1990கள். புதுக்கோட்டை. என் சொந்த மாவட்டம். இந்தப் படத்தில் உள்ள பெண்கள் எல்லாம் என் அத்தைகளையும் சித்திகளையும் போல் இருக்கிறார்கள்.
பெண்களுக்கு சைக்கிள் ஓட்டப் பயிற்சி கொடுக்க என்று ஒரு திட்டம். அதில் இந்தியாவிலேயே 100% பெண்கள் சைக்கிள் ஓட்டத் தெரிந்த மாவட்டம் என்று விருது.
வெறும் 30 ஆண்டுகள் முன்பு இப்படித் தான் இருந்திருக்கிறது தமிழகம்.
இங்கு தானாய் எதுவும் மாறிவிடவில்லை.
இலவச மிதிவண்டி என்று நீங்கள் சொல்வது ஒரு சமூகத்தின் வாழ்க்கையையே புரட்டிப் போட முடியும். ஆதாரங்களுக்கு மறுமொழி வாருங்கள்.
அன்று சைக்கிள் ஓட்டக் கொடுத்த பயிற்சி இன்று ஸ்கூட்டி வரை வந்திருக்கிறது.
ISROவில் புகுந்து ராக்கெட் விடாமல் ஓய மாட்டோம்.
Mind voice: Ravishankar, control the emotion please!
தகவலுக்கு நன்றி – M.m. Abdulla Sundaram Kannan