பேருந்துகளில் முதியோருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு, பெண்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அந்த இடங்கள் காலியாக இருந்தால் மற்றவர்களும் அமர்வார்கள். உரிய ஆட்கள் வந்தால் எழுந்து இருக்கை தர வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
அப்படி இல்லாமல் கூட்டம் நெருக்கியடிக்கும் பேருந்துகளிலும் இந்த இடங்களைக் காலியாகவே வைத்திருப்பது முட்டாள்தனம்.
அது போலத் தான்,
இட ஒதுக்கீட்டிலும் யார் விடுபட்டுப் போவார்கள், கூடுதல் சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்று தரவுகள் சொல்கிறதோ,
அவர்களுக்குத் தனியாகச் சில இடங்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அருந்ததியர்கள், இசுலாமியர்களுக்கு, பெண்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தருவது போல.
அதை விட்டு விட்டு OBC Creamy layer போல் முதலிலேயே கழித்துக் கட்டி விட்டு இடங்களைக் காலியாகவே வைத்திருக்கக் கூடாது.
இட ஒதுக்கீடு என்பது இயன்றவரை எல்லோரையும் உள்ளடக்குவதே (Inclusion). முதலிலேயே முன்முடிவுடன் கழித்துக் கட்டுவது (Exclusion) அல்ல.