1% பணக்காரர்களின் முடிவுகள் கட்டுப்படுத்துவதாக ஒரு போராட்டம் பரவியது. இங்கே உள்ள வாக்கெடுப்பு முடிவுகளைப் பாருங்கள். தமிழகத்தின் மனநிலைக்கு எதிரான, நாட்டுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்து நிலைப்பாடுகளுக்கும் 3% ஆதரவு தொடர்ந்து தென்பட்டுக் கொண்டே இருக்கிறது . அவர்களிடம் […]
மக்கள் மனதார வாழ்த்துவது கலைஞர் டிவி கொடுத்தார் என்று தான்.
கலைஞர் எவ்வளவோ சட்டங்களையும் திட்டங்களையும் கொண்டு வந்தார். ஆனால், மக்கள் அவரை மனதார வாழ்த்துவது கலைஞர் டிவி கொடுத்தார் என்று தான். Maslow’s Hierarchy of Needs தெரிந்தால் இதில் வியப்பு இருக்காது. அந்த மக்களின் தேவைகள் அடிப்படையானவை. நல்ல படிப்பும் வேலையும் ஓய்வும் இருந்தால் சித்தாந்தம் பேசலாம் பார்க்க… முகநூல் உரையாடல்
Computer, TV, Mixie, Grinder, Fan எல்லா மக்களுக்கும் அரசு கொடுத்தால் கேவலம்
Computer, TV, Mixie, Grinder, Fan எல்லா மக்களுக்கும் அரசு கொடுத்தால் கேவலம். ஆனால், முட்டாள் மன்னர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் ஒரே ஒரு சாதியினர் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டால் அதற்குப் பெயர் சாத்திரம். **தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிரயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம். “அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி […]
இலவசத் திட்டங்களால் மக்கள் வரிப் பணம் வீணாகிறதே?
பதில்: மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் சமூக முதலீடு என்று எத்தனையோ முறை விளக்கி விட்டோம். இருந்தும் வரிப்பணம் வீணாவது தான் உங்கள் ஒரே பிரச்சினை என்றால், தமிழ்நாடு இந்தியாவுக்குக் கட்டும் ஒரு ரூபாய் வரியில் 40 பைசா தான் திரும்பி வருகிறது. உத்திர பிரதேசத்துக்கு அதுவே 1 ரூபாய் 79 காசாக கிடைக்கிறது. நம்ம உழைச்சு வட நாட்டுக் காரன் திங்கிறதுக்குப் பதில் நம்ம அண்ணன் தம்பி நல்லா இருக்கட்டுமே? இந்தியாவில் GDPயில் இரண்டாவது பெரிய […]
முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக மாற்றி விடுவார்கள்.
Broken Windows Theory என்று ஒன்று உள்ளது. அதாவது, சில ரவுடிகள் உங்கள் வீட்டுச் சன்னல் கண்ணாடியை உடைக்கிறார்கள். அவர்களுக்குப் பயந்து கொண்டோ போனால் போகிறா்கள் என்றோ விட்டால் மேலும் மேலும் கண்ணாடிகள் உடைந்து கொண்டே இருக்கும். அந்தத் தெரு வாழவே தகுதியற்றதாகி விடும். சிறிய ஒழுங்கீனங்களைத் தவிர்த்தால் தான் பெரிய குற்றங்கள் நிகழ முடியாமல் தவிர்க்க முடியும் என்கிறார்கள். திராவிடம் மீதான அவதூறுகளும் இப்படித் தான். முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் தமிழ்நாட்டை வாழவே தகுதியற்ற சுடுகாடாக […]
1967-76 ஆட்சிக் காலத்தில் திமுக ஏன் ஒரு மருத்துவக் கல்லூரி கூட கட்டவில்லை?
பதில்: 1970களில் மத்திய அரசு ஒரு விதி கொண்டு வந்தது. அதாவது, இரண்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையே உள்ள தூரம் 100 கிலோமீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் ஒரு சில நகரங்களில் குவியாமல் பல நகரங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த விதி உருவானது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் பின்வரும் நகரங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. 1,2,3 சென்னை – மூன்று கல்லூரிகள்4. செங்கல்பட்டு5. சேலம்6. கோவை7. தஞ்சாவூர்8. மதுரை9. திருநெல்வேலி இவற்றைத் […]
அனைத்துத் துறைகளிலும் தமிழையே முழுக்க முழுக்க கல்வி மொழியாகப் பயன்படுத்துமாறு திராவிட கட்சிகள் செய்திருக்கலாமே?
கேள்வி: ஜப்பான் ,சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் போல தமிழகமும் பொறியியல், மருத்துவம் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழையே முழுக்க முழுக்க கல்வி மொழியாகப் பயன்படுத்துமாறு திராவிட கட்சிகள் செய்திருக்கலாமே? பதில்: ஜப்பான், சீனா, ஜெர்மனி எல்லாம் நாடுகள். தமிழ்நாடு ஒரு மாநிலம். மாநில சுயாட்சி இல்லாமல் திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லை எந்தக் கட்சியாலும் இதைச் செய்ய முடியாது. தமிழைக் கட்டாயம் ஒரு மொழிப் பாடமாகப் படிக்க வேண்டும் என்று சொன்னாலே நீதிமன்றம் முடக்கும். இங்கு […]
ISROவில் புகுந்து ராக்கெட் விடாமல் ஓய மாட்டோம்.
1990கள். புதுக்கோட்டை. என் சொந்த மாவட்டம். இந்தப் படத்தில் உள்ள பெண்கள் எல்லாம் என் அத்தைகளையும் சித்திகளையும் போல் இருக்கிறார்கள். பெண்களுக்கு சைக்கிள் ஓட்டப் பயிற்சி கொடுக்க என்று ஒரு திட்டம். அதில் இந்தியாவிலேயே 100% பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்த மாவட்டம் என்று விருது. வெறும் 30 ஆண்டுகள் முன்பு இப்படித் தான் இருந்திருக்கிறது தமிழகம். இங்கு தானாய் எதுவும் மாறிவிடவில்லை. இலவச மிதிவண்டி என்று நீங்கள் சொல்வது ஒரு சமூகத்தின் வாழ்க்கையையே புரட்டிப் போட […]
இந்தியை எதிர்த்ததால் தமிழகம் பெற்றது என்ன? எதிர்க்காததால் கேரளா இழந்தது என்ன?
இந்தியை எதிர்த்ததால் தமிழகம் பெற்றது என்ன, எதிர்க்காததால் கேரளா இழந்தது என்ன என்று கேட்கிறார்கள். அதாவது மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எல்லாம் இந்தியை எதிர்க்காமலேயே தங்கள் மொழியைத் தக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் இந்தியை எதிர்த்தோம் என்று ஓவராக கூவுகிறீர்கள் என்கிறார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் மட்டும் இந்தியை எதிர்த்துப் போராடியதில்லை. அன்று இந்தியை எதிர்க்காவிட்டால் இந்திய அரசின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருந்திருக்கும். //The Indian constitution, in […]
அரசு பள்ளிகளில் எத்தனையோ வசதிகள் தேவைப்படும் போது, ஆளுக்கு ஒரு கணினி தேவையா?
பதில்: சரி, நீங்கள் சுற்றி வளைத்து எங்கு வருவீர்களோ அதை நான் நேரடியாகவே சொல்கிறேன். படிக்கிற வயதில் மாணவர்கள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் porn பார்க்கும் வாய்ப்பை மடிக்கணினி தருகிறது என்பது தான் உங்கள் பிரச்சினை. Porn பார்க்கிற பிள்ளை அடுத்து என்ன செய்யும், யாரைக் காதலிப்பாள், எந்தச் சாதி ஆளைத் திருமணம் செய்து கொள்வாள், இவர்களை எல்லாம் கட்டுப்படுத்தி வைக்க முடியுமா, நம்ம பாரம்பரியம், Culture, பண்பாடு என்ன ஆகும் என்பது தான் உங்கள் கவலை. […]