எத்தனைக் காலம் தான் நீட்டை எதிர்த்துப் போராடுவீர்கள் என்று கருணை காட்டிய மோடி அரசு அடுத்து NEXT தேர்வைக் கொண்டு வந்திருக்கிறது.
எப்படி நீட் தேர்வு +2 மதிப்பெண்ணைச் செல்லாக்காசு ஆக்கியதோ, அதே போல் இந்த NEXT தேர்வு MBBS படிப்பைச் செல்லாக்காசு ஆக்கப் போகிறது.
இன்னும் இந்தத் தேர்வைப் பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கிற தகவல் அச்சமூட்டுவதாக உள்ளது.
1. இனி MBBS படித்தால் மட்டும் மருத்துவராக வேலை பார்க்க முடியாது. நாடு தழுவிய NEXT தேர்வில் தேர்ச்சி பெற்று Medical practitioner license பெற வேண்டும்.
2. இந்த NEXT தேர்வில் என்ன மதிப்பெண் பெறுகிறாரோ அதன் அடிப்படையிலேயே மேற்படிப்புக்கு இடம் கிடைக்கும்.
3. NEXT தேர்வில் ஒரு முறை பெறுகிற தேர்ச்சி மதிப்பெண்ணே இறுதியானது. முதல் முறை சரியான மதிப்பெண்கள் பெறாவிட்டால் மேற்படிப்பில் நல்ல பிரிவு கிடைக்காது. அல்லது, மேற்படிப்பு வாய்ப்பு கிட்டாமலேயே போகலாம்.
4. வெறும் MBBS மட்டும் படித்துவிட்டு நல்ல Career அமையாது என்பதால், மருத்துவம் படிக்க ஆர்வம் காட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும். பரம்பரை மருத்துவர்களும் பணக்காரர்களும் மட்டும் மருத்துவம் படிக்க வருவார்கள். இது மருத்துவத் துறை தனியார்மயத்தை இன்னும் தீவிரமாக்கும்.
5. படிக்கிற காலத்தில் மருத்துவப் பயிற்சி முறைகளைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டாமல், இன்னொரு நுழைவுத் தேர்வுக்குத் தயாராவதில் மாணவர்கள் நேரம் செலவழிப்பார்கள். வழக்கம் போல, தட்டுத் தடுமாறி MBBS நுழைந்த ஊரக, தமிழ் வழிய, ஏழை மாணவர்கள் விழி பிதுங்குவார்கள்.
6. மருத்துவக் கல்வி மீதான கல்லூரி, பல்கலை அமைப்புகள், மாநில அரசின் மீதான பங்கு நீர்த்துப் போகும்.
மயக்கம் வருகிறதா?
அடுத்து புதிய தேசியக் கல்விக் கொலை என்று ஒரு Special item வருகிறது. அது 1000 நீட், NEXTக்குச் சமமானது.
அதாவது +2 படித்தால் தானே கல்லூரி நுழைவுத் தேர்வு பற்றி பேசுவீர்கள் என்று
3, 5, 8 வகுப்புகளிலேயே நாடு தழுவிய பொதுத் தேர்வு நடத்துகிறது.
எட்டாவதில் தோல்வியுற்றால் ஏதாவது ITI, Poytechnic போய் சேர்ந்து விட வேண்டியது தான்.
அப்படியே +2 முடித்தால் BSc, BA முதற்கொண்டு எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு வரப் போகிறது.
இந்த நாடும் நாட்டு மக்களும் உண்மையிலேயே நாசமாகப் போகிறார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்