இட ஒதுக்கீடு கொடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைக் கொடுக்க மாட்டார்கள். மலம் அள்ளுவதைத் தடு என்று சட்டம் இருக்கிறது. ஆனால், அதைத் தடுக்க மாட்டார்கள். அவர்கள் வேலையை உனக்குத் தர மாட்டார்கள். உன் வேலையைச் செய்ய அவர்கள் வர மாட்டார்கள். இது தான் சாதி. பி.கு. போதுமான தரவுகள் சேகரிக்கப்படவில்லை என்று இந்தச் செய்தி கூறுகிறது. எனவே, தமிழகத்தில் இருந்து மட்டும் சாவுகள் கூடுதலாக இருப்பதாக படம் காட்டுகிறது. பார்க்க – முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு – இல்லங்களில் உரையாடல் தேவை
இட ஒதுக்கீடு தங்களுக்கு எதிரானது என்பதை ஆதிக்கச்சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சொல்லித் தருகிறார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் தான் நாம் முன்னுக்கு வந்தோம் என்பதை பயன் பெற்ற சாதிகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவதில்லை. இல்லாத நாட்டைக் கட்டியாண்ட பெருமையைத் தான் சொல்லித் தருகிறோம். இட ஒதுக்கீட்டைப் பற்றிய பொது உரையாடல் இப்படித் தான் கட்டமைக்கப்படுகிறது. பார்க்க – முகநூல் உரையாடல்
YouRTI
கல்வி, இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு தொடர்பாக RTI பதிய நினைப்பவர்கள் https://yourti.in/ பயன்படுத்தலாம். உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமலும் கேள்வி கேட்கலாம். பெறும் பதில்களை அதே தளத்தில் பொதுப் பார்வைக்கும் வைக்கலாம். பார்க்க – முகநூல் உரையாடல்
உரிமைக்குரல் எழுப்பத் தயங்குவது ஏன்?
Overஆக சமூக நீதி பேசினால் எங்கே நம்மை ஒடுக்கப்பட்ட சாதி என்று நினைத்து விடுவார்களோ என்று நீங்கள் தயங்கியதுண்டா? அதே போல், சமூக நீதியை எதிர்த்துப் பேசினால் தான் நம்மை தகுதி, திறமை உடையவன் என்று நினைப்பார்கள் என்று ஒருவர் எண்ண வாய்ப்பிருக்கிறதா? பொதுப்பிரிவுப் போட்டியில் தேர்வானவர்கள் ஒன்றுக்குப் பல முறை “நான் மெரிட், நான் மெரிட்” என்று அழுத்திச் சொல்வது கூட “நீ கோட்டா, உனக்குத் தரம் இல்லை” என்ற மற்றவர்களைப் பார்த்துச் சொல்லும் தொனி […]
சமசுகிருதமயமாக்கம்
சாதிப் படியமைப்பில் கீழே இருப்பவர்கள் ஏன் தங்களுக்கு மேல் உள்ள சாதிகள் போல் பேச, உடுத்த, நடக்கத் தொடங்குகிறார்கள்? எளிய எடுத்துக்காட்டு: பரதநாட்டியம், கர்நாடக இசை கற்றுக் கொள்வது. இந்தப் போக்குக்குப் பெயர் சமசுகிருதமயமாக்கம். இதற்கும் மொழிக்கும் தொடர்பு இல்லை. இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்கள் ஏன் அதையே பழித்துப் பேசத் தொடங்குகிறார்கள் என்பதற்குக் கூட இதில் விடை இருக்கலாம். தகவல்: Sanskritisation சமசுகிருதமயமாக்கம் பார்க்க – முகநூல் உரையாடல்
நீதி
கன்றை இழந்த பசுவுக்கு ஈடாக தன் மகனையே கொல்ல ஆணையிட்டான் மனுநீதிச் சோழன் என்கிறார்கள். ஒரு உயிர் போனதற்கு நட்ட ஈடும் தண்டனையும் வழங்கினால் போன உயிர் திரும்ப வருமா என்கிறார்கள். நீங்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் கல்வியும் மானமுள்ள வேலையும் மறுத்ததற்கு நீதியாக, உங்களைப் படிக்கக் கூடாது என்றோ சிறந்த வேலைகளுக்குச் செல்லக்கூடாது என்றோ கீழான வேலைகளைச் செய் என்றோ உரிமைகளைப் பறித்தோமா? அதே கல்வியையையும் வேலையையும் தாருங்கள் என்று எங்கள் உரிமைகளைத் தானே கேட்கிறோம். […]
17ஆம் நூற்றாண்டில் 100% இட ஒதுக்கீடு
உங்களுக்குத் தெரியுமா? 1610. விஜயநகர நாயக்க மன்னர் ஆட்சியின் கீழ் மதுரையில் எண்ணற்ற கல்லூரிகள் இருந்தன. இக்கல்லூரிகளுள் 10,000க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். அனைவரும் பார்ப்பனர்கள். வேறு யாருக்கும் உயர் அறிவு பெறும் உரிமை இல்லை என்று கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும் என்று அறக்கட்டளை நிறுவி உதவித் தொகையும் வழங்கி வந்தார்கள். ஆதாரம்: சத்தியநாதையர் எழுதிய பதினேழாம் நூற்றாண்டில் தமிழகம், பக்கம் 177. Laerzio’s letter of 1610 notes […]
சோழர் காலத்தில் 100% இட ஒதுக்கீடு
உங்களுக்குத் தெரியுமா? சோழர் காலத்தில் உண்டு உறைவிட விடுதிகளுடன் முதுநிலைக் கல்வி வழங்கிய கல்லூரிகள் இருந்துள்ளன. மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் உண்டு. பேராசிரியர் சம்பளம் இன்றைய மதிப்பில் 2.32 இலட்சம் ரூபாய். வேலை, படிப்பு இரண்டுக்கும் 100% இட ஒதுக்கீடு. யாருக்கு? யாருக்கோ! ஆதாரம்: People from non-brahmin communities were not encouraged to join major educational institutions. This practice had been prevailing for several centuries. …All the […]
இட ஒதுக்கீடு இல்லாத இன்ப உலகம்
கேள்வி: இட ஒதுக்கீடு மட்டும் இல்லாவிட்டால் பொறியியல் படித்த எனக்கு மருத்துவ இடம் கிடைத்து இருக்குமே? பதில்: இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், இன்னொரு சாதியில் உங்கள் cut-off மதிப்பெண்ணுக்கு கீழே உள்ளவர் இடம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ஆனால், இப்போது உங்களுக்கு இருக்கும் இடத்தையும் உங்களுக்கு மேலே உள்ளவர் பறித்து இருப்பார். இட ஒதுக்கீடு இல்லாத உலகில் கல்லூரியும் இருக்காது. வெளிப்படையான cut-off மூலம் அனுமதி நடத்தும் Single Window Systemம் இருக்காது. இந்த முறைகள் […]
Creamy Layer அயோக்கியத் தனம்
ஒரு புறம் Creamy layerல் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு தேவை இல்லை என்று அகற்றி விடுகிறார்கள். இன்னொரு புறம், இட ஒதுக்கீட்டின் மூலம் போட்டி இடுபவர்களுக்குத் தகுதி இல்லை என்று விரட்டி விடுகிறார்கள். பிறகு, தகுதியான ஆள் இல்லை என்று சொல்லி அனைத்து இடங்களையும் பொதுப்பிரிவுக்கு மாற்றி ஆக்கிரமிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! பார்க்க – முகநூல் உரையாடல்