இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பனர்களும் மற்ற FC சாதிகளும் தான் பணக்காரர்களாக உள்ளார்கள். இன்னும், தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் தான் பணக்கார சாதிகள். நன்றி: ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அவர்கள் பெயரில் எழுதி வைத்த முட்டாள் ராஜாக்கள். தமிழ்நாட்டில் SC வீட்டு வருமானத்திற்கும் OBC வீட்டு வருமானத்திற்கும் 30% தான் வேறுபாடு. ஆனால், இதுவே பார்ப்பனர்கள் வருமானம் 131% மடங்கு அதிகம். மற்ற எல்லா சாதிகளைக் காட்டிலும் பார்ப்பனர்களில் ஏழைகள் குறைவு. படித்து வேலை பார்க்கிறவர்களும் அதிகம். எனவே, […]
கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா?
கேள்வி: கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கிறீர்களா? பதில்: நான் கல்வியில் தனியார்மயத்தை ஆதரிக்கவில்லை. ஆனால், இன்று கல்வி பரவலாகப் பலருக்கும் கிடைப்பதில் (accessibility; not affordability) தனியாரின் பங்கை ஏற்றுக் கொள்கிறேன். பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு விடுதி கூட இல்லையே என்று தொடங்கியது தான் திராவிட இயக்கம். இந்தியாவிலேயே அதிகமாக ~50% பேர் தமிழகத்தில் உயர்கல்வி பெறுகிறார்கள் என்பது திராவிடத்தின் மாபெரும் சாதனை. ஆனால், * கல்வி தரமில்லை என்கிறார்கள்* கல்வி தனியார்மயமாகி விட்டது […]
நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா?
கேள்வி: நாளையே திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவை எதிர்ப்பீர்களா? பதில்: நீங்கள் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் காரணத்துக்காக திமுகவை ஆதரிக்கிறீர்கள். ஆனால், நான் திமுகவை ஆதரிப்பதற்கு 1000 காரணங்கள் உள்ளன. திமுக அசிங்கம் இருந்தாலும் ஆதரித்துத் தொலைவோம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் தான் அதை விட்டு விலகுவதற்கு ஏதாவது ஒரு காரணம் கிடைக்காதா என்று காத்திருக்கிறார்கள். அதனால் தான் கடந்த காலங்களில் 2G, ஈழம், வாரிசு அரசியல், வாஜ்பாயுடன் கூட்டணி என்று ஏதாவது ஒரு […]
கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ?
கேள்வி: கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ? பதில்: ஒரு சீட்டு வெல்ல முடியாதவன் எல்லாம் அரசியல் கட்சித் தலைவன் என்று சுற்றும் நாட்டில் * 2009 நாடாளுமன்றத் தேர்தலை வென்றவர்* 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்* 2011ல் எதிர்க்கட்சி இடத்தை இழந்தாலும், 2016ல் மீண்டும் 96 இடங்களைத் தன்னுடைய கூட்டணி சார்பாக வென்றவர் ஏன் சீக்கிரமாக ஓய்வெடுக்க […]
Communism
இது வரை உலகில் ஒரு Communist நாடு கூட இல்லை. நாம் Communist நாடுகள் என்று நினைக்கும் சீனா, கூபா எல்லாம் Socialist நாடுகள். உண்மையான Communism மலரும் போது, உலகம் ஒரே குடையின் கீழ் இருக்கும். நாடு என்ற ஒன்றே இருக்காது” – நேற்றைய முகநூல் அரசியல் உரையாடல். பார்க்க… முகநூல் உரையாடல்
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா
காசுள்ளவனுக்கு ஒரு கல்வி இல்லாதவனுக்கு ஒரு கல்வியா என்கிறார்கள். தனியாரை ஒழித்தால் ஒரே தரத்தில் கல்வி கிடைக்கும். ஆனால், எல்லாருக்கும் கல்வி கிடைக்காது. ஆம், காசு இருந்தால் கூட கல்வி கிடைக்காது. இது என்ன கதையாக இருக்கிறதே என்கிறீர்களா? இலங்கையில் உயர் கல்வித் துறை எப்படிச் செயற்படுகிறது என்று அங்குள்ள நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். இன்று இந்தியாவிலேயே அதிகம் மக்கள் கல்லூரிக் கல்வி பெறுவதில் தமிழகம் தான் முதலிடம். வழக்கம் போல, திராவிடத்தின் இந்தச் சாதனையையும் குற்றமாக்கி, […]
உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன?
கேள்வி: உரிமைக் குரல் X வெறி – இது இரண்டுக்குமான வேறுபாடு என்ன? பதில்: ஏதேனும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அந்தச் சாதியின் வேட்பாளர்கள் ஒருவரைக் கூட ஒரு பெரிய கட்சி தேர்தலில் நிறுத்தவில்லை என்று கொள்வோம். எங்கள் சாதி ஆளை நிறுத்துகிற கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்பது சாதி வெறி. எங்கள் சாதியில் இத்தனை இலட்சம் மக்கள் இருக்கின்றனர். அவர்கள் இத்தகைய துயரங்களைப் படுகின்றனர். அவர்களின் துயர் துடைக்க இத்தகைய சட்டங்களும் திட்டங்களும் தேவை. […]
இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்?
கேள்வி: இவ்வளவு தீவிரமாக திமுகவை ஆதரிக்கிறீர்களே! எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பதில்: தலைவர் கலைஞர் கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்க எவ்வளவு பணம் வாங்கினாரோ அவ்வளவு பணம்! பார்க்க… முகநூல் உரையாடல்
அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
கேள்வி: அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சி தான் என்று பல முறை சொல்லி இருக்கிறீர்கள். இப்போது அதை ஏன் எதிர்க்க வேண்டும்? பதில்: ஆம், அதிமுக திராவிடக் கட்சி தான். ஆனால், ஜெயாவும் எம்ஜிஆரும் இருந்த வரை மீண்டும் மக்களிடம் சென்று வாக்கு கேட்க வேண்டுமே என்ற பயமாவது அவர்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் கட்சி தலையில்லாத முண்டமாக கண்டவர்களை எல்லாம் காவு கேட்கிறது. மீண்டும் மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்ற […]
அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது
அரசு சமூக ஊடகங்களை கண்காணிக்கிறது. ஆகவே, அரசியல் பேசாதீர்கள் என்று ரொம்ப நாளாகப் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரங்கராஜ் பாண்டே போன்றோர் ஒரு படி மேலே போய் அரசுக்கு எதிரான கருத்துகள் பாக்கிஸ்தானில் இருந்து வருகிறது, ஒரு டுவீட்டுக்கு 10 ரூபாய் பணம் கட்டுவது போல் மாற்ற வேண்டும் என்று எல்லாம் கதறுகிறார்கள். இவை எல்லாமே இணையத்தில் மோடி எதிர்ப்பு கருத்துகள் பரவுவதைத் தடுக்கவே. Non-veg சாப்பிடுவதைத் தடுக்க முடியாவிட்டால் Non-vegல் விசம் இருக்கிறது என்று […]