தமிழக அரசின் Group 1 தேர்வு விவரம் பாருங்கள். இது, IAS/IPS தேர்வுக்கு நிகரானது.
மொத்தம் தேர்வானவர்கள் – 170
பெண்கள் – 120
ஆண்கள் – 50
முன்னேறிய சாதியைச் சேர்ந்தவர் – 1
இது தான் தமிழ்நாடு! இதனால் தான் தமிழ்நாடு திராவிடக் கோட்டையாகத் திகழ்கிறது !
இத்தகைய தமிழ்நாட்டில் 10% முன்னேறிய சாதி இட ஒதுக்கீடு கொடுத்தால், நேரடிப் போட்டியில் வெல்லத் தகுதி அற்ற 17 பேர் அரசின் உச்ச பதவிகளைப் பெறுவார்கள்.
அதற்குப் பிறகு அவர்கள் என்ன அரசியல் செய்வார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
இதே தேர்வில் 70% பெண்கள் வெற்றி. பெரியார் மண் 🙂
மக்கள் தொகை அடிப்படையில் பெண்கள் 50% மட்டும் தான் பெறலாம் என்று சொன்னால், அவர்கள் திறமை இருந்தும் 20% இடங்களை இழப்பர்.
ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்கு குறைந்தபட்ச இட ஒதுக்கீடும் நியாயமான போட்டியும் தேவை.
இந்தக் காரணத்தால் தான் சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி பிரிதிநிதித்துவம் என்ற பெயரில் 3% இடங்களைக் கூட ஒதுக்க வேண்டாம், அது வீணே இடங்களை விட்டுக் கொடுப்பதாகி விடும் என்கிறேன்.
இப்போது இருக்கிற 69% இட ஒதுக்கீட்டையே முறையாக இரண்டு தலைமுறைகளுக்கு நடைமுறைப்படுத்தினாலேயே, எல்லா போட்டிகளிலும் நம்மால் வெல்ல முடியும்.
பார்க்க… முகநூல் உரையாடல்