நான் அறிஞர் அண்ணாவைப் படித்துப் புரிந்து கொண்ட வரையில், அவருடைய வடநாட்டு எதிர்ப்பு என்பது, * இந்தியைத் திணிக்கும் மொழி ஆதிக்கத்திற்கு எதிரானது* தில்லியில் அதிகாரத்தைக் குவிக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிரானது* வட நாட்டு முதலாளிகள் கொழுக்க தமிழ்நாட்டைச் சந்தையாகப் பயன்படுத்தும் பொருளாதார ஆதிக்கத்திற்கு எதிரானது* பார்ப்பன – பனியா சாதி ஆதிக்கத்திற்கு எதிரானது வட நாட்டு எதிர்ப்பு என்பது ஆதிக்க எதிர்ப்பாக இல்லாமல், பிழைக்க வழியில்லாமல் தமிழ்நாட்டிற்கு வந்த சாமானியர்களை இழிவாகப் பார்க்கும் தமிழின ஆதிக்கப் […]
திராவிடம்
சென்னை தான் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி.
உங்களுக்குத் தெரியுமா? சென்னை தான் உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி. அதற்கு முன்பு இருந்தது இலண்டன் மட்டுமே! (செய்தி மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்
எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்?
எதிர்வரும் அறிஞர் அண்ணா, பெரியார் பிறந்த நாளை எப்படிக் கொண்டாட இருக்கிறீர்கள்? ஒரு சில நண்பர்கள் இதற்கான முயற்சிகளை எடுத்தால் “உனக்கு ஏன் வீண் வேலை” என்கிறார்களாம். காவல் துறையோ பெரியார் பெயரில் விழா எடுத்தால் சாதிக் கலவரம் வரும் என்று அனுமதி மறுக்கிறதாம். எனவே, வீம்புக்கேனும் உங்கள் சக்திக்கு ஏற்ப விழா எடுப்பது அவசியம். எப்படிக் கொண்டாடுவது என்று தெரியாவிட்டால், “பெண் ஏன் அடிமையானாள்” நூல் மலிவு விலையில் கிடைக்கிறது. அதை வாங்கி உங்கள் நண்பர்கள், […]
தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை!
திமுக தலைவர் கண்டனத்தை அடுத்து, இக்கூட்டம் அறிவித்தபடி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மறுமொழி பார்க்கவும். தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை! திமுக தலைவர் கண்டனம்! இத்தகையச் செய்திகளைக் காணும் போது தான், இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியாவது, இன்னும் வீரியமாக திராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்க… முகநூல் உரையாடல்
கனவு மெய்ப்படும்
காந்தி போராடி விடுதலை வாங்கினார் என்பது ஒரு கதை. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்கள் பொருளாதாரம் வலுவிழந்து நாட்டை ஆள முடியாமல் விட்டு விட்டு ஓடினார்கள் என்பது இன்னொரு கதை. ஆங்கிலேயன் தானாகச் சுதந்திரம் கொடுப்பான் என்று சும்மா உட்கார்ந்திருந்தால், இந்தியா என்ற ஒரு நாட்டையும் அதற்குத் தேவையான நாட்டுப் பற்றையும் கட்டமைத்திருக்க முடியாது. அது போல் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் போராட்டங்களுக்கான தீர்வுகள் என்று கிடைக்கும், எப்படிக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாது. ஆனால், போராட்டம் […]
கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள்.
கோயிலுக்குக் கூட்டம் வருவதை எல்லாம் காட்டி எங்கே பெரியார் மண் என்கிறார்கள். அடேய் முட்டாள்களா! பெரியாரே பல கோயில்களுக்குத் அறங்காவலராக இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனைப் பிரச்சினைகள் பேசப்பட்டன? மறக்கப்பட்டன? ஆனால், இன்னும் விடாமல் அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்கிறோமே! கல்வி உரிமைக்காகப் போராடுகிறோமே! பகுத்தறிவு பேசினாலும் அனைத்து மதத்தவர் வழிபாட்டு உரிமையை மதிக்கிறோமே! இதற்குப் பெயர் தான் பெரியார் மண். பார்க்க… முகநூல் உரையாடல்
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இங்கே கூப்பாடு போடும் சங்கிகளுக்கு என் நண்பனின் வட இந்திய அனுபவத்தை கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இங்கே கூப்பாடு போடும் சங்கிகளுக்கும் தமிழ்தேசிய தம்பிகளுக்கும் தலித்தியம் பேசுபவர்களுக்கும் என் நண்பனின் வட இந்திய அனுபவத்தை கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன். என் நண்பன் பிறந்ததிலிருந்து தமிழகத்தில் வளர்ந்தவன். பட்ட மேற்படிப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சமார் 30 ஆண்டுகள் தமிழகத்தில் படித்துவிட்டு பயிற்சிக்காக வட இந்தியாவில் கடந்த 6 மாதமாக தங்கியுள்ளான். அவன் என்னிடம் சொன்னது நாமெல்லாம் தமிழ்நாட்டில் சுகமா வாழ்ந்துட்டு கஷ்டம்னா என்னன்னே தெரியாம இருந்திருக்கோம். ஆனா இங்கே நிலைமை வேற […]
ஜம்மு காஷமீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி, தில்லியில், ஆர்ப்பாட்டம்
ஜம்மு காஷமீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரி, தில்லியில், திமுக தலைமையில் 15 எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்! பார்க்க… முகநூல் உரையாடல்
1912 முதல் திராவிட இயக்கம்
1912. பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு விடுதி கட்டுவதில் தொடங்கியது திராவிட இயக்கம். 1920 களில் தொடங்கிய நீதிக் கட்சி ஆட்சி மருத்துவக் கல்லூரியில் சேர சமசுகிருத அறிவு தேவை என்ற தடையை நீக்கியது. 2019 முதன் முதலாக மாநிலங்கள் அவைக்குச் செல்லும் திமுக MP வில்சன், மாநிலங்களின் மருத்துவக் கல்லூரி இடங்களில் இருந்து அகில இந்தியப் போட்டிக்கு ஒதுக்கப்படும் 15% இடங்களான 8137 MBBS இடங்களில், 27% OBC இட ஒதுக்கீட்டின் மூலம் […]
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியும் ஏமாற்றுவார்களா என்று எண்ணி மாய்கிறார்கள்! இவர்கள் இதுவும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள் என்று புரிந்து தானே திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக இவர்களை எதிர்த்து வருகிறது! 2019லேயே ஒரு மக்களாட்சி நாட்டில் சட்டப்படி இந்தப் பிராடு வேலை செய்கிறவர்கள், 2000 ஆண்டுகளாக முட்டாள் ராசாக்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு என்னவெல்லாம் கொடுமைகள் செய்திருப்பார்கள்? மற்றபடி, பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் என்ன ஐயர் வீட்டில் […]