தமிழ்நாட்டில் SBI எழுத்தர் வேலைத் தேர்வில் SC, OBC, GEN எல்லாம் ஒரே cut-off. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. இதற்கு என்ன பொருள்? குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு கால சமூக நீதி ஆட்சி, சாதிகளுக்கு இடையே இடைவெளியைக் குறைத்து அவர்களைப் போட்டியில் வெல்ல தயாராக்கி இருக்கிறது. இத்தனை நாள் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்ற சிலருக்கு வேலை தருகிறது என்று வைக்கப்பட்ட வாதத்தை இந்த cut-off […]
ஒரு சாதிப்பிரிவுக்கான Cut-off எப்படி முடிவு செய்யப்படுகிறது? யார் முடிவு செய்கிறார்கள்?
கேள்வி: ஒரு சாதிப்பிரிவுக்கான Cut-off எப்படி முடிவு செய்யப்படுகிறது? யார் முடிவு செய்கிறார்கள்? பதில்: ஒரு படிப்பு அல்லது வேலையில் மொத்தம் 100 இடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தர வரிசைப் பட்டியல்கள் உருவாக்குவார்கள். ஒன்று சாதியைக் கருத்தில் கொள்ளாமல் General rank list. இன்னொன்று ஒவ்வொரு சாதிப்பிரிவிலும் ஒரு Community rank list. General rank listல் முதல் 31 இடங்கள் பிடித்தோர் பொதுப் பிரிவில் “தானாகவே” இடம் பெறுவர். எந்தச் சாதி என்று […]
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியும் ஏமாற்றுவார்களா என்று எண்ணி மாய்கிறார்கள்! இவர்கள் இதுவும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள் என்று புரிந்து தானே திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக இவர்களை எதிர்த்து வருகிறது! 2019லேயே ஒரு மக்களாட்சி நாட்டில் சட்டப்படி இந்தப் பிராடு வேலை செய்கிறவர்கள், 2000 ஆண்டுகளாக முட்டாள் ராசாக்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு என்னவெல்லாம் கொடுமைகள் செய்திருப்பார்கள்? மற்றபடி, பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் என்ன ஐயர் வீட்டில் […]
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்?
பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்? BCக்குள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களான இசுலாமியருக்கும் SCக்குள் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களான அருந்ததியருக்கும் தருவது போல் ஏதோ உள் ஒதுக்கீடு என்று தானே தோன்றும்! SC/ST/BC/MBCஐ விட பொதுப்பிரிவு ஏழைகளின் மதிப்பெண் கூடுதலாக இருக்கும் என்று தானே எதிர்பார்ப்பீர்கள்? ஆனால், எல்லா ஏழைகளுக்கும் கிடையாது, உயர் சாதிகளுக்குத் தான் என்றார்கள். அட போனால் போகிறது, அந்த உயர் சாதிகளாவது நன்கு படித்து, திறமையான ஆட்களாக இருப்பார்களா என்று […]
SBI clerk முதல்நிலைத் தேர்வு முடிவுகள்
சற்றுமுன் வெளியான SBI clerk முதல்நிலைத் தேர்வு முடிவுகள்!! SC/ST/OBC பிரிவினருக்கும் EWS என்று சொல்லப்படுகிற உயர்சாதிகளுக்கும் இடையே உள்ள Cut-off மதிப்பெண் வேறுபாட்டைப் பாருங்கள்!! பொதுப் போட்டி, SC, OBC எல்லாம் ஒரே Cut-off என்கிற அளவுக்குக் கடுமையான போட்டி உள்ள தேர்வில் 28.5 மதிப்பெண் வாங்கிய அரிய வகை ஏழைகளைத் தேடி வேலை தருகிறார்கள். மலைகளில் வாழ்கிற பழங்குடிகள் கூட 53.75 மதிப்பெண் பெற்றால் தான் வேலை என்னும் போது, நகரங்களில் உட்கார்ந்து தின்கிற […]
சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும்
69% இட ஒதுக்கீடு கொடுக்கும் போது, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, பொருளாதார அடிப்படையில் கொடுக்க வேண்டும் என்பார்கள். இப்போது அரிய வகை ஏழைகளுக்கு என்று 10% இட ஒதுக்கீடு கொடுத்தால் அதை வாங்க ஏன் சாதிச் சங்கத்தைக் கூட்டிப் போராடுகிறார்கள்? ஏன், குறைந்தபட்சம் அனைத்து முன்னேறிய சாதிகளில் உள்ள ஏழைகளுக்கு என்று கூட தனியாக சாதி கடந்த சங்கம் ஒன்றை ஏற்படுத்த முனையவில்லை? பார்ப்பனர்கள் தவிர்த்த வேறு சாதிச் சங்கம் ஏதாவது போராடுகிறதா? பிறகு […]
அதிமுகவுக்குப் பதில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் மட்டும் எப்படி நீட் விலக்கு பெற்றிருக்கும்?
கேள்வி: அதிமுகவுக்குப் பதில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் மட்டும் எப்படி நீட் விலக்கு பெற்றிருக்கும்? இதே சட்டம், இதே நீதிமன்றம் தானே? பதில்: இதே அதிமுக இதே பாஜகவுடன் உரையாடி சல்லிக்கட்டு மாட்டைத் திறந்து விட மட்டும் சட்டம் இயற்றவில்லையா? இதே அதிமுக தானே ஜெயலலிதா உயிரோடு இருக்கிற வரை நீட், GST, உதய் மின்திட்டம் எல்லாம் எதிர்த்தது? அவரை மருத்துவமனையில் படுக்க வைத்து விட்டு அல்லவா தில்லிக்குச் சென்று அமைச்சர்கள் அடிமை சாசனம் எழுதித் தந்தார்கள்? […]
வட நாட்டு ஏகாதிபத்தியம்
இந்தியாவிலேயே மிக அதிக அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைக் கொண்டு நுழைவுத் தேர்வு இல்லாமல் அனைத்துச் சாதி மக்களும் படிக்கும் மாநிலம் எது? தமிழ்நாடு! NEET, 10% கொண்டு வந்து மருத்துவ இடங்களைத் திருடுவார்கள். MD, MS போன்று மேற்படிப்புக்கு NEET தேர்வு வைத்தாலும் அதிக இடங்களை வென்று காட்டும் மாநிலம் எது? தமிழ்நாடு! NEXT கொண்டு வருவார்கள். அப்போது தான் தமிழர்களை MBBSஏ படிக்க விடாமல் முடக்க முடியும். தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குலைப்பதையே இலக்காகக் கொண்டு […]
NEXT தேர்வு
எத்தனைக் காலம் தான் நீட்டை எதிர்த்துப் போராடுவீர்கள் என்று கருணை காட்டிய மோடி அரசு அடுத்து NEXT தேர்வைக் கொண்டு வந்திருக்கிறது. எப்படி நீட் தேர்வு +2 மதிப்பெண்ணைச் செல்லாக்காசு ஆக்கியதோ, அதே போல் இந்த NEXT தேர்வு MBBS படிப்பைச் செல்லாக்காசு ஆக்கப் போகிறது. இன்னும் இந்தத் தேர்வைப் பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கிற தகவல் அச்சமூட்டுவதாக உள்ளது. 1. இனி MBBS படித்தால் மட்டும் மருத்துவராக வேலை பார்க்க முடியாது. நாடு தழுவிய […]
அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.
நிலவரம் தலைப்பை விட மோசம். அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு அரசு உதவி பெறும் பள்ளி மாணவிக்கு மட்டும் தனியார் கல்லூரியில் தான் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கான கட்டணம் இலட்சங்களில் இருக்கும்! http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jul/18/tamil-nadu-government-aided-school-neet-topper-gets-mbbs-seat-in-sf-college-2005616.html பார்க்க… முகநூல் உரையாடல்