சாதி ஆணவக் கொலை மட்டுமில்லை * வரதட்சணைக் கொடுமை * மாமியார் கொடுமை * விதவைப் பெண்கள் கொடுமை * பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்தங்கி இருப்பது என்று எல்லாவற்றுக்கும் பிற்போக்கு இந்து சமயத்தின் வரலாறு தான் காரணம். * அனைத்துச் சாதிகளும் நிலங்களை உரிமை கொள்ள முடியாது. * பெண்களுக்குப் பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது. * திருமணத்தின் போது பெற்றோர் தருகிற பொருட்கள் மட்டும் தான் பெண்ணின் சொத்து * பெண்கள் மறுமணம் செய்யக்கூடாது […]
சாதி
இந்த வரலாற்று இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல் ஆணவக் கொலைகளை முழுமையாகத் தடுக்க முடியாது.
நமக்கு சாத்திரங்களில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாது. ஆனால், தெருமுக்கு பிள்ளையார் கோயிலில் உருகி உருகி கடவுளை வேண்ட பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அது போல், சாதி மாறி திருமணம் செய்தால் சொத்தில் சல்லிக்காசு பங்கு கிடையாது, மானம் போகிறது என்று பெற்றோர் மிரட்டுவதற்கும் ஆணவக் கொலை செய்யும் அளவுக்குப் போகவதற்கும் மனுநீதி போன்ற இந்து சமய சாத்திரங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. இந்து சாத்திரங்கள் அவரவர் தங்கள் வர்ணத்தில் (அதாவது சாதி அடுக்கு) தான் பெண்ணெடுக்க வேண்டும் […]
கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உதவுமா?
கேள்வி: கலப்புத் திருமணம் சாதி ஒழிப்புக்கு உதவுமா? அவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுக்கலாமா? இது ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவுமா? பதில்: கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியாது. இரண்டில் ஒரு சாதி தொடரும். இதே காரணத்தினால், நான் இட ஒதுக்கீட்டுத் தத்துவத்தைப் புரிந்து கொண்ட வகையில், சாதி மாறித் திருமணம் செய்தவர்களுக்குப் புதிதாக தனி இட ஒதுக்கீடு தருவது தவறு என்று கருதுகிறேன். பெண்களை முன்னேற்ற தனி இட ஒதுக்கீடு இருக்கிறது. பெண்ணைத் திருமணம் […]
நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே?
கேள்வி: தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி சரி. ஆனால், நிறைய கல்லூரிகள் தரம் இல்லாமல் இருக்கின்றவே? பதில்: இன்று தரம் தரம் என்று குரைப்பவர்களின் வரலாறு என்ன? * 1854இல் ஆங்கிலேயே அரசு 45% எடுத்தால் தான் தேர்ச்சி என்று வரையறை செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகள் தேர்வுற முடியவில்லை என்று 33%ஆக மாற்றுமாறு மதராசு மாகாணத்தைச் சேர்ந்த பார்ப்பனர்கள் மன்றாடினார்கள். * 1920கள் வரை கல்வி கற்று வந்து முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை உயர் சாதி […]
ஆண்டான் அடிமைக் காலம் மீண்டும் வர வேண்டும் என்பது தான் உங்கள் உள்மன அரிப்பா?
1990கள் வரை தீபாவளி அன்று பண்ணையார்கள் வீடுகளில் பலகாரம் வாங்க அக்கம் பக்கம் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகள் வருவார்கள். ஏன் அன்றாடம் கூட இரவு வேளைகளில் எஞ்சிய உணவை வாங்கிக் கொள்ள தட்டை ஏந்திக் கொண்டு வருவார்கள். நாட்டாமை, சின்னக் கவுண்டர் என்று நீங்கள் பார்க்கிற பண்ணையார் படங்களில் எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை அளிக்கும் காட்சிகள் தவறாமல் வரும். இன்று இந்த வேலையை அரசு செய்கிறது. மக்கள் பிச்சையாக இல்லாமல் உரிமையாக வாங்கிக் […]
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை
இட ஒதுக்கீடு தொடர்பாக மருத்துவர். எழிலனின் அனல் கக்கும் உரை. முதல் 2 நிமிடங்கள் வரும் Highlights மட்டுமாவது பாருங்கள். அதற்குப ்பிறகு முழு உரையையும் நீங்களே பார்த்து விடுவீர்கள் பார்க்க… முகநூல் உரையாடல்
ஊழல் குறைந்த ஆட்சி நடப்பதும் மக்களாட்சியில் தான்
நம் மக்கள் தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவது தான் ஊழல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். எடுத்த தேனை எவன் உண்கிறான் என்பதைக் கேள்வி கேட்க மறந்து விட்டார்கள். இந்தியாவில் மக்களாட்சி மலரும் முன், அனைத்து ராஜாதி ராஜாக்கள் முதற்கொண்டு பிரிட்டிஷ் அரசு வரை மக்களின் உழைப்பை அனைவரும் உறிஞ்சித் தின்றதே ஒரு மாபெரும் ஊழல் தான். ஆனால், அப்போது மந்திரிகளோ அதிகாரிகளோ ஊழல் செய்யவில்லை என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். ஏன் எனில், இந்த மன்னர்களிடம் வேலை […]
கல்வியில் சாதி
GATE, NEXT போன்று வெளியேறும் போது வடிகட்டும் தேர்வுகளின் பேராபத்து என்னவென்றால், அது சமூகநீதிக் கொள்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் என்பது தான். நீ உள்ளே போகும் போது இட ஒதுக்கீடு தருகிறாயா, நான் வெளியே அனுப்பும் முன் எல்லாரையும் fail ஆக்குவேன் என்பது தான் இந்தத் தேர்வுகளின் வன்மம். சந்தேகம் இருந்தால் IIT Kanpurல் வடிகட்டப்படும் மாணவர்கள் என்ன சாதி என்று பாருங்கள். இது புரிந்ததால் தான் கலைஞர் எட்டாம் வகுப்பு வரை All pass […]
இனி GATE தேர்வில் வெற்றி பெற்றால் தான் பட்டம்
பொறியியல் கல்லூரி மாணவர்கள் இனி GATE தேர்வில் வெற்றி பெற்றால் தான் பட்டம் கொடுப்பார்களாம். இதன் மூலம் நாட்டில் பலர் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பதைத் தடுக்கப் போகிறார்களாம்! இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்குப் பதில் நீங்க எல்லாம் படிக்கத் தகுதியில்லாத சூத்திர முண்டங்கள் என்று நேரடியாகவே திட்டலாம். நான் B.Techல் 7.9 CGPA பெற்றேன். உலகளாவிய GRE, TOEFL தேர்வுகளில் வெற்றி பெற்று சிங்கப்பூர், ஜெர்மனி, நெதர்லாந்தின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெற்றிருக்கிறேன். ஆனால், நான் […]