Coaching centerகள் பல இலட்சம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரும் அந்த அதி உன்னத short cut இது தான்.
A, B, C, D என்று multiple choice உள்ள Negative Markingம் உள்ள எல்லா தேர்வுகளிலும்,
* ஒரு கேள்விக்கு சரியாக இவ்வளவு தான் நேரம் என்று வகுத்துக் கொள்ளுங்கள்.
* ஒரே கேள்விக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க நிறைய நேரம் செலவழிக்காதீர்கள். பதில் தெரியவில்லை என்றால் அடுத்தடுத்த கேள்வி என்று வினாத்தாளின் இறுதி வரை முதலில் சென்று விடை தெரிந்த அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் எழுதி விடுங்கள்.
* எது சரியான பதில் என்று பார்ப்பதை விட, A, B, C, D எது நிச்சயம் தவறாக இருக்கக் கூடிய விடை என்று பார்த்து நீக்கி விடுங்கள்.
1+1 = ?
a) 3
b) இந்தியா
c) குதிரை
d) 2
என்று கேட்டால் விடை ஏதோ ஒரு எண்ணாகத் தான் இருக்க முடியும் என்று நமக்குத் தெரியும். எனவே, இந்தியாவையும் குதிரையையும் விட்டு விடுங்கள். 1+1= 2 என்று விடை தெரிந்தால் அதை எழுதுங்கள்.
இல்லாவிட்டால், சரியாக இருக்கக் கூடிய இரு விடைகளில் உங்களுக்கு அதிகம் நம்பிக்கை தரும் விடையை எழுதுங்கள். சுத்தமாக ஒரு ஐடியாவும் இல்லாவிட்டால், இரண்டில் முதலாவதாக வரிசையில் உள்ள விடையை எழுதுங்கள்.
இதுவே,
237*986 = ?
என்று கேட்டால் இரண்டு எண்களையும் முழுதாகப் பெருக்கிக் கொண்டு இருக்காதீர்கள்.
7*6=42.
எனவே, விடைகளுள் கடைசி எண் 2 என்று வரும் தெரிவு சரியாக இருக்க வாய்ப்பு உண்டு. மற்றவை உறுதியாகப் பிழை.
விடையளிப்பதை இப்படி அணுகுவதன் மூலம் உங்கள் நேரம் மிச்சமாகும்.
சரியான விடைக்கு 4 மதிப்பெண் என்றால் தவறான விடைக்கு 1 மதிப்பெண் கழிப்பார்கள். எனவே, 4 கேள்விகளில் 1 சரியாக வந்தாலும் உங்களின் இந்த Guessing ஆட்டம் பயன் தரும். இந்த அளவு தெரிந்து Guess அடிக்க வேண்டும்.
எல்லா கேள்விகளுக்கும் Guess அடித்தால், நீங்கள் ஏற்கனவே எழுதிய சரியான விடையின் மதிப்பெண்ணும் போய் விடும். எனவே, அளவுக்கு மீறி போகும் போது, சில கேள்விகளுக்குப் பதிலே எழுதாமல் கூட விடலாம்.
பள்ளிக்கல்வி முறை நமக்கு எது சரியான விடை என்ற தேடலைத் தரும். அந்தப் பயிற்சியில் இருந்து விலகி, தவறான விடைகளை முதலில் நீக்கி, அதிகம் சரியாக இருக்கக் கூடிய விடையைத் தேர்ந்தெடுக்கும் பயிற்சியைத் தான் Coaching centreகள் அளிக்கின்றன.
வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்