அறிவொளித் திட்டத்தில் கையெழுத்து போட்டு படிப்பறிவுக் கணக்கு காட்டுவது எல்லாம் போன நூற்றாண்டு. Digital Literacy என்பது 21ஆம் நூற்றாண்டில் மிகவும் தேவைப்படும் திறன் என்று பல உலக அமைப்புகள் சொல்கின்றன.
**
6 வருடங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தேன்..அதுநாள் வரை மடிக்கணினியை தொட்டு பார்த்தது கூட கிடையாது..பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் நான்..எப்போதாவது browsing centre சென்று பயன்படுத்தியது உண்டு.அப்போது கூட கடைக்காரர் வந்து கணினியை ஆன் செய்து கொடுத்தால் தான் பயன்படுத்த தெரியும்..இப்படித்தான் எனது digital literacy இருந்து வந்தது..12ம் வகுப்பிற்கு பின்னர் கணினி அறிவியல் துறையைத் தேர்வு செய்தேன்..சொந்தமாக கணினி இன்றி computer science துறையில் சோபிக்க முடியாது என்ற நிலையில் மாண்புமிகு தமிழக அரசு வழங்கிய மடிக்கணினி கைகொடுத்தது…நான் பயின்ற கல்லாரியில் இருந்த கணினியை விடவும் higher specifications+open source operating system உடன் அரசு மடிக்கணினி இருந்தது.. browsing centre ல் ms-paint மட்டுமே தெரிந்த வைத்திருந்த நான் என் கல்லூரி காலங்களில் cyber security ஐ விருப்பமாக தெரிவு செய்து தமிழக அரசின் மடிக்கணினியில் இணையம் வாயிலாக பயின்றேன்..அத்துடனே இந்திய ஆட்சிப் பணிக்கும் பயிற்சி பெற ஆரம்பித்தேன்..தமிழகத்தில் திண்டுக்கல் எனும் சிற்றூரில் இருக்கும் எனக்கு ஆட்சிப்பணிக்கு தேவையான குறிப்புகளை பெறவும் youtube வழியே காணொளி பயிற்சி பெறவும் மாண்புமிகு தமிழக அரசு வழங்கிய மடிக்கணினி உதவியது..இன்றளவும் அதே மடிக்கணினியில் தான் ஆட்சிப்பணிக்கு பயின்று வருகிறேன்
பார்க்க… முகநூல் உரையாடல்