கேள்வி: OBC இட ஒதுக்கீட்டிலும் பொருளாதார அடிப்படை இருக்கிறது தானே? 10%ல் மட்டும் ஏன் அந்த அடிப்படையை எதிர்க்க வேண்டும்?
பதில்:
மத்திய அரசின் OBC இட ஒதுக்கீட்டில் இருக்கும் Creamy layer முறை தவறு. தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீட்டில் Creamy layer இல்லை. தமிழ்நாடு இதனை எதிர்க்கிறது.
OBC இட ஒதுக்கீடு என்பது சாதி அடிப்படையிலானது.
அம்பேத்கர் அவரது காலத்திலேயே செய்ய முயன்று முடியாமல் போனது.
1979ல் அமைக்கப்பட்ட மண்டல் கமிசன், எந்த எந்தச் சாதிக்கு எல்லாம் இட ஒதுக்கீடு தரலாம் எனக் கள ஆய்வு செய்து, 1983ல் அறிக்கை தருகிறது.
1989ல் வி.பி. சிங் ஆட்சி வருகிற வரை அது கிடப்பில் போடப்படுகிறது.
அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் நீதிமன்றம் இழுத்தடித்தது.
இன்னும் அரசின் அனைத்து நிலைகளிலும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவ்வளவு போராட்டமும் எதற்கு?
நாங்களும் அதிகாரத்தில் பங்கெடுக்க வேண்டும். எங்களை உள்ளே விடு என்பதற்கான போராட்டம்.
இவ்வளவு போராடி உள்ளே போனால் அவன் என்ன சொல்றான்?
உங்க அப்பன் கொஞ்சம் பணம் வைச்சிருக்கான். குமாஸ்தா மகன் கலெக்டர் ஆக வேண்டாம். வெளிய போடாங்கிறான்.
ஆனால், 10% பிராடு சொல்வது என்ன?
நம்பளவா எல்லாம் காலம் காலமா அரசாங்கத்துல உட்கார்ந்து தின்னு உடம்பு வளர்த்திட்டு இப்போ வெளிய கஷட்ப்படறாளே, நீங்க எல்லாம் ஏழைங்க, உள்ள வாங்கடா அம்பி அப்படிங்கிறான்.
Creamy layer என்பது அரசியல் சட்டத்திலேயே இல்லாமல் நீதிமன்றம் செய்த பார்ப்பனியச் சூழ்ச்சி.
அரசியல் சட்டத்தில் இருந்திருந்தால் அம்பேத்கர் காலத்தில் அதை SC/STக்கும் செய்திருக்க முடியும் அல்லவா?
சாதி அடிப்படையில் பணம் என்பதை நைச்சியமாகக் கொண்டு வந்து Creamy layerஐ த் திணித்தார்கள்.
இப்போது, அதே பணத்தை அடிப்படையாக வைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உருவாக்கி,
இது சரி தானோ என்று நம்மையே குழப்பி விட்டிருக்கிறார்கள்.
இது தான் பார்ப்பனீயம் இயங்கும் முறை.
அதனால் தான், இந்த 10% பிராடு என்பது சமூக நீதித் தத்துவத்திற்கே வேட்டு வைக்கும் சதி என்கிறோம்.
ஒரே பணம்.
நம்மை வெளியே போகச் சொல்வதற்கும்
அவனை உள்ள வரச் செய்வதற்கும்
அடிப்படை ஆகிறது.
வெளியே போடா சூத்திர நாயே என்பது தான் தீண்டாமை.
அதற்கு Creamy layer என்று வழுவழுப்பான ஒரு பெயரைச் சூட்டியிருக்கிறான்.