தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாற்றில் இரண்டே ஆண்டுகள் தாம் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1971. கலைஞர் SC/ST ஒதுக்கீட்டை 16%ல் இருந்து 18% ஆக்கினார். BC ஒதுக்கீட்டை 25%ல் இருந்து 31% ஆக்கினார். 1980. MGR BC ஒதுக்கீட்டை 31%ல் இருந்து 50% ஆக உயர்த்தினார். ஆக, பத்து ஆண்டு காலத்தில் 41%ஆக இருந்த ஒட்டு மொத்த ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது. எனவே, 70 ஆண்டுகளாக எங்களுக்கு ஏன் ஒன்றுமே செய்யாமல் வஞ்சித்தீர்கள் என்ற புகார் துல்லியமான […]
வெள்ளை அறிக்கை
அடுத்து வரும் ஆட்சியில், தமிழ்நாட்டு அரசுப் பணிகள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளில், யார் பணியாற்றுகிறார்கள், படிக்கிறார்கள் என்று சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். SC, ST, BC, MBC பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். 69% இட ஒதுக்கீடு விகிதம் நிலவாத இடங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கி சமன் செய்ய வேண்டும். BC, MBC பிரிவுகளில் ஒரு சில சாதிகளே தங்கள் மக்கள் தொகைக்கு விஞ்சி கூடுதல் […]
இட ஒதுக்கீட்டுப் போராளிகளைச் சுட்டுக் கொன்ற MGR
எம்ஜிஆர் MBC இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை. MBC இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய 21 பேரைச் சுட்டுக் கொன்றார். கலைஞர் MBC 20% இட ஒதுக்கீடு கொடுத்தார். MGR சுட்டுக் கொன்ற 21 பேரின் குடும்பங்களுக்கு உதவித் தொகை அளித்தார். MBC இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய டாக்டர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்துத் திமுகவைத் திட்டுவார். இப்படி இருந்தால் தமிழ்நாட்டு அரசியல் எப்படி விளங்கும்? பார்க்க – முகநூல் உரையாடல்
போராளிகள் பொய் சொல்லக் கூடாது!
அன்பின் Evidence கதிர், 1971. SC/ST மக்கள் இட ஒதுக்கீட்டை 16% ல் இருந்து 18% ஆக உயர்த்தியவர் கலைஞர். 1989. BC இட ஒதுக்கீட்டை இரண்டாகப் பிரித்து MBC – 20%, BC – 30% என்று கொடுத்தவர் கலைஞர். 1989. SC/ST என்று ஒன்றாக இருந்ததைப் பிரித்து ST – 1%, SC – 18% என்று தனித்தனியாகத் தந்தவர் கலைஞர். SC தொகுப்பில் இருந்து ST வெளியேறிய போதும் SC இட ஒதுக்கீட்டைக் […]
மக்கள் தொகை அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு
கேள்வி: இட ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையில் அமையக் கூடாது, சாதியால் அதிகம் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிறார்களே? பதில்: யார் இப்படிச் சொல்கிறார்களோ அவர்களையே மக்கள் தொகை தான் அடிப்படை என்று சொல்ல வைக்க முடியும். எப்படி? 1989 வரை SC/ST இட ஒதுக்கீடு தனித்தனியாக இல்லாமல் ஒரே பிரிவாக 18% இருந்தது. அதைப் பிரித்த போது ஆளுக்கு 9% என்று அல்லவா பிரித்து இருக்க வேண்டும்? ஏன் SCக்கு அப்படியே […]
ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த இட ஒதுக்கீடு என்ன சம்பளமா?
சம்பளத்தைத் தான் ஒவ்வொரு ஆண்டும் உயர்த்த முடியும். சம்பளத்தைத் தான் அடுத்தவர்களுக்கு உயர்த்தினாயே எங்களுக்கு ஏன் உயர்த்தவில்லை என்று கேட்க முடியும். அரசிடம் நிதி இருந்தால் போதும். அல்லது, கடன் வாங்கியாவது சம்பளம் தரலாம். ஆனால், இட ஒதுக்கீடு என்பது பங்கு. இங்கு இருப்பதே மொத்தம் 100% தான். கலைஞர் கிராமப்புற மாணவர்களுக்குப் 15% இட ஒதுக்கீடு தந்தார். ஜெயலலிதா அதனை 25% என்று உயர்த்தினார். நீதிமன்றம் சென்றார்கள். இந்த இட ஒதுக்கீடே செல்லாது என்று ஒட்டு […]
அதெல்லாம் நீ சொல்லக் கூடாது!
ஒரு RTO அதிகாரி, “நீ எல்லாம் வண்டி ஓட்டலாமா” என்று கேட்பதில்லை. நமக்கு வண்டி ஓட்டத் தெரியுமா என்று சான்றிதழ் கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. அது போல, யார் மருத்துவம் படிக்கலாம், யாருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது, மாணவர்களை எப்படிச் சேர்ப்பது, எத்தனை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவது போன்றவற்றை முடிவு செய்வது எல்லாம், இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளின் வேலையாக இருக்கக் கூடாது. எங்கள் மாநிலத்துக்கு யார் மருத்துவர் ஆகத் தேவையோ அவர்களை […]
யாரை எங்கே நிறுத்தி வைக்க வேண்டும்?
கோயிலுக்குள் நுழைய விட்டவர்கள், கருவறைக்குள் விடவில்லை. சொல்லப்படும் காரணம் – ஆகமம் வேலையில் இட ஒதுக்கீடு தந்தவர்கள், பதவி உயர்வில் தரவில்லை. சொல்லப்படும் காரணம் – தரம் யாரை எங்கே நிறுத்தி வைத்தால் அதிகாரத்தைத் தக்க வைக்கலாம் என்று, சாதியைக் கண்டுபிடித்தவனுக்குத் தெரிந்திருக்கிறது. பார்க்க – முகநூல் உரையாடல் தொடர்புடைய செய்தி:
பொருளாதார இட ஒதுக்கீடு என்னும் சூழ்ச்சி
“எங்கள் சாதியினரிடம் நிலம் இல்லை, காசு இல்லை, தொழில் இல்லை… ஆகவே, கூடுதல் இட ஒதுக்கீடு கொடு” என்று கேட்கிறார்கள். இதற்குப் பெயர் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு. இதைச் சாக்காக வைத்து, ஏற்கனவே உங்கள் சாதிகளில் கொஞ்சம் நஞ்சம் பணம் இருக்கிற ஆட்களை இட ஒதுக்கீட்டில் இருந்து வெளியேற்றுவார்கள். இதற்குப் பெயர் Creamy layer. ஏற்கனவே OBC மண்டையில் இந்த Creamy layer மிளகாயை அரைத்து விட்டார்கள். அடுத்து SC/ST மண்டைகளில் அரைக்கக் காத்திருக்கிறார்கள். நாங்களும் […]
உலகில் சிறந்த தமிழ்நாடு!
இன்று இந்தியாவிலேயே ஆக அதிகமாக, தமிழ்நாட்டில் 49% பேர் கல்லூரிப் படிப்பிறக்குச் செல்கிறார்கள்… என்று எழுதினேன். பிறகு இந்தியா என்பதை அடித்துத் திருத்தி விட்டு, உலகிலேயே என்று மாற்றி எழுதினேன். திராவிடத்தால் வாழ்ந்தோம். பார்க்க – முகநூல் உரையாடல்