EWS என்றால் என்ன? 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள்.
OBC என்றால் என்ன? அவர்களும் இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றாலும், 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் தான்.
ஆண்டு வருமான அடிப்படையில்,
EWS = OBC.
அரிய வகை ஏழைகளின் Cut-off
SC/ST cut-offக்கு இணையாகவாவது அல்லது கூடுதலாகவாவது
இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அப்போ, EWS போல் அதே வருமானம் உள்ள OBC மட்டும் என்ன தக்காளி தொக்கா?
சாதியால் பிற்படுத்தப்பட்டு, முதல் தலைமுறையாகப் பட்டதாரி ஆகும் விவசாயி மகனும் மீனவர் மகளும் வண்ணார் மகனும் நாவிதர் மகளும் (OBC) பெறும் மதிப்பெண்ணை விட,
சாதியால் முன்னேற்றம் கண்டு, தலைமுறை தலைமுறையாக நல்ல படிப்பும் அரசு வேலையும் உள்ள உயர் சாதியினர் பிள்ளைகள் 0.01 மதிப்பெண்ணாவது கூடுதலாக எடுக்க வேண்டுமா வேண்டாமா?
ஆம், வேண்டும்.
அதைத் தான் இத்தனை நாள் General cut-off என்று வைத்திருந்தோம்.
அந்தப் பொதுப்பிரிவில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தருகிறோம் என்று செய்த பிராடு வேலை தான்
இன்று முட்டை மதிப்பெண் பெற்றாலும் அவர்களுக்கு வேலை உறுதி என்ற நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
பார்க்க… முகநூல் உரையாடல்