• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

கல்வி

அதெல்லாம் நீ சொல்லக் கூடாது!

September 3, 2020

ஒரு RTO அதிகாரி, “நீ எல்லாம் வண்டி ஓட்டலாமா” என்று கேட்பதில்லை. நமக்கு வண்டி ஓட்டத் தெரியுமா என்று சான்றிதழ் கொடுப்பது மட்டும் தான் அவர் வேலை. அது போல, யார் மருத்துவம் படிக்கலாம், யாருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பது, மாணவர்களை எப்படிச் சேர்ப்பது, எத்தனை மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுவது போன்றவற்றை முடிவு செய்வது எல்லாம், இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகளின் வேலையாக இருக்கக் கூடாது. எங்கள் மாநிலத்துக்கு யார் மருத்துவர் ஆகத் தேவையோ அவர்களை […]

Filed Under: கல்வி, மாநில சுயாட்சி

உலகில் சிறந்த தமிழ்நாடு!

September 3, 2020

இன்று இந்தியாவிலேயே ஆக அதிகமாக, தமிழ்நாட்டில் 49% பேர் கல்லூரிப் படிப்பிறக்குச் செல்கிறார்கள்… என்று எழுதினேன். பிறகு இந்தியா என்பதை அடித்துத் திருத்தி விட்டு, உலகிலேயே என்று மாற்றி எழுதினேன். திராவிடத்தால் வாழ்ந்தோம். பார்க்க – முகநூல் உரையாடல்

Filed Under: கல்வி

அரசு மருத்துவர்கள் சொந்த கிளினிக், பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்யலாமே?

September 3, 2019

கேள்வி: அரசு மருத்துவர்கள் சொந்த கிளினிக், பிற தனியார் நிறுவனங்களில் வேலை செய்வதைத் தடை செய்யலாமே? பதில்: மருத்துவர்களின் திறமைக்கும் உழைப்புக்கும் அரசு தரும் சம்பளம் என்பது உண்மையிலேயே பிச்சைக் காசு தான். ஏதோ இந்த நாடு தங்களை மருத்துவம் படிக்க வைத்ததே என்ற நன்றிக் கடனுக்குத் தான் அவர்கள் அரசுப் பணியில் இருக்கிறார்கள். அரசுப் பணியில் செலவிடும் நேரம் போக எஞ்சிய நேரத்தில் கூடுதலாக தனியாக உழைத்தே அவர்கள் சமூகத்தில் உள்ள மற்ற பல மக்களுக்கு […]

Filed Under: அரசியல், கல்வி, சாதி

பள்ளியில் ஆங்கில வழியத்தில் படிப்பது என்பது ஒரு privilege

September 1, 2019

தமிழ் வழியத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வரும் மாணவர்களுக்குக் கூட, முதல் சில Semester உள்ளூர ஒரு நடுக்கம், கூச்சம், பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு இது வேலைக்குப் போய் சில ஆண்டுகள் வர கூட நீடிக்கும். பள்ளியில் ஆங்கில வழியத்தில் படிப்பது என்பது ஒரு privilege. அதாவது வசதி/வாய்ப்பு/கொடுப்பினை. இந்த privilege இல்லாத மற்றவர்கள் என்ன பாடு படுகிறார்கள் என்பதைப் புரிந்து அவர்கள் நியாயங்களுக்குத் துணை நிற்கவும் மிகுந்த […]

Filed Under: சாதி, கல்வி

கல்வி தான் உன்னை அடிமைத் தளையில் இருந்து விடுவிக்கும்

November 9, 2018

ஒரு நகரத்தின் மிகச் சிறந்த புரோட்டா மாஸ்டருக்குக் கிடைக்கும் சம்பளம் தான் ரூ.18,000. இந்த நிலைக்கு வர அவர் பத்து ஆண்டுகளாவது பரோட்டா சுட்டிருப்பார். கல்லூரியை விட்டு வெளியே வரும் ஒரு பொறியாளருக்கு ரூ. 10,000 என்பது மிக நல்ல சம்பளம். பத்து ஆண்டுகள் பொறியாளராக பணியாற்றி நகரத்தின் சிறந்த பொறியாளர் ஆனால் இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கலாம். நீ Engineer ஆவது பொறுக்காமல் ITIல் ஒரு Fitterஆகவோ, electricianஆகவோ பயின்று வாழ்நாள் முழுதும் அடிமைச் சேவகம் செய்ய […]

Filed Under: கல்வி

ஒரு முறை அரசு மருத்துவமனைக்குப் போய்ப் பாருங்கள்

November 9, 2018

அரக்கர்கள் யாரையாவது அடித்தால் சற்று சிந்தியுங்கள். இவர் எனக்குத் தெரிந்தவர் வலிக்காமல் அடியுங்கள் என்று வராதீர்கள். முருகநோலனைப் பல ஆண்டுகளாக அடித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது தான் அவரது முழு விசம் மக்களுக்குப் புலப்பட்டிருக்கிறது. தமிழில் வந்த சமூக விரோதப் படங்களின் பட்டியல்: 1. Gentleman – ஊழல் அமைச்சரால் உயர் சாதி மாணவன் மருத்துவப் படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்வதாகக் காட்டியது. ஆனால், உண்மை இது தான்: திராவிட ஆட்சிக்குப் பின் ஆயிரக்கணக்கான பின் தங்கிய மாணவர்கள் […]

Filed Under: கல்வி, திராவிடம், மருத்துவம்

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா?

August 1, 2018

கேள்வி: சரி இரவி, உண்மையிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா? பதில்: உயராது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாருக்கும் மூளையும் இல்லை, நேர்மையும் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இன்றி ஓப்பி அடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே இவ்வாறான புரட்சிகரமான யோசனைகளுக்குக் காரணம். இப்படி ஒரு ஆணையை இடுவது இந்திய அரசியல் சாசனப்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு வாதத்துக்கு […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, கலைஞர், கல்வி

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2750