69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துகிறோம் என்பதே மிகப் பெரிய மோசடி! SCக்கு 18% இட ஒதுக்கீடு என்றால், அதைப் போக 31% திறந்த இடங்களுக்கும் போட்டி இட்டு வெல்ல முடியும். ஆக, அதிக பட்சம் 49% இடங்களுக்கு அவர்கள் போட்டியிட முடியும். திறந்த போட்டியில் 10% இட ஒதுக்கீட்டுக்குக் கொடுத்து விட்டால், SCக்கள் போட்டியிடக் கூடிய இடம் 39% இடங்களாகக் குறைந்து விடும். இது போலவே ST, BC, MBC […]
மத்திய அரசு தரும் 27% OBC ஒதுக்கீட்டில் உள்ள Creamy layer
மத்திய அரசு தரும் 27% OBC ஒதுக்கீட்டில் Creamy layer என்ற பெயரில் 8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களை நீக்கி விடுகிறார்கள். இருந்தாலும், அது சாதியின் பெயரால் OBC இட ஒதுக்கீடு என்று தான் அழைக்கப்படுகிறது. ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்று அழைக்கப்படுவதில்லை. ஆனால், அதே 8 லட்சம் வருமானத்துக்குக் குறைவாக உள்ள உயர் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டு தரும் போது மட்டும், ஏன் அதனை பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்று […]
69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளலாமே?
கேள்வி: 69% இட ஒதுக்கீட்டுக்குப் பாதகம் இல்லாமல் 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளலாமே? பதில்: 10% பிராடு ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, தற்போது மருத்துவக் கல்லூரி இடங்களில் கூடுதலாக 25% தருவதாகச் சொல்கிறார்கள். இது எப்படிப்பட்ட offer என்றால், “நாங்கள் தனியாக விசம் தர வில்லை. நீங்கள் ஏற்கனவே பருகிற பாலில் தான் விசம் கலக்கிறோம். வேண்டும் என்றால் கூடுதலாக 2 லிட்டர் பால் தருகிறோம்.” என்று சொல்வதற்கு ஒப்பாகும். மருத்துவம் போன்ற படிப்புகளை […]
எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள்
எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள். 1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர். வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறே தெரியாமல் அரசியல் தற்குறிச் சமூகமாகத் தான் சுற்றுக் கொண்டிருக்கிறோம்! ** அறிஞர் அண்ணா எந்த இந்தியை எதிர்த்தாரோ அதே அண்ணா பெயரில் கட்சி நடத்திய மகோரா அவர் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதமாக […]
எல்லோரும் தன் வீட்டில் யாருக்காவது வேலை, படிப்பு கிடைத்தால் தான் இட ஒதுக்கீட்டால் பயன் என்று நினைக்கிறார்கள்.
எல்லோரும் தன் வீட்டில் யாருக்காவது வேலை, படிப்பு கிடைத்தால் தான் இட ஒதுக்கீட்டால் பயன் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு நூற்றாண்டாக இருக்கும் இட ஒதுக்கீடு காரணமாக ஒட்டு மொத்த தமிழகமே ஒரு ஆள் விடாமல் பயன் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மை. இட ஒதுக்கீட்டில் படித்து, வேலை பெற்ற அதிகாரிகள் தான் தமிழகத்தின் கடைக்கோடி வரை வரும் திட்டங்களை வகுக்கிறார்கள். அதற்கு இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் தான் உந்து விசையாக இருக்கிறார்கள். இட […]
நீட் தேர்ச்சி விகிதம் குறித்து இந்த சன் டிவி செய்தி Viralஆக சுற்றிக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்ச்சி விகிதம் குறித்து இந்த சன் டிவி செய்தி Viralஆக சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தத் தகவல் பிழை. நீட் தேர்வு என்பது Percentile அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. அதாவது, நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் Top 50% மாணவர்களில் கடைசி ஆள் எடுத்த மதிப்பெண் தான் General Category Just pass மதிப்பெண் ஆகக் கொள்ளப்படும். இந்த ஆள் 720க்கு 10 மதிப்பெண் பெற்றாலும் அது தான் Just pass. இந்த ஆண்டு இந்த Just […]
MBBS மட்டும் தான் படிப்பா, ஏன் நீட்டை எதிர்க்கிறீர்கள்?
கேள்வி: MBBS மட்டும் தான் படிப்பா, ஏன் நீட்டை எதிர்க்கிறீர்கள்? பதில்: நீட் மருத்துவப் படிப்பில் தொடங்கி இருக்கிறது. ஆனால், இதோடு நிற்காது. அமெரிக்காவில் SAT, GRE தேர்வுகள் இருப்பது போல் இனி எல்லா கல்லூரிப் படிப்புக்கும் இது போன்ற தேசிய அளவிலான தரப்படுத்திய தேர்வுகளை அறிமுகப்படுத்துவார்கள். அதற்கான பயிற்சி, தேர்வு நடத்துவது என்பது மிகப்பெரிய தனியார் வணிகமாக மாறும். இப்போதே அம்பானி குடும்பத்தார் கல்வித் துறையில் பெரும் முதலீடுகளைச் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஒரே நாடு. […]
SSLC, +2 வகுப்புகளில் தோல்வி அடைகிறவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இந்தத் தேர்வுகளைத் தடை செய்து விடலாமா?
கேள்வி: SSLC, +2 வகுப்புகளில் தோல்வி அடைகிறவர்கள் கூட தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, இந்தத் தேர்வுகளைத் தடை செய்து விடலாமா? பதில்: பொதுவாக, எல்லா துறைகளிலும் தோல்வி அடைந்தவர்கள் தற்கொலை நாடுவது தெரிந்தது தான். ஆனால், நீட்டில் தான் வெற்றி பெற்று பெயரும் புகழும் அடைய வேண்டியவர்கள் மாள்கிறார்கள். அனிதா 1176/1200 எடுத்தது தோல்வியா? நீட் சாவுகள் தனிநபர் தோல்வியால் விளைவது அல்ல. அநீதியான சமூகத்தால் விளைவது. 12 ஆண்டுகள் படித்து வாங்கிய மதிப்பெண் செல்லாது […]
கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும்
முனைவர் ஏழுமலை “கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும்” என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். தந்தை பெரியார் முதல் தேசியத் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நீதியரசர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் கருத்துக்கள் மிக அருமையாகத் தொகுக்கப் பட்டுள்ளது. கலைஞர் பிறந்த நாள் நினைவாக இந்த நூலை வாங்கலாம். பிறருக்குப் பரிசு அளிக்கலாம். பெரும் உழைப்பில் சொந்த முயற்சியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு உங்கள் […]
ஆரிய எதிர்ப்பு பேசுவது இன வெறி ஆகாதா? நாம் தமிழர் பேசுவதை மட்டும் இன வெறி என்கிறீர்களே!
கேள்வி: ஆரிய எதிர்ப்பு பேசுவது இன வெறி ஆகாதா? நாம் தமிழர் பேசுவதை மட்டும் இன வெறி என்கிறீர்களே! பதில்: தெலுங்கு பேசும் ஆதிக்கச் சாதிக்காரர் ஒருவரைப் போல்தெலுங்கு பேசும் அருந்ததியர் ஒருவர் பேசும் மொழியின் காரணமாக உயர்வு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள முடியுமா? இங்கு ஆதிக்கம் என்பது சாதி, பொருளாதார வலுவால் வருவது. மொழியால் வருவது அல்ல. மொழியின் பெயரால் ஆதிக்கம் அமையவில்லை என்னும் போது, தமிழர் எதிர் பிற மொழியினர் என்று பகைமை பாராட்டுவது […]