கேள்வி: கட்சிகள் ஏன் சாதி பார்த்து வேட்பார்களைப் பார்த்து நிறுத்துகின்றன? பதில்: கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிகள் குறித்த இந்தப் படத்தைக் காணுங்கள். காங்கிரசு, கம்யூனிஸ்ட், அதிமுக அனைத்தும் ஒரே சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளன. இதற்குப் பெயர் Systemic bias. அதாவது ஒரு சமூகத்தில், பணியிடத்தில் இயல்பாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் யாராக இருக்கிறார்களோ அவர்கள் தான் அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள். இதே கோவில்பட்டி தொகுதியில் 13 தேர்தல்களில் 1 முறை தான் […]
நீதிக்கட்சி அரசு ஆணை – பெண்களுக்கு வாக்குரிமை
1921. இந்தியாவிலேயே முதன் முறையாக பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தது மதராஸ் மாகாணம். செய்தது நீதிக் கட்சி. திராவிட இயக்கத்தின் முன்னோடி. நாம் இதைச் செய்த பிறகு தான் பல உலக நாடுகளே பெண்களுக்கான வாக்குரிமையை அளித்தன. திராவிடம் என்பது சமத்துவமே! தொடர்புடைய செய்திகள் When Madras’ women won the vote Did the British Empire resist women’s suffrage in India? Women’s suffrage பார்க்க – முகநூல் உரையாடல்
உலகிலேயே முதன் முதலாக, சென்னையில் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது
1920. உலகிலேயே முதன் முதலாக, சென்னையில் பள்ளிக் குழந்தைகளுக்கான உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. செய்தது நீதிக்கட்சி. திராவிட இயகத்தின் முன்னோடி. என்றும் தமிழகம் ஒரு முற்போக்கு மாநிலம். (ஆதாரம்) பார்க்க… முகநூல் உரையாடல்
சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை
சென்னை எழும்பூரில் உள்ள சிறப்பு அரசு குழந்தைகள் மருத்துவமனை குறித்த இந்த வீடியோவையும் படங்களையும் பாருங்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் எத்தனை நோயாளிகள் பயன் பெறுகிறார்கள், இருதய அறுவை சிகிச்சைகளைப் பெறுகிறார்கள், எப்படி உயர்தரமான அறுவை சிகிச்சை, உள் நோயாளிகளுக்கான வசதிகளைக் கொண்டிருக்கின்றன என்று காட்டும். இவை அனைத்தும் முற்றிலும் இலவசம். தாங்கள் ஏழைகள் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லாத பாமர மக்கள் இவற்றைப் பயன்படுத்தி உலகத் தரமான மருத்துவத்தை இலவசமாகப் பெறுகிறார்கள். […]
சென்னையில் உள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புள்ளிவிவரம்
இது 355 ஆண்டுகளாகச் சென்னையில் உள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் புள்ளிவிவரம். இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் ஒவ்வொரு நாளும் ~10,000 பேர் மருத்துவம் பார்க்கிறார்கள். உறுப்பு மாற்று சிகிச்சை உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசம். ஒரு AIIMS கட்டும் காசில் இது போல் பத்து மருத்துவமனைகள் கட்டலாம். AIIMSல் மருத்துவம் பார்க்க நீங்கள் காசு கட்ட வேண்டும். அங்கு மாதக் கணக்கில் காத்திருந்து செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சைகளைத் தமிழ்நாட்டில் ஒரு வார […]
திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே?
கேள்வி: திராவிட ஆட்சியில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் கூடியது மகிழ்ச்சி. ஆனால், சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதே? பதில்: சமூகத்தில் தொழிற்சாலைப் பொருளாதாரம் உயரும் போது சுற்றுச் சூழல் பாதிப்பு தவிர்க்க இயலாதது. அதற்குப் பிறகு சேவைப் பொருளாதாரத்துக்கு மாறி அனைவரின் வருமானமும் உயரும் போது, சூழல் மாசு குறையும். இது உலகம் முழுக்க அவதானிக்கும் போக்கு. இதற்குப் பெயர் Environmental Kuznets curve. இது தான் தற்போது தமிழ்நாட்டில் நடக்கிறது. (தொடர்புடைய செய்திகள்) (தொடர்புடைய செய்திகள்) பார்க்க… முகநூல் […]
சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை
சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை * வரதட்சணைக் கொடுமை * மாமியார் கொடுமை * விதவைப் பெண்கள் கொடுமை * பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருப்பது என்று எல்லாவற்றுக்கும் பிற்போக்கு இந்து சமயத்தின் வரலாறு தான் காரணம். * அனைத்துச் சாதிகளும் நிலங்களை உரிமை கொள்ள முடியாது. * பெண்களுக்குப் பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது. * திருமணத்தின் போது பெற்றோர் தருகிற பொருட்கள் மட்டும் தான் பெண்ணின் சொத்து * பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது […]
இந்த வரலாற்று இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல் ஆணவக் கொலைகளை முழுமையாகத் தடுக்க முடியாது.
நமக்கு சாத்திரங்களில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாது. ஆனால், தெருமுக்கு பிள்ளையார் கோயிலில் உருகி உருகி கடவுளை வேண்ட பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அது போல், சாதி மாறி திருமணம் செய்தால் சொத்தில் சல்லிக்காசு பங்கு கிடையாது, மானம் போகிறது என்று பெற்றோர் மிரட்டுவதற்கும் ஆணவக் கொலை செய்யும் அளவுக்குப் போகவதற்கும் மனுநீதி போன்ற இந்து சமய சாத்திரங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. இந்து சாத்திரங்கள் அவரவர் தங்கள் வர்ணத்தில் (அதாவது சாதி அடுக்கு) தான் பெண்ணெடுக்க வேண்டும் […]
கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உதவுமா?
கேள்வி: கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உதவுமா? அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? இது ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவுமா? பதில்: கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியாது. இரண்டில் ஒரு சாதி தொடரும். இதே காரணத்தினால், நான் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தைப் புரிந்து கொண்ட வகையில், சாதி மாறித் திருமணம் செய்தவர்களுக்குப் புதிதாக தனி இட ஒதுக்கீடு தருவது தவறு என்று கருதுகிறேன். பெண்களை முன்னேற்ற தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. பெண்ணைத் திருமணம் […]
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதில் அண்ணா பல்கலையில் படித்தவர்கள் முன்னிலை
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பெறுவதில் அண்ணா பல்கலையில் படித்தவர்கள் முன்னிலை. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைகளின் பங்கையும் சேர்த்தால் இந்தியாவில் ஒரு மாநிலம் கூட நம் அருகில் வர முடியாது. IIT எல்லாம் அதள பாதாளத்தில் இருக்கிறது. இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழ்நாட்டவர்களைக் கல்வியும், வேலைவாய்ப்பும் தந்து நன்றாக வாழ வைத்திருப்பது திராவிட இயக்கத்தின் சாதனை. இப்படி அனைவரும் சமமாகப் படித்துத் தலை நிமிர்வது பிடிக்காதவர்கள் தான் நம் கல்வியின் தரம் […]