கேள்வி: கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா? பதில்: கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். […]
அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை?
கேள்வி: அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை? பதில்: கலைஞர் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது தான் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். கலைஞரை நீங்கள் எவ்வளவு சுயநலம் மிக்க, சமூக அக்கறை அற்ற, பதவி வெறி பிடித்த தலைவர் என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருவர், தன் சொந்த மகளைக் கூடவா ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறையில் கிடந்து வாட விடுவார்? அரசியல் என்பது […]
திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை?
கேள்வி: திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை? பதில்: நீங்கள் சொல்வது பொய். திராவிடக் கட்சிகள் பல தலித் வேட்பாளர்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். பெயர்களில் உள்ள சாதியை ஒழித்தது திராவிட இயக்கம் என்பதால், இங்கு தான் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதி என்றே பலருக்கும் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், கட்சி பார்த்துத் தான் வாக்களிக்கிறார்கள். தனித்தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களைக்கூட SC/ST என்று தான் தெரிந்து […]
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி?
கேள்வி: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு பற்றி? பதில்: பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருவோம் என்று பாஜக ரொம்ப நாளாகவே சொல்லி வருகிறது. தற்போது அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். முதலில், அது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற வேண்டும். பிறகு, அது அரசியல் சாசனப்படி செல்லும் என்று நீதிமன்றம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொருளாதார இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும், தற்போது நடைமுறையில் இருக்கிற 49%க்கு மேல் […]
எம் மக்கள் ஏழையாகவே சாகவேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலைவிதியா?
பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலம் தமிழகம். எம் மக்கள் ஏழையாகவே சாகவேண்டும் என்று அவர்களுக்கு என்ன தலைவிதியா? வளர்ந்த நாடுகள் செய்யும் அனைத்து நலத் திட்டங்களையும் நாங்கள் அவர்களுக்கு அளிப்போம். Tamil Nadu has the second-largest economy in India. Over 50% of the state is urbanized, accounting for 9.6% of the urban population in the country, while only comprising 6% of India’s total […]
Digital Literacy என்பது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் தேவைப்படும் திறன் என்று பல உலக அமைப்புகள் சொல்கின்றன
அறிவொளித் திட்டத்தில் கையெழுத்து போட்டு படிப்பறிவுக் கணக்கு காட்டுவது எல்லாம் போன நூற்றாண்டு. Digital Literacy என்பது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் தேவைப்படும் திறன் என்று பல உலக அமைப்புகள் சொல்கின்றன. ** 6 வருடங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தேன்..அதுநாள் வரை மடிக்கணினியை தொட்டு பார்த்தது கூட கிடையாது..பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் நான்..எப்போதாவது browsing centre சென்று பயன்படுத்தியது உண்டு.அப்போது கூட கடைக்காரர் வந்து கணினியை ஆன் செய்து கொடுத்தால் தான் […]
திறமையின் அடிப்படையில் மோதாமல் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்?
கேள்வி: திறமையின் அடிப்படையில் மோதாமல் ஏன் இட ஒதுக்கீடு கேட்கிறீர்கள்? பதில்: ஆணுக்கும் பெண்ணுக்கும் எதற்குத் தனித் தனியாக குத்துச் சண்டைப் போட்டி? மேரி கோமுக்குத் திறமை இல்லை என்று எந்த ஆண் குத்துச் சண்டை வீரராவது சொல்வாரா? எல்லாரும் திறமையுடன் தான் மோதுகிறார்கள். ஆண்கள் ஆண்களுடன் பெண்கள் பெண்களுடன், SC – SC, ST – ST, BC – BC, MBC – MBC உடன் தான் போட்டி. Junior junior உடன், sub […]
இட ஒதுக்கீடு தொடங்கியதன் தேவை என்ன?
திறமை திறமை என்ற பெயரில் ஒரே சாதியும் குடும்பமும் கூடிக் கும்மாளம் போட்டுக் கொள்ளை அடித்ததால் தான் இட ஒதுக்கீடு என்ற கொள்கையே வந்தது. 1850களில் ஒரே பார்ப்பனக் குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் பல்வேறு அரசு பணிகளை ஆக்கிரமித்துக் கொண்டு ஆங்கிலேயருக்கே அதிகாரம் இல்லாமல் செய்ததால், அவர்களின் மோசடி, ஊழல், மக்களை ஒடுக்கும் செயல்களைத் தடுக்க முடியாமல் போனதால், ஆங்கிலேயர்கள் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தோருக்கு வேலை தந்து அதிகாரத்தைப் பரவலாக்கத் தொடங்கினார்கள். பார்க்க… முகநூல் உரையாடல்
தமிழக அரசு தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை தருகிறதே? இது சரியா?
கேள்வி: தமிழக அரசு தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை தருகிறதே? இது சரியா? பதில்: கனடா அரசும் சிங்கப்பூர் அரசும் தைப் பொங்கல் கொண்டாடினால் மகிழும் தம்பியே, தமிழக அரசும் அது போல் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டாடினால் ஏன் உனக்குக் கசக்கிறது? பாக்கிஸ்தான் பிரிந்த பிறகு, “உங்களுக்குத் தான் தனி நாடு கொடுத்து விட்டோமே! இந்தியாவில் எதற்கு இசுலாமியருக்கு விடுமுறை” என்று கேட்க முடியுமா? இதைப் போலவே, 1956 வரை இருந்த மதராஸ் மாகாணத்தில் அனைத்து மொழி […]
கலைஞரிடம் இலக்கியத்தில் பிடித்த பாத்திரம் எது?
நேர்முகம் காணும் ஒருவர் கலைஞரிடம் தங்களுக்கு இலக்கியத்தில் பிடித்த பாத்திரம் எது என வினவுகிறார். வந்த பதில்: மணிமேகலையிடம் இருந்ததாகச் சொல்லப்படுகிற அட்சய பாத்திரம். நில உடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வு, சாதியப் படிநிலை ஆகியவற்றால் மக்களில் பெரும்பான்மையானோர் தங்களது உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளப் பெரும் போராட்டம் நிகழ்த்தினர். பஞ்சமும் பட்டினியும் வாடிக்கையான ஒன்று. இதனை மாற்றியமைக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பசுமைப் புரட்சி. இதற்கு முன்பே திமுக உணவு அரசியலை முன்னெடுத்தது. 1967 தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையே […]