• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / அரசியல் / OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா?

OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா?

July 29, 2019

கேள்வி: OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா?

பதில்:

யார் OBC? அது என்ன ஒரே சாதியா? இல்லை, நான் பிறந்த சாதியா?

உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், சிலை வடிப்பவர்கள், நகை செய்பவர்கள், ஆடு/மாடு மேய்ப்பவர்கள், காட்டிலும் மேட்டிலும் வேலை செய்பவர்கள் என்று நூற்றுக் கணக்கான சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள்.

பல மொழி பேசுகிறவர்கள்.

கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் என்று பல மதங்களைச் சேர்ந்தவர்கள்

தமிழகத்தின் மக்கள் தொகையில் 70% OBC எனப்படுகிற BC, MBC மக்கள்.

அதாவது, 4 கோடியே 70 இலட்சம் மக்கள்!

எத்தனையோ கொடுமைகளுக்குத் தலித், பழங்குடி மக்கள் ஆளானாலும்,

அவர்களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு, அனைத்து கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என்று அரசியல் சாசன உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இது எதுவுமே இல்லாத மொக்கைப் பீசுகள் OBC மக்கள்.

ஆனால், இந்தச் சூத்திர அடிமைகளை ஆண்ட சாதிப் பரம்பரை என்று வெறியேற்றி நமக்குள் அடித்துக் கொள்ள வைப்பதே பார்ப்பனீயச் சூழ்ச்சி.

யாரோ சிலர் எனக்கு உத்தமப் புத்திரன் பட்டம் தருவதற்காக இந்த மக்களின் நலன் பற்றிப் பேசாமல் இருந்தால் தான் குற்றம்.

இத்தனை கோடி மக்களின் நலனுக்காப் பேசுவது குற்றம் எனில்,

இந்தக் குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்வதே என் அரசியல்.

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2379