கேள்வி: OBC/BC/MBCக்கள் ஏன் பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்கிறார்கள்? தலித்களைச் சுட்டாமல் தங்கள் சாதிக்கு நேர்ந்த இழிவுகளைச் சுட்டி இட ஒதுக்கீடு கோர முடியாதா?
பதில்:
ஏதோ திராவிடத்துக்கு இட ஒதுக்கீடு என்றாலே என்னவென்று தெரியாதது போலவும்,
இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து தலித்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த பிறகு, அதைச் சுட்டி OBCக்கள் இட ஒதுக்கீடு கேட்பதாக நினைப்பதாலுமே இந்தக் குழப்பம்.
திராவிடம் எப்போதும் பார்ப்பனர் எதிர் பார்ப்பனர் அல்லாதார் என்றே அரசியலைக் கட்டமைத்தது. தலித்கள் உட்பட்ட பார்ப்பனர் அல்லாத அனைவருக்குமான உரிமையைத் தான் கேட்டது.
1921. எடுத்த எடுப்பிலேயே பார்ப்பனர் அல்லாத இந்துக்கள், இசுலாமியர், கிறிஸ்தவர், ஆதி திராவிடர் என்று ஒவ்வொரு வகுப்புக்கும் இட ஒதுக்கீடு கேட்டது தான் திராவிட வரலாறு.
இந்திய விடுதலைக்கு முன்பு இருந்து இழந்த இந்த உரிமையைத் தான் இப்போதும் கோருகிறோமே ஒழிய,
பக்கத்துக்கு இலைக்குப் பாயாசம் கேட்க வேண்டிய தேவை திராவிடத்துக்கு இல்லை.
ஒரு அநீதி நடக்கிற போது, சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் தான் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுப்பது தான் மெய்யான அரசியலே தவிர,
பாதிக்கப்பட்டவர் தன் சாதியா என்று பார்த்துக் குரல் கொடுப்பதற்குப் பெயர் அரசியல் இல்லை.
சொல்லப் போனால்,
1950ல் உச்ச நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பெரியாரும் அண்ணாவும் போராடி இந்திய அரசியல் சாசனத்தின் முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வராவிட்டால்,
யாருமே இங்கு பாயாசம் குடித்திருக்க முடியாது என்பது தான் அரசியல் வரலாறு.
பார்க்க… முகநூல் உரையாடல்