எல்லா வேலைகளுக்கும் தகுதியே முக்கியம் என்பார்கள். ஆனால், அர்ச்சகர் வேலைக்கு மட்டும் பிறப்பு முக்கியம் என்பார்கள். இங்கு பிறப்பே தகுதி ஆகிறது. இவர்கள் அடுத்தவர்களுடன் போட்டியிடும் போது தங்களுக்குக் கூடுதல் தகுதி இருக்கிறது என்பார்கள். அடுத்தவர்கள் தங்களுக்குப் போட்டியாக வரும் போது அவர்கள் பிறப்பே தகுதிக் குறைவு என்பார்கள். இது தான் சாதி. பார்க்க – முகநூல் உரையாடல்
இட ஒதுக்கீடு
மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போடு
நிலவுடைமை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? பண்ணையார்களிடம் இருந்து நிலங்களைக் கைப்பற்றி, நிலமில்லாமல் உழைக்கும் பாட்டாளிகளுக்குப் பிரித்துத் தர வேண்டும். முதலாளித்துவத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? முதலாளிகள் பதுக்கியுள்ள பணத்தைக் கையகப்படுத்தித் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்துத் தர வேண்டும். சாதியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்? சாதியில் உயர்ந்தவர்களிடம் மட்டுமே குவிந்துள்ள படிப்பு, வேலை அதன் மூலமான அதிகார வாய்ப்புகளை, பிறப்பால் பிற்படுத்தப்பட்ட அனைவருக்கும் சரிசமமாகப் பகிர்ந்து தர வேண்டும். மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டால் […]
மாறா அடையாளங்களுக்கே இட ஒதுக்கீடு
நீங்கள் ஒரு குழுவின் பிரதிநிதியாகச் செல்கிறீர்கள் என்றால்,கடைசி வரை உங்கள் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கு முன்னும் பின்னும், சாதி அதே சாதி தான். பெண் எப்போதும் பெண் தான். மாற்றுத் திறனாளி தொடர்ந்தும் அதே இடர்ப்பாடுகளைச் சந்திக்கிறார். ஆனால், ஒரு ஏழை வேலையில் சேர்ந்த பிறகு பணக்காரராக மாறி விடுகிறாரே? குறைந்தபட்சம், அதே சம்பளம் பெறும் மற்றவர்களுக்கு பொருளாதார அடிப்படையில் ஈடாகி விடுகிறாரே? பிறகு அவரை யாரின் பிரதிநிதி என்று கணக்கெடுப்பது? ஒருவரின் […]
அண்ணே.. அந்த ஏழை அர்ச்சகர் மேட்டர்!
கேள்வி: என் பக்கத்து வீட்டில் ஒரு ஏழை அர்ச்சகர் இருக்கிறார். God promise. அவருக்கு ஏன் இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது? பதில்: யாருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுக்க உன் பக்கத்து வீட்டைப் பார்க்காதே. அருகில் உள்ள அரசு அலுவலகத்திற்குச் செல். அங்கு முழுக்க ஆண்களாக இருக்கிறார்களா? பெண்களுக்கு இடம் கொடு. அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல், அங்கு முழுக்க இந்துக்களாக இருக்கிறார்களா? இசுலாமியர்களுக்கு இடம் ஒதுக்கு. அருகில் உள்ள மத்திய […]
ஏழைகள் எங்கே போவார்கள்?
கேள்வி: எல்லாம் சரி. ஏழைகள் எங்கே போவார்கள்? அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா? பதில்: இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமோ வேலை வாய்ப்புத் திட்டமோ அன்று. நாட்டில் ஒரே ஒரு வேலை, படிப்பு இடம் இருந்தாலும் அதனை எப்படி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒதுக்குவது என்பதை முடிவு செய்யத் தான் இட ஒதுக்கீடு. ஒரே ஒரு ஏழைக்கு இடம் ஒதுக்கி நாம் வறுமையை ஒழிக்க முடியாது. உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் […]
பிறப்பின் அடிப்படையிலான ஆதிக்கத்தைப் பணம் ஒழிக்குமா?
பணக்காரப் பெண்கள் ஆணாதிக்கத்தை எதிர்கொள்வது இல்லையா? இல்லை, ஏழை ஆண்கள் தான் பெண்ணியம் பேணும் காவலர்களாக மாறி விட்டார்களா? ஆணாதிக்கம் என்பது ஆணாகப் பிறப்பதினாலேயே, இந்தச் சமூகத்தின் வளர்ப்பினாலேயே, வரலாற்றின் காரணமாகவே, அந்த ஆணுக்குள் இயல்பாக உறைந்திருக்கும் குணமாக இருக்கிறது அல்லவா? எப்படி ஆணோடு இணைந்து ஆணாதிக்கம் வருகிறது என்பதைப் புரிந்து கொண்டால், சாதியோடு இணைந்து சாதி ஆதிக்க உணர்வு எழும் என்பதும் புரியும். பிறப்பின் காரணமாக எழும் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் அடிப்படையிலான […]
தலைக் கணக்கு
மக்களாட்சியில் தலைக் கணக்கு தான் எல்லாம். நாம் எவ்வளவு தான் மாநில சுயாட்சி பேசினாலும் தனி ஒரு மாநிலமாகச் சாதிப்பது கடினம். ஆந்திரா, கேரளா, கருநாடகத்துடன் நமக்கு எவ்வளவு தான் வாய்க்கால் வரப்பு பஞ்சாயத்துகள் இருந்தாலும், மாநில உரிமைகள் என்று வரும் போது அவர்களுடன் இணைந்து தான் தில்லிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டி வரும். பிற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேசியக் கூட்டணிகள் அமைத்துத் தான் பலமான தேசியக் கட்சிகளை எதிர்க்க முடியும். மாநிலங்கள் ஒற்றுமை […]
செல்வம் நிலையற்றது
வேறு எதற்குச் செலவு செய்யாவிட்டாலும், தாலியை அடகு வைத்தாவது கல்விக்குச் செலவு செய்வார்கள் தமிழர்கள். அவர்களே கூட, கொரோனாவால் பொருளாதாரத்தை இழந்து அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். செல்வம் நிலையற்றது. சாதிப் பாகுபாடு நிலையானது. எனவே தான், ஒருவர் பணக்காரரா என்பதைப் பார்த்து இட ஒதுக்கீட்டை மறுக்கக் கூடாது என்கிறோம்.
1971-80 பத்தாண்டு இட ஒதுக்கீடு வரலாறு
தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடு வரலாற்றில் இரண்டே ஆண்டுகள் தாம் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1971. கலைஞர் SC/ST ஒதுக்கீட்டை 16%ல் இருந்து 18% ஆக்கினார். BC ஒதுக்கீட்டை 25%ல் இருந்து 31% ஆக்கினார். 1980. MGR BC ஒதுக்கீட்டை 31%ல் இருந்து 50% ஆக உயர்த்தினார். ஆக, பத்து ஆண்டு காலத்தில் 41%ஆக இருந்த ஒட்டு மொத்த ஒதுக்கீடு 68% ஆக உயர்ந்தது. எனவே, 70 ஆண்டுகளாக எங்களுக்கு ஏன் ஒன்றுமே செய்யாமல் வஞ்சித்தீர்கள் என்ற புகார் துல்லியமான […]
வெள்ளை அறிக்கை
அடுத்து வரும் ஆட்சியில், தமிழ்நாட்டு அரசுப் பணிகள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகளில், யார் பணியாற்றுகிறார்கள், படிக்கிறார்கள் என்று சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். SC, ST, BC, MBC பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். 69% இட ஒதுக்கீடு விகிதம் நிலவாத இடங்களில் புதிய பணியிடங்களை உருவாக்கி சமன் செய்ய வேண்டும். BC, MBC பிரிவுகளில் ஒரு சில சாதிகளே தங்கள் மக்கள் தொகைக்கு விஞ்சி கூடுதல் […]