• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

கலைஞர்

கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ?

April 30, 2019

கேள்வி: கலைஞர் சற்று முன்பாகவே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, அடுத்த தலைமைக்கு வழி விட்டிருந்தால் கௌரவமான ஓய்வாக இருந்திருக்குமோ? பதில்: ஒரு சீட்டு வெல்ல முடியாதவன் எல்லாம் அரசியல் கட்சித் தலைவன் என்று சுற்றும் நாட்டில் * 2009 நாடாளுமன்றத் தேர்தலை வென்றவர்* 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்* 2011ல் எதிர்க்கட்சி இடத்தை இழந்தாலும், 2016ல் மீண்டும் 96 இடங்களைத் தன்னுடைய கூட்டணி சார்பாக வென்றவர் ஏன் சீக்கிரமாக ஓய்வெடுக்க […]

Filed Under: கலைஞர், அரசியல்

Roster system

January 25, 2019

Roster system என்றால் என்ன? இட ஒதுக்கீடு ஆர்வலர்கள் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான concept! இந்தியாவிலேயே இதை மிகக் கச்சிதமாக நிறைவேற்றியவர் கலைஞர் மட்டுமே! அதாவது ஒவ்வொரு 14 வேலைக்கும் தான் ஒரு STக்கு வாய்ப்பு கிடைக்கும். 13 வேலைகள் தான் இந்த ஆண்டு இருக்கிறது என்றால், அடுத்த ஆண்டு பணி நியமனம் தொடங்கும் போது முதல் பணி ஆணையே STக்குத் தான் போக வேண்டும். அவரை மீண்டும் காத்திருக்கச் செய்யக்கூடாது. இப்படிப் பார்த்துப் […]

Filed Under: இட ஒதுக்கீடு, கலைஞர்

கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா?

January 9, 2019

கேள்வி: கச்சத்தீவு விவகாரத்தில் உண்மையிலே கலைஞர் துரோகம் தான் செய்தாரா? பதில்: கச்சத்தீவு அம்மையார் இந்திராகாந்தியால் தாரை வார்க்கப்பட்டது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதில் கலைஞருக்கு எந்த வித தொடர்பும் கிடையாது. 1974 ஜூன் மாதம் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்ட உடனே, ஜூலை மாதத்தின் முதல்வாரத்திலே ஆட்சியில் இருக்கிற கலைஞர் மாநிலம் முழுவதும் நாற்பத்தைந்து இடங்களில் மாபெரும் கண்டனக் கூட்டங்களை நடத்துகிறார். தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்பிற்குரிய செழியன், முரசொலிமாறன், மாதவன் போன்றோர் நாடாளுமன்றத்தில் கடுமையாய் தங்களின் குரல்களை எழுப்புகின்றனர். […]

Filed Under: கலைஞர், அரசியல்

அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை?

January 8, 2019

கேள்வி: அத்தனை ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த கலைஞர் ஏன் அதைச் சாதிக்கவில்லை? இதைச் சாதிக்கவில்லை? பதில்: கலைஞர் கூட்டணி ஆட்சியில் இருக்கும் போது தான் கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். கலைஞரை நீங்கள் எவ்வளவு சுயநலம் மிக்க, சமூக அக்கறை அற்ற, பதவி வெறி பிடித்த தலைவர் என்று கூட நினைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒருவர், தன் சொந்த மகளைக் கூடவா ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கில் சிறையில் கிடந்து வாட விடுவார்? அரசியல் என்பது […]

Filed Under: கலைஞர், அரசியல்

கலைஞரிடம் இலக்கியத்தில் பிடித்த பாத்திரம் எது?

November 30, 2018

நேர்முகம் காணும் ஒருவர் கலைஞரிடம் தங்களுக்கு இலக்கியத்தில் பிடித்த பாத்திரம் எது என வினவுகிறார். வந்த பதில்: மணிமேகலையிடம் இருந்ததாகச் சொல்லப்படுகிற அட்சய பாத்திரம். நில உடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வு, சாதியப் படிநிலை ஆகியவற்றால் மக்களில் பெரும்பான்மையானோர் தங்களது உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளப் பெரும் போராட்டம் நிகழ்த்தினர். பஞ்சமும் பட்டினியும் வாடிக்கையான ஒன்று. இதனை மாற்றியமைக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பசுமைப் புரட்சி. இதற்கு முன்பே திமுக உணவு அரசியலை முன்னெடுத்தது. 1967 தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையே […]

Filed Under: கலைஞர்

தமிழக அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்!

November 26, 2018

உங்களுக்குத் தெரியுமா? தமிழ் வழியத்தில் படித்தவர்களுக்கு, தமிழக அரசு வேலைகளில் 20% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்! தமிழ் வழியத்தில் படித்த ஒரு பெண் அரசு வேலைக்கு விண்ணப்பித்தால் * பெண் (30% இட ஒதுக்கீடு)* தமிழ் வழியம் (20% இட ஒதுக்கீடு)* சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்று மூன்று அடிப்படைகளில் போட்டியில் முந்தும் வாய்ப்பு உண்டு. இவை போக கணவனை இழந்த கைம்பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடும் உண்டு. திராவிடம் என்ன செய்தது […]

Filed Under: கலைஞர்

2 ரூபாய்க்கு அரிசி-பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் சொல்வதைக் கேளுங்கள்

November 14, 2018

கேள்வி: 2 ரூபாய்க்கு அரிசி கொடுத்த அரசு அதைக் கூட பிறகு இலவசமாகத் தருகிறது என்றால் மக்களை அந்த அளவுக்கு வக்கற்றவர்களாக ஆக்கி விட்டதா? பதில்: இல்லை. அந்த 2 ரூபாயை ஈட்டக் கூட யாரிடமும் நீங்கள் அடிமைச் சேவகம் செய்ய வேண்டாம். கண்ணியமான வேலைகளுக்கு முயலுங்கள் என்பது தான் அரசு இங்கே மக்களுக்கு ஏற்படுத்தித் தரும் சுதந்திரம். அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தமிழக மக்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் இன்று கூடுதல் செல்வ வளம் […]

Filed Under: கலைஞர்

பிரசவத்தில் இறந்த தாய்மார்களின் எண்ணிக்கையைப் பத்தில் ஒரு பங்காக குறைத்தவர் கலைஞர்!

November 14, 2018

தமிழ்நாட்டில் பிரசவத்தில் இறந்த தாய்மார்களின் எண்ணிக்கையைப் பத்தில் ஒரு பங்காக குறைத்தவர் கலைஞர்! Sivasankaran Saravanan விளக்குகிறார் கேளுங்கள் பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர்

மீண்டும் கல்லூரிக்கு வர உதவினார் கலைஞர்.

November 14, 2018

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்து கூலித் தொழிலாளர்களும் படிப்பை விட்டுச் சென்றவர்களும் கூட மீண்டும் கல்லூரிக்கு வர உதவினார் கலைஞர். இதில் பயன்பெற்ற மாணவர் Dilip Rajendran இன்று Fortune 100 நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் சொல்வதைக் கேளுங்கள். நன்றி சொல்ல உமக்கு வார்த்தை இல்லை எமக்கு! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: கலைஞர்

1970களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பட்டியல் இனத்தவராக இல்லையே

November 14, 2018

2011. இந்தியா முழுக்க உயர்நீதி மன்ற நீதிபதிகள் கிட்டதட்ட 940 பேர். அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த நீதிபதிகள் வெறும் 21 பேர்தான்! இவர்களில் 10 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் இருந்தவர்கள்! 1970களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கூட பட்டியல் இனத்தவராக இல்லையே என்று பெரியார் வருந்திய போதே, அடுத்த நாளே ஒரு பட்டியல் இனத்தவரை நீதிபதியாக நியமித்தவர் கலைஞர். திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பேசுவதைக் கேளுங்கள். பார்க்க… முகநூல் […]

Filed Under: கலைஞர்

  • « Go to Previous Page
  • Page 1
  • Page 2
  • Page 3
  • Page 4
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1786