உங்களுக்குத் தெரியுமா?
இந்திய விடுதலைக்கு முன்பு மதராஸ் மாகாணத்தில் 100% இட ஒதுக்கீடு இருந்தது. அதில் பார்ப்பனர்களுக்கு 17% தனி ஒதுக்கீடு இருந்தது!
இந்த இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இல்லாமல் இசுலாமியர், கிறிஸ்தவர்/ஆங்கிலோ இந்தியர், இந்துக்கள் என்று வகுப்பு வாரியாக (Communal G.O) அமைந்திருந்தது.
.
1947ல் தான் மதராஸ் மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்த பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குத் தனியாக 14% இட ஒதுக்கீடு அளித்தார்கள்.
ஆனால், 1927 முதலே மக்கள் தொகையில் 3% மட்டுமே இருந்த பார்ப்பனர்களுக்கு 17% இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்களைப் பகைத்துக் கொண்டு சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதால், அவர்கள் மக்கள் தொகையைக் காட்டிலும் 5 மடங்கு இடம் ஒதுக்கப்படுகிறது.
ஆனாலும் இந்த இட ஒதுக்கீடு அநீதி என்று வழக்காடித் தான் Communal G.O. செல்லாது என்று உச்ச நீதிமன்றத்தில் தோற்கடித்தார்கள். அதிலும் இது எவ்வளவு பெரிய மோசடி என்றால், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பம் கூட போடாத ஒருவர் தான் பார்ப்பனர் என்பதால் தனக்கு இடம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்து வெல்கிறார்.
1934லேயே “சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இட ஒதுக்கீட்டுச் சட்டம்” என்று ஒரு சட்டம் மூலம் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டிருந்தது.
ஆயினும், இந்தியா விடுதலை அடைந்து ஒன்றரை மாதத்திலேயே இந்தச் சட்டம் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது. அன்று இழந்த OBC வேலைவாய்ப்பு உரிமையை மீட்க இன்று வரை போராடிக் கொண்டிருக்கிறோம்.
விடுதலைக்குப் பிறகு அண்ணல் அம்பேத்கர் கொண்டு வந்த சட்டத்திலும் முதலில் வேலைவாய்ப்புகளுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருந்தது.
கல்விக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று போராடி இந்திய அரசியல் சாசனத்தைத் திருத்த வைத்தவர் தந்தை பெரியார்!
தொடர்புடைய கட்டுரை – இட ஒதுக்கீடா ! ஆங்..செல்லாது ! செல்லாது !
பார்க்க – முகநூல் உரையாடல்