Computer, TV, Mixie, Grinder, Fan எல்லா மக்களுக்கும் அரசு கொடுத்தால் கேவலம்.
ஆனால், முட்டாள் மன்னர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் கணக்கில் ஒரே ஒரு சாதியினர் மட்டும் வாங்கி வைத்துக் கொண்டால் அதற்குப் பெயர் சாத்திரம்.
**
தஞ்சாவூர் சமஸ்தானத்தை ஆண்ட அந்த மன்னரு நாள், கிழமை பாக்காம எந்தக் காரியமும் செய்ய மாட்டாராம். ஒருநாள் ஏதோ வெளியூர்ப் பிரயாணம் போனதால அன்னைக்கு ஏகாதசின்னு தெரியாம சாப்பிட்டு முடிச்சதும் வெற்றிலை போட்டுட்டாராம்.
“அய்யய்யோ ஏகாதசியும் அதுவுமா இப்பிடி பண்ணிட்டேளே”ன்னு வேதம் அறிஞ்ச ஜோஷியக்காரர் ஒருத்தர் பீதியை ஏற்படுத்த, அதுக்கு என்ன பரிகாரம்னு மன்னர் கேட்டிருக்கார்.
உடனே, “என்னைய மாதிரி 40, 50 பிராமணாளுக்கு வீடு, வாசல், கிணத்தோட 50 ஏக்கர் நிலத்தையும் குடுத்து, ஒரு கிராமத்தை ஏற்படுத்திக் கொடுத்தேள்னா எல்லாம் சரியாய்ப்புடும்” என்று பக்குவம் சொல்லியிருக்கார். மன்னரும் அப்படிச் செஞ்சு பெரிய பாவ காரியத்துல இருந்து தப்பிட்டார்.
எழுதியவர் – கே.கே.மகேஷ்
ஆதாரம்: உ.வே.சா எழுதிய என் சரித்திரம் நூலில், தன் ஊரின் வரலாறாகப் பதிவு செய்திருப்பதில் இருந்து