இந்தியை எதிர்த்ததால் தமிழகம் பெற்றது என்ன, எதிர்க்காததால் கேரளா இழந்தது என்ன என்று கேட்கிறார்கள். அதாவது மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் எல்லாம் இந்தியை எதிர்க்காமலேயே தங்கள் மொழியைத் தக்க வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஏன் இந்தியை எதிர்த்தோம் என்று ஓவராக கூவுகிறீர்கள் என்கிறார்கள். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழகத்தில் மட்டும் இந்தியை எதிர்த்துப் போராடியதில்லை. அன்று இந்தியை எதிர்க்காவிட்டால் இந்திய அரசின் ஒற்றை ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருந்திருக்கும். //The Indian constitution, in […]
திராவிடம்
அதிமுக ஒரு திராவிடக் கட்சியா?
பதில்: இதயம் பலகீனமானவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். அதிமுக என்பது என்ன? 1949ல் தொடங்கிய திமுக, 1972ல் பிளவுற்று அதிமுக பிறக்கிறது. அதிமுகவின் அடித்தளம் 23 ஆண்டுகள் திமுகவிலும் அதற்கு முன்பு திராவிட இயக்கத்தின் மீதும் கட்டமைக்கப்பட்டது. பெரியார் என்னும் மருந்தைத் திமுக தேன் தடவித் தருகிறது என்று அறிஞர் அண்ணா சொன்னார். அந்த மருந்தில் நிறைய தண்ணீர் கலந்த பானம் தான் அதிமுக. ஆனால், அது ஒரு போதும் பாலில் விசம் கலக்கும் சங்கி […]
இது தான் திராவிடத்தின் பொருளாதார நீதி.
உங்களுக்குத் தெரியுமா? 1960களில் ஒவ்வொரு கிராமத்துக்கும் வானொலி அறை கட்டி கிராம மக்கள் கேட்பதற்காக ஒரு வானொலியும் இரண்டு ஒலி பெருக்கிகளும் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் செய்தியும் விவசாய அறிவுரையும் ஒலிபரப்பப்படும். ஒரு வானொலி வாங்கக் கூட காசு இல்லாமல் இருந்த சமூகம். பணக்காரர்களிடம் மட்டுமே வானொலி இருக்கும். எல்லாரும் வானொலி வாங்க முடிந்த காலத்தில், பணக்காரர்களிடம் தொலைக்காட்சி இருந்தது. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பஞ்சாயத்து டிவி கொடுத்தோம். மக்கள் அன்று வேட்டி, சேலை, உணவு கூட […]
ஆண்டான் அடிமைக் காலம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் உங்கள் உள்மன அரிப்பா?
1990கள் வரை தீபாவளி அன்று பண்ணையார்கள் வீடுகளில் பலகாரம் வாங்க அக்கம் பக்கம் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகள் வருவார்கள். ஏன் அன்றாடம் கூட இரவு வேளைகளில் எஞ்சிய உணவை வாங்கிக் கொள்ள தட்டை ஏந்திக் கொண்டு வருவார்கள். நாட்டாமை, சின்னக் கவுண்டர் என்று நீங்கள் பார்க்கிற பண்ணையார் படங்களில் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை அளிக்கும் காட்சிகள் தவறாமல் வரும். இன்று இந்த வேலையை அரசு செய்கிறது. மக்கள் பிச்சையாக இல்லாமல் உரிமையாக வாங்கிக் […]
அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா?
கேள்வி: அடித்தட்டு மக்கள் எவ்வளவோ செலவு செய்கிறார்கள். அரசு தராவிட்டால் அவர்கள் தானாகவே தொலைக்காட்சி வாங்கிக் கொள்ள மாட்டார்களா? பதில்: இந்தியாவில் தொலைகாட்சிகள் வைத்திருப்போர் 47% மட்டுமே. GDPல் இந்தியாவின் முதன்மை மாநிலமான மராட்டியத்தில் இது 56% தான். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு இதனை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து முடித்து விட்டது. தொலைக்காட்சிகள் இருக்கும் வீடுகளில் குடும்ப வன்முறை குறைகிறது, வாழ்க்கைத் தரம் கூடுகிறது என்று பல பல சமூக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. […]
அரசு தரும் மடிக்கணினியில் எல்லாரும் பாட்டு கேட்கிறார்கள். படம் பார்க்கிறார்கள். இது எல்லாம் வீண் இல்லை?
பதில்: நாம் எல்லாரும் காசு கொடுத்து கணினியும் இணையமும் வாங்கிய பிறகு என்னவெல்லாம் செய்வோமோ அவை எல்லாவற்றையும் அரசின் பயனாளிகளும் செய்யலாம். நீங்கள் பங்குச் சந்தையில் பங்குகள் வாங்கினால் கூட எது நல்ல பயனைத் தரும் என்று தெரியாது. அதற்காகத் தான் கலவையாகப் பல நிறுவனப் பங்குகளை வாங்குகிறீர்கள். இது பங்குச் சந்தை முதலீடு. நாளைய சமூகத்தில் யார் சச்சின், ஏ. ஆர். ரஹ்மான், கலாம் என்று நமக்குத் தெரியாது. ஆனால், அவர்களுக்கு இன்று எல்லா வாய்ப்புகளும் […]
இலவசத் திட்டங்கள் சரி. ஆனால், அதைத் தேவைப்படுகிறவர்களை மட்டும் கண்டறிந்து தரலாமே?
பதில்: ஒரு ஊரில் ஒரே ஒருவருக்குத் தான் போலியோ தாக்கும். அது யாரென்று நமக்குத் தெரியாது. அவரைக் காக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து தரத் தான் வேண்டும். புண்ணியம் வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் செய்கிறோம். பணக்காரன் எல்லாம் சாப்பிட வராதே என்று விரட்டி விடுகிறோமா? உறவினர், நண்பர் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று தான் திருமணத்தில் விருந்து வைக்கிறோம். உணவு வீண் ஆனாலும் பரவாயில்லை என்று […]
ஒரு முறை அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பாருங்கள்
அரக்கர்கள் யாரையாவது அடித்தால் சற்று சிந்தியுங்கள். இவர் எனக்குத் தெரிந்தவர் வலிக்காமல் அடியுங்கள் என்று வராதீர்கள். முருகநோலனைப் பல ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் அவரது முழு விசம் மக்களுக்குப் புலப்பட்டிருக்கிறது. தமிழில் வந்த சமூக விரோதப் படங்களின் பட்டியல்: 1. Gentleman – ஊழல் அமைச்சரால் உயர் சாதி மாணவன் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்வதாகக் காட்டியது. ஆனால், உண்மை இது தான்: திராவிட ஆட்சிக்குப் பின் ஆயிரக்கணக்கான பின் தங்கிய மாணவர்கள் […]
எங்கள் தலைவர்கள் பொருளாதார மேதைகள்
பல கணித மேதைகள் எந்த நிறுவலும் இன்றி மொத்தமாக பல தேற்றங்களை எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார்கள். அவற்றை நிறுவுவது தான் பல ஆய்வு மாணவர்களின் வேலையாக இருக்கிறது. அது போல் திராவிடப் பொருளாதாரம் என்பது பல்கலைக்கழககங்களில் ஆராய்ச்சி செய்து, காரல் மார்க்ஸ் போல் புத்தகம் எழுதி வைத்து நிறுவியது அல்ல. இது மக்களிடம் தோன்றிய தலைவர்கள் மக்களுக்காக உருவாக்கிய பொருளாதார மாதிரி. நூறு ஆண்டுக்கு முன்பு நீதிக் கட்சி மாணவர்களுக்கு உணவு தந்து படிக்க […]
இது தான் திராவிடப் பொருளாதாரம்
ஒரு உணவு சமைக்கிறீர்கள். சமைக்க எவ்வளவு செலவு என்று மட்டும் பார்த்தால் நீங்கள் அடிமட்ட ஏழை. சமைக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் நடுமட்ட ஏழை. சமைத்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்று மட்டும் பார்த்தால் நீங்கள் பணக்காரர். அடிமட்ட ஏழைக்கு விலையில்லா அரிசி, சத்துணவு, குறைந்த விலையில் அம்மா உணவகம் கொடு. நடுமட்ட ஏழையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, நேரத்தை மிச்சமாக்க மடிக்கணினி, தொலைக்காட்சி, மிதிவண்டி, ஸ்கூட்டி, மிக்சர், கிரைண்டர், […]