SBI எழுத்தர் தேர்வில் சென்ற ஆண்டு வரை கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த இந்த ஆண்டு அந்த விதியைத் தூக்கி விட்டார்கள். அதனால் தான் மேற்கு வங்கத்துப் பார்ப்பனர்கள் முட்டை மதிப்பெண் பெற்றாலும் வேலை பெறுகிறார்கள். தங்களுக்குத் தேவை என்றால் விதியையும் மாற்றுவார்கள். தகுதி என்ற சொல்லின் பொருளையும் மாற்றுவார்கள். இந்த விதி மாறியதன் பின்னணி என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும். பார்க்க… முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு
இத்தனை நாள் இட ஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர் இடம் கிடைத்த போது சும்மா இருந்தீர்களே!
கேள்வி: இத்தனை நாள் இட ஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர் இடம் கிடைத்த போது சும்மா இருந்தீர்களே! இப்போது ஏன் குதிக்கிறீர்கள்? பதில்: இத்தனை நாள் இட ஒதுக்கீட்டை விமர்சித்தவர்கள் என்ன சொன்னார்கள்? “எங்களுக்குத் தகுதி இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முன்னேறிய சாதியாகப் பிறந்ததால் எங்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் வாய்ப்பு பெறுகிறார்கள். இதனால் படிப்பு, வேலையின் தரம் கெடுகிறது, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கிறது” என்றார்கள். இவ்வளவு பேசியவர்கள் இப்போது SC, ST, OBCஐ விட […]
SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது?
கேள்வி: SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது? பதில்: குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தால் cut-off ஒன்றாக வர வாய்ப்பிருக்கிறது. SC, ST, OBC பாவம் என்று யாரோ ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ இத்தனை நாள் குறைவான cut-off முடிவு செய்யவில்லை. இருக்கிற இடங்களுக்கு எத்தனைப் பேர் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பொருத்து cut-off மாறும். மருத்துவப் படிப்புக்குப் போட்டி அதிகம். அதனால் cut-off அதிகம். கலை, அறிவியல், பொறியியல் […]
பணம் ஒரு மூலதனம். அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.
பணம் ஒரு மூலதனம். அதைச் சும்மா வைத்திருந்தாலே வட்டி மூலம் குட்டி போடும். அது போலவே சாதியும் ஒரு மூலதனம். நீங்கள் OBCஆகப் பிறந்தால் 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்குப் போராட வேண்டும். இன்று வரை 27% OBC இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு உத்தரவு வந்த சூட்டில் ஆறே மாதங்களில் பட்டையைக் கிளப்புகிறது. Rich get richer போல் ஏற்கனவே சாதியின் உயர் அடுக்கில் இருப்பவர்கள் அந்தச் சாதியை வைத்தே […]
SC/ST மற்றும் OBCக்கு இடையே உள்ள முரண்களில் திருமண உரிமையே முதன்மையாக பேச வைக்கப்படுகிறது.
SC/ST மற்றும் OBCக்கு இடையே உள்ள முரண்களில் திருமண உரிமையே முதன்மையாக பேச வைக்கப்படுகிறது. விரும்பியவரைக் காதல் திருமணம் செய்யும் உரிமை வேண்டும் தான். கொலையோ வெட்டுக் குத்தோ மன்னிக்க முடியாதது தான். ஆனால், இவை எல்லாம் ஒரு சில தனிநபர்கள் மீது நிகழும் வன்முறைகள். ஆனால், ஒரு சமூகமாக இப்படி பிராடு செய்து கோடிக்கணக்கான மக்களின் படிப்பு, வேலை வாய்ப்புகளைச் சுருட்டிக் கொண்டு போகிறார்களே! பார்ப்பனர்களால் எங்களுக்குத் தொல்லை இல்லை, எங்களை மிகவும் மரியாதையாக நடத்துகிறார்கள், […]
69%க்குப் பாதிப்பு இல்லாமல் 10% தருகிறோம் என்றார்கள்.
69%க்குப் பாதிப்பு இல்லாமல் 10% தருகிறோம் என்றார்கள். இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி முட்டி மோதி, பல ஆண்டுகள் தேர்வுக்குப் படித்து, தனியார் பயிற்சிக்குக் காசு செலவழித்து, SC, OBC மக்கள் கூட 62.5 மதிப்பெண்கள் வாங்க வேண்டி இருக்கும் போது, ஐயர், ஐயங்கார் போன்றவர்கள் 28.5 மதிப்பெண் வாங்கி 10% இடங்களைச் சுருட்டிக் கொண்டு போவது அநியாயம் இல்லையா? இப்போதாவது 69%க்குப் பாதிப்பு இல்லாமல் 10% கொடுக்க முடியாது என்பது புரிகிறதா? பார்க்க… முகநூல் உரையாடல்
இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப் போட்டியை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தானே எடுக்கிறார்கள்.
கேள்வி: இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப் போட்டியை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தானே எடுக்கிறார்கள். இப்போது 10% ஆட்கள் மதிப்பெண் குறைவுக்கு மட்டும் ஏன் குதிக்கிறீர்கள்? பதில்: ஆம், இது வரை இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிலும் பொதுப்பிரிவை விட மற்ற பிரிவுகள் குறைந்த மதிப்பெண் தான் எடுக்கிறார்கள். எப்படி? GEN, BC, BCM, MBC, SC, SCA, ST என்று ஒன்றின் கீழ் ஒன்றாக மதிப்பெண்கள் குறைந்து கொண்டே […]
SC, OBC, GEN எல்லாம் ஒரே cut-off
தமிழ்நாட்டில் SBI எழுத்தர் வேலைத் தேர்வில் SC, OBC, GEN எல்லாம் ஒரே cut-off. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. இதற்கு என்ன பொருள்? குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தாலும் தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு கால சமூக நீதி ஆட்சி, சாதிகளுக்கு இடையே இடைவெளியைக் குறைத்து அவர்களைப் போட்டியில் வெல்ல தயாராக்கி இருக்கிறது. இத்தனை நாள் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்ற சிலருக்கு வேலை தருகிறது என்று வைக்கப்பட்ட வாதத்தை இந்த cut-off […]
ஒரு சாதிப்பிரிவுக்கான Cut-off எப்படி முடிவு செய்யப்படுகிறது? யார் முடிவு செய்கிறார்கள்?
கேள்வி: ஒரு சாதிப்பிரிவுக்கான Cut-off எப்படி முடிவு செய்யப்படுகிறது? யார் முடிவு செய்கிறார்கள்? பதில்: ஒரு படிப்பு அல்லது வேலையில் மொத்தம் 100 இடங்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தர வரிசைப் பட்டியல்கள் உருவாக்குவார்கள். ஒன்று சாதியைக் கருத்தில் கொள்ளாமல் General rank list. இன்னொன்று ஒவ்வொரு சாதிப்பிரிவிலும் ஒரு Community rank list. General rank listல் முதல் 31 இடங்கள் பிடித்தோர் பொதுப் பிரிவில் “தானாகவே” இடம் பெறுவர். எந்தச் சாதி என்று […]
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
SBI தேர்வு முடிவில் 10% பிராடைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியும் ஏமாற்றுவார்களா என்று எண்ணி மாய்கிறார்கள்! இவர்கள் இதுவும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள் என்று புரிந்து தானே திராவிட இயக்கம் ஒரு நூற்றாண்டாக இவர்களை எதிர்த்து வருகிறது! 2019லேயே ஒரு மக்களாட்சி நாட்டில் சட்டப்படி இந்தப் பிராடு வேலை செய்கிறவர்கள், 2000 ஆண்டுகளாக முட்டாள் ராசாக்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு என்னவெல்லாம் கொடுமைகள் செய்திருப்பார்கள்? மற்றபடி, பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் என்ன ஐயர் வீட்டில் […]