• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

அண்ணா சொல்வதைப் படியுங்கள்

July 18, 2019

மேலாளர்கள் அனைவரும் ஒரே சாதியாக இருந்தால் மற்ற ஊழியர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, நீங்கள் எவ்வளவு தான் உயரிய பதவிகளுக்குப் போனாலும் காசு பணம் வைத்திருந்தாலும் இட ஒதுக்கீடு தேவை என்றேன். நண்பர் ஒருவர் “இதை எல்லா சாதிகளும் செய்கிறார்களே” என்றார். ஆம், இது எல்லா சாதிகளிலும் உள்ளது. அதனால் தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டு எந்த ஒரு சாதிப் பெயரையும் சொல்லவில்லை. சாதியின் பெயரால் யார் குழு சேர்ந்தாலும் அது பார்ப்பனியம் தான். ஒருவரின் உழைப்பு, […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

50% மாணவர்கள் கல்லூரி செல்வதற்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு?

July 16, 2019

50% மாணவர்கள் கல்லூரி செல்வதற்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கும் என்ன தொடர்பு? இது எப்படி ஒரே குடும்பம் பயன் அடையவில்லை என்பதை நிறுவும்? இதோ புதிருக்கான விடை! சாதி என்பது என்ன? ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு தொழில். அதில் 100% கட்டாயச் சேர்க்கை. 100% கட்டாய இட ஒதுக்கீடு. முன்பு இருந்த 0% இட ஒதுக்கீடு என்பது அனைத்துச் சாதிகளுக்குமான அறிவிக்கப்படாத 100% இட ஒதுக்கீடு ஆகும். இன்றும் அர்ச்சகர் வேலைக்கும் மலம் அள்ளும் வேலைக்கும் இந்த […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

Economic and Political Weekly நடத்திய ஆய்வு

July 16, 2019

Economic and Political Weekly நடத்திய ஆய்வில், இந்தியாவின் முன்னணிக் கல்லூரிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினர் சராசரியாக 28% படிக்கிறார்களாம். அதுவும் தனியார் கல்லூரிகளில் இந்த விகிதம் 62% வரை போகிறது. இப்படி ஏற்கனவே பணம் கட்டிப் படித்தும் இடங்களைக் கொள்ளை அடிப்பவர்கள் எப்போது ஏழைகள் ஆனார்கள்? இவர்களுக்கு எதற்கு 10% பிராடு இட ஒதுக்கீடு? (ஆய்வு அறிக்கை மறுமொழியில்) https://www.epw.in/journal/2019/23/commentary/new-reservation-policy.html?fbclid=IwAR3nX4YY3K-BHZi0hnnZ5_rxYfTKJWsq2U8akaiitA8mxZS2oxCrvgNqcjk பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

முன்னேறிய சாதிகளில் ஏழைகளே இல்லையா?

July 16, 2019

கேள்வி: முன்னேறிய சாதிகளில் ஏழைகளே இல்லையா? எனக்குத் தெரிந்த ஒரு அர்ச்சகர் மகள் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? பதில்: அந்த அர்ச்சகர் மகளாவது மருத்துவப் படிப்பு கிடைக்காமல் வேறு ஏதாவது கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருப்பார். ஆனால், எங்கள் அப்பத்தா, அமத்தா, அம்மா, பெரியம்மா, சித்திகள், அத்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கே அனுப்பி வைக்கப்படவில்லை. போவியா அங்கிட்டு! இட ஒதுக்கீடு என்று வரும் போது எல்லாம் இப்படி குதர்க்கமான ஒப்பீடுகள் […]

Filed Under: இட ஒதுக்கீடு

OBC Creamy layer

July 16, 2019

பேருந்துகளில் முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பெண்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த இடங்கள் காலியாக இருந்தால் மற்றவர்களும் அமர்வார்கள். உரிய ஆட்கள் வந்தால் எழுந்து இருக்கை தர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அப்படி இல்லாமல் கூட்டம் நெருக்கியடிக்கும் பேருந்துகளிலும் இந்த இடங்களைக் காலியாகவே வைத்திருப்பது முட்டாள்தனம். அது போலத் தான், இட ஒதுக்கீட்டிலும் யார் விடுபட்டுப் போவார்கள், கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று தரவுகள் சொல்கிறதோ, அவர்களுக்குத் தனியாகச் சில இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல்

அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்?

July 14, 2019

கேள்வி: அது தான் நீட் வந்து 2 செட் மாணவர்கள் தேர்வு எழுதி விட்டார்களே! இன்னும் என்ன போராட்டம்? இதனை ஏற்றுக் கொள்வது அல்லவா புத்திசாலித் தனம்? பதில்: 1938ல் ராஜாஜி இந்தியைத் திணித்தார். 1965 வரை பல உயிர்களைக் கொடுத்துப் போராடி தான் அதனைத் தடுத்து நிறுத்த முடிந்தது. 1920களில் நீதிக் கட்சி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. 1950ல் இந்திய அரசியல் சாசனம் அதனைப் பறித்த போது, போராடித் தான் மீட்டெடுத்தோம். அரசியல் உரிமை […]

Filed Under: திராவிடம், அரசியல், நீட்

நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது.

July 14, 2019

நீட் வந்த பிறகு தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணம் உயர்ந்துள்ளது. அரசு கல்லூரிகளில் இருந்த இடங்களையும் 2,3 ஆண்டுகள் நீட் கோச்சிங் போக வசதியுள்ளவர்கள் அள்ளிப்போகிறார்கள். ஏழை மாணவர்கள் நடுத்தெருவில். இவ்வளவு செலவு செய்து படிக்கும் பணக்காரர்கள் அரசுப் பணிக்கோ ஏழைகளுக்குச் சேவை செய்யவோ வர மாட்டார்கள். அரசு மருத்துவமனைகள் செயலிழக்கும். தனியார் மருத்துவமனைகள் கொழிக்கும். நம் பிள்ளைகள் காலத்தில் வெடித்துச் சிதறக் காத்திருக்கும், மிகப் பெரிய பொது சுகாதாரப் பேரிடர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டிருகிறது மோடி […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், நீட்

நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம்

July 13, 2019

நீட் வந்தால் ஏழைகளும் மருத்துவம் படிக்கலாம் என்று சொன்ன உத்தமர்கள் மேடைக்கு வரவும். பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகள் வரிசையில் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்த மாணவியின் நிலை. இப்போது மருத்துவம் படித்து முடிக்க குறைந்தது 30 இலட்சம் தேவை. நீட் எழுதுகிறேன் என்று ஒரு ஆண்டையும் தொலைத்து விட்டார்! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா?

July 12, 2019

கேள்வி: சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை இப்படி மாற்றலாமா? அல்லது, அப்படி மாற்றலாமா? என்னிடம் ஒரு புதிய முறை இருக்கிறது! பதில்: ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நம்மை விட இந்த முறையைக் கொண்டு வந்த திராவிடத் தலைவர்களும் அண்ணல் அம்பேத்கர் போன்றோரும் அறிவாளிகள் என்பதை ஏற்றுக் கொள்ள நம் egoவை சற்று ஓரமாக வைக்க வேண்டும். ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டையே முறைப்படியும் முழுமையாகவும் அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை ஒழுங்காக இரு தலைமுறைகள் […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

நீட் போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமா?

July 12, 2019

கேள்வி: நீட் போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமா? பதில்: முதலில், இப்படி ஒரு சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது! இரண்டாவது, வசதி வாய்ப்புள்ள எல்லோரும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டுக் கூடுதலாக தனியார் பயிற்சிக்கும் அனுப்பி வைத்து இந்த இடங்களை அபகரிக்கத் தொடங்குவார்கள். நாம் எதற்காக கொண்டு வருகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறாது. இது இன்னொரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது! யார் யாருக்கு அல்லது எந்த அடிப்படைகளில் இட […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், நீட்

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 11
  • Page 12
  • Page 13
  • Page 14
  • Page 15
  • Interim pages omitted …
  • Page 33
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2208