கேள்வி: ஏன் IIT, கேந்திரிய வித்யாலயா, நவோதயா போல் தரமான கல்லூரிகளையும் பள்ளிகளையும் திராவிட ஆட்சி தரவில்லை? பதில்: ஒரு IITயில் 100 பேர் படிக்கிறார்கள். 100க்கு 100 வளாகத்திலேயே வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் 100% வேலை வாங்கித் தருகிறார்கள். எனவே, கூடுதல் தரம் என்று கூறுவார்கள். ஆனால், 125 கோடி மக்கள் உள்ள நாட்டில் அவர்கள் படிக்க வைத்தது 100 பேர் மட்டுமே. அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஒரு இலட்சம் […]
ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்?
கேள்வி: ஏன் திராவிட அரசியலுக்கு எதிரான அனைத்து நிலைப்பாடுகளுக்கும் சங்கிகளைக் திட்டுகிறீர்கள்? திமுக, அதிமுகவை தமிழ்நாட்டில் உள்ள மற்ற எத்தனையோ கட்சிகள் கூடத் தான் விமர்சிக்கின்றன? பதில்: மற்ற கட்சிகள் திமுக, அதிமுகவைத் திட்டுவது தேர்தல் அரசியலின் கட்டாயங்கள். ஆனால், அவற்றை ஊதிப் பெரிதாக்கி திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று விடாமல் பரப்புவது சங்கி வேலை. உலகத் தமிழர் ஒற்றுமை, Big boss ஓவியா, சல்லிக்கட்டுத் தமிழன் – இப்படிப் பல்வேறு பெயர்களில் இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் குழுமங்களுக்குச் […]
தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் Vs திராவிடரைத் திராவிடரே ஆள வேண்டும். வேறுபாடு என்ன?
கேள்வி: தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் Vs திராவிடரைத் திராவிடரே ஆள வேண்டும். வேறுபாடு என்ன? பதில்: திராவிடர்கள் என்போர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவோர். இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல ஓடிசா, மேற்குவங்காளம், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் வரை புழக்கத்தில் உள்ள பல்வேறு மொழிகளைப் பேசியவர்கள். ஆரியர் என்போர் இந்த நிலப்பரப்புக்கு வெளியில் இருந்து வந்தோர். வெளியில் இருந்து வருவோர் நாட்டைப் பிடிப்பது உலக அரசியலில் இயல்பு தான். […]
திராவிடக் கட்சிகளின் கொள்கை பிடித்து இருக்கிறது. ஆனால், ஊழல் உறுத்தலாக உள்ளதே?
கேள்வி: திராவிடக் கட்சிகளின் கொள்கை பிடித்து இருக்கிறது. ஆனால், ஊழல் உறுத்தலாக உள்ளதே? பதில்: கருப்பர்கள் வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி விடுதலை பெற்று ஒரு ஆட்சியை அமைக்கிறார்கள். கருப்பர் ஆட்சியில் திருட்டு, இலஞ்சம் போன்ற குற்றங்கள் பெருகினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் போதும். அதை விடுத்து கருப்பர் ஆட்சியால் வீழ்ந்தோம் என்பது மீண்டும் வெள்ளையர் அடிமைத்தனம் தலையெடுக்க வேண்டும் என்று எண்ணுவோரின் வாதமே ஆகும். அதே போல் தான் திராவிடமும். ஆட்சி, அதிகாரம் […]
இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் யார்?
இந்தியாவிலேயே அதிகம் குடிப்பவர்கள் , ஒருங்கிணைந்த ஆந்திர மாநில மக்கள். வருடத்திற்கு 35 லிட்டர் அளவுக்கு குடிக்கிறார்கள். இதில் 85% கள் மற்றும் நாட்டு சாராயம். நாட்டிலே அதிகமாக சாராயம் புழங்கும் இடம் குஜராத் (95%) . குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர , ஜாரகண்டட், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள குடிகாரர்கள் , கள் & சாராயத்தை 80%+ […]
மக்களுக்கு இலவசங்களாக அள்ளிக் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாட்டார்களா?
கேள்வி: மக்களுக்கு இலவசங்களாக அள்ளிக் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாட்டார்களா? பதில்: இல்லை. இத்தனை நாள் அவர்களுக்குக் குறைந்த கூலிகளைக் கொடுத்து வந்தவர்கள் தான் மக்கள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். Universal basic income என்ற ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, ஒரு அரசு தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை மாதா மாதம் இலவசமாக அளிக்க வேண்டும். இதைப் பின்லாந்து, நெதர்லாந்து, கனடா போன்ற பல நாடுகள் ஆய்வு செய்து […]
2 ரூபாய்க்கு அரிசி-பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் சொல்வதைக் கேளுங்கள்
கேள்வி: 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்த அரசு அதைக் கூட பிறகு இலவசமாகத் தருகிறது என்றால் மக்களை அந்த அளவுக்கு வக்கற்றவர்களாக ஆக்கி விட்டதா? பதில்: இல்லை. அந்த 2 ரூபாயை ஈட்டக் கூட யாரிடமும் நீங்கள் அடிமைச் சேவகம் செய்ய வேண்டாம். கண்ணியமான வேலைகளுக்கு முயலுங்கள் என்பது தான் அரசு இங்கே மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் சுதந்திரம். அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தமிழக மக்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இன்று கூடுதல் செல்வ வளம் […]
பிரசவத்தில் இறந்த தாய்மார்களின் எண்ணிக்கையைப் பத்தில் ஒரு பங்காக குறைத்தவர் கலைஞர்!
தமிழ்நாட்டில் பிரசவத்தில் இறந்த தாய்மார்களின் எண்ணிக்கையைப் பத்தில் ஒரு பங்காக குறைத்தவர் கலைஞர்! Sivasankaran Saravanan விளக்குகிறார் கேளுங்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
மீண்டும் கல்லூரிக்கு வர உதவினார் கலைஞர்.
மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து கூலித் தொழிலாளர்களும் படிப்பை விட்டுச் சென்றவர்களும் கூட மீண்டும் கல்லூரிக்கு வர உதவினார் கலைஞர். இதில் பயன்பெற்ற மாணவர் Dilip Rajendran இன்று Fortune 100 நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்கள். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு! பார்க்க… முகநூல் உரையாடல்
1970களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பட்டியல் இனத்தவராக இல்லையே
2011. இந்தியா முழுக்க உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிட்டதட்ட 940 பேர். அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வெறும் 21 பேர்தான்! இவர்களில் 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் இருந்தவர்கள்! 1970களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பட்டியல் இனத்தவராக இல்லையே என்று பெரியார் வருந்திய போதே, அடுத்த நாளே ஒரு பட்டியல் இனத்தவரை நீதிபதியாக நியமித்தவர் கலைஞர். திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசுவதைக் கேளுங்கள். பார்க்க… முகநூல் […]