13 ஆண்டுகள் ஆட்சி இழந்திருந்த கலைஞர், 1989ல் ஆட்சிக்கு வருகிறார். அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு கொடுத்தார். ஆனால், முதலில் பெண்கள் படித்தால் தானே வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்? பத்தாம் வகுப்பு வரை பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்தால் ஊக்கத் தொகை அறிவித்தார். 30 கிலோ மீட்டர் சுற்றவில் பெண்கள் கல்லூரி ஏதும் இல்லை என்றால், அருகில் உள்ள கல்லூரிகளில் 30% இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தார். இன்னொரு வீட்டுக்குப் […]
கலைஞர்
பட்டியல் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடும் திமுகவும்
1954. தமிழ்நாட்டில் SC/ST இட ஒதுக்கீடு 16%.1971. சட்டநாதன் ஆணையம் பரிந்துரையை ஏற்று கலைஞர் அதனை 18% ஆக உயர்த்தினார். 1989. SC/ST என்று ஒன்றாக இருந்த தொகுப்பைப் பிரித்து, கலைஞர் ST மக்களுக்கு 1% தனி இட ஒதுக்கீடு கொடுத்தார். இதன் மூலம் ST மக்களுடன் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவை இல்லாததால், SC மக்களுக்கும் கூடுதலாக 1% இடம் கிடைத்தது என்றும் கருத இடமுண்டு. 2009. SC மக்களிலேயே கடைநிலையில் இருந்த அருந்ததியர் […]
கலைஞரின் பராசக்தி வெற்றி பெற்று ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தியது.
புராண படங்களாக வெளிவந்த காலத்தில் கலைஞரின் பராசக்தி வெற்றி பெற்று ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்தியது. அதற்குப் பிறகு கலைஞரைப் போலவே பேச, எழுதத் தலைப்பட்டார்கள். ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக உள்ள நிலை என்ன? வெகுமக்களின் அரசியல் மலினமானது, அதுவும் தரமான இலக்கியம் என்றால் திராவிட அரசியல் பேசவே கூடாது, திராவிடத்தைத் திட்டுவதே காவியம், ஓவியம் என்று நம்மைக் காயடித்து வைத்திருந்திருந்தார்கள். இன்று நிலவரம் என்ன? எப்படி தேர்வுக்குத் தயார் ஆகிற மாணவர்கள் சென்ற ஆண்டு […]
தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை!
திமுக தலைவர் கண்டனத்தை அடுத்து, இக்கூட்டம் அறிவித்தபடி நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மறுமொழி பார்க்கவும். தமிழகத்தில் கலைஞர், அண்ணா பற்றி நூல் திறனாய்வுக் கூட்டம் நடத்தக் கூடத் தடை! திமுக தலைவர் கண்டனம்! இத்தகையச் செய்திகளைக் காணும் போது தான், இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தியாவது, இன்னும் வீரியமாக திராவிடத்தை முன்னெடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. பார்க்க… முகநூல் உரையாடல்
ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கிய கதை!
ஒரு அரசு நிறுவனம் எப்படிச் செயற்படுகிறது என்பது புரிந்து விட்டாலே, பல அரசியல் பிரச்சினைகளில் சரியான நிலைப்பாடுகளை எடுக்க முடியும். இது ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கிய கதை! கட்டாயம் முழுமையாகப் படியுங்கள்! ** 1995ல் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல் மாற்று பிரிவை தொடங்க விரும்புவதை சொன்னபோது எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள். இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள். அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட […]
எங்க ஊரில் நடந்தது
இது எங்க ஊரில் நடந்தது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி மாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த மலைவாழ் மாணவி 434 நான்கு மதிப்பெண் எடுத்து, எங்க அரூர் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளியில் தருமபுரி ஆட்சியர் உதவியுடன் படிக்க வைத்து அந்த பெண் +2 வில் 1140 மதிப்பெண் எடுத்து 2009 ஆம் ஆண்டு Stanley Medical Collegeல சேர்ந்தார். அந்தப் பெண் M.b.b.s படித்து முடித்தார்கள். அவர்கள் குடும்பம் காரப்பாடி என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து […]
தனியார் கல்லூரியில் படிப்பு நேர்காணல்
1997. Ro Si தனியார் கல்லூரியில் MBBS படிப்பு நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார். 1. நல்ல பாம்புக்கு ஏன் நல்ல பாம்பு என்று பெயர்?2. பொள்ளாச்சி சந்தையிலேயே பாடலைப் பாடியது யார்? என்று இரு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஓர் உயிர் காக்கும் மருத்துவருக்குத் தெரியவேண்டிய இந்த முக்கியமான அறிவு இல்லாததால் MBBS வாய்ப்பை இழக்கிறார். என் சித்தப்பா பாலிடெக்னிக்கில் சேரவே பெரிய இடத்து சிபாரிசு எல்லாம் தேடிக் கொண்டு போனதாகச் சொல்வார். 1990கள் வரையே தொழிற்படிப்புகளில் சேர நேர்காணல் இருந்தது. […]
எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள்
எல்லோரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை 1965 உடன் முடித்து விடுகிறார்கள். 1986ல் கலைஞர் உட்பட 10,000 திமுகவினர் இந்தித் திணிப்பை எதிர்த்து சிறை சென்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர். வெறும் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறே தெரியாமல் அரசியல் தற்குறிச் சமூகமாகத் தான் சுற்றுக் கொண்டிருக்கிறோம்! ** அறிஞர் அண்ணா எந்த இந்தியை எதிர்த்தாரோ அதே அண்ணா பெயரில் கட்சி நடத்திய மகோரா அவர் பெயருக்கு களங்கம் உண்டாக்கும் விதமாக […]
கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும்
முனைவர் ஏழுமலை “கலைஞரைப் பற்றி பேரறிஞரும் பிற அறிஞர்களும்” என்னும் தலைப்பில் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார். தந்தை பெரியார் முதல் தேசியத் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், நீதியரசர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளவர்களின் கருத்துக்கள் மிக அருமையாகத் தொகுக்கப் பட்டுள்ளது. கலைஞர் பிறந்த நாள் நினைவாக இந்த நூலை வாங்கலாம். பிறருக்குப் பரிசு அளிக்கலாம். பெரும் உழைப்பில் சொந்த முயற்சியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூலுக்கு உங்கள் […]
மாநில சுயாட்சி என்றால் என்ன?
மாநில சுயாட்சி என்றால் என்ன? கலைஞர் முதல்வராகப் பதவியேற்ற போது St. George கோட்டையைச் சுற்றி முளைத்துள்ள புல், பூண்டுகளை வெட்டி சுத்தமாக்கச் சொல்கிறார். அதிகாரிகள் சொன்ன பதில்: கோட்டை இராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. புல் வெட்ட மத்திய அரசின் அனுமதி தேவை. கலைஞர் சொல்கிறார்: இப்போது அதில் ஒரு பாம்பு நெளிந்தால் கூட அதை அடிக்க மத்திய அரசு அனுமதி வேண்டுமா? அனுமதி கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்கள். 5 மாதம் கழித்து அனுமதி […]