IT துறை உச்சத்தில் இருந்த போது ஒரு சில கல்லூரிகளில் ஆயிரக்கணக்கில் கூட புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தார்கள். Projectஏ வந்து சேராவிட்டாலும் மாதக்கணக்கில் Benchல் தயார் நிலையில் வைத்து இருந்தார்கள். கல்லூரியில் படித்த பாடம் போதவில்லை என்று சொன்னாலும், அவர்களே மாதக் கணக்கில் பயிற்சி அளித்தார்கள்.
ஆனால், பொருளாதாரம் மந்தமானால், ஏற்கனவே பல ஆண்டுகள் வேலை பார்க்கிறவர்களைக் கூட திறமை போதவில்லை என்று வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்கள். மறந்தும், உங்களுக்குத் தகுதி இருக்கிறது தங்களிடம் தான் வேலை இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.
ஆக, ஒரு ஆளுக்கு வேலை செய்யும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை சந்தை தான் தீர்மானிக்கிறது. ஒரே ஆள் வெவ்வேறு சூழ்நிலைகளில் தகுதி உள்ள ஆளாகவும் தகுதி இல்லாத ஆளாகவும் மாறி விடுகிறார்.
இதே போல் தான் படிப்பும்.
நாட்டில் நிறைய கல்லூரிகள் இருந்தால் எல்லோரையும் படிக்க வைக்கலாம்.
இருப்பதே நான்கு கல்லூரிகள் தான் என்றால் தகுதி இல்லை என்று சொல்லி எல்லாரையும் வடிகட்டுவதைத் தவிர வேறு இல்லை.
ஆனால், இந்தத் தகுதி இல்லை என்ற சொல் சுடுகிறது.
எங்களுக்கு உங்களைப் படிக்க வைக்க வக்கில்லை என்று வேண்டுமானால் சூடு சொரணை உள்ள அரசாங்கம் சொல்லிக் கொள்ளட்டும்.
பார்க்க… முகநூல் உரையாடல்