• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்

அரசியல்

கொடுமை என்னவென்றால் மத்திய அரசுப் பணிகளில் OBC 27% இட ஒதுக்கீடு இருப்பதே பல பேருக்குத் தெரியாது.

July 25, 2019

கொடுமை என்னவென்றால் மத்திய அரசுப் பணிகளில் OBC 27% இட ஒதுக்கீடு இருப்பதே பல பேருக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் 6 மாதத்துக்கு ஒரு முறை Creamy layer இல்லை என்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டும். இந்தியாவில் 120 கோடி மக்கள் வருமான வரி கட்டுவது இல்லை. இவர்கள் எல்லோரும் கண்டிப்பாக Creamy layerக்குக் கீ்ழ் தான் வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ளது போல் BC, MBC எல்லோரும் போட்டியிடலாம் என்றால் இவர்கள் சிரமம் இல்லாமல் போட்டியிடுவார்கள். […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

உங்களுக்குத் தெரியுமா?

July 25, 2019

உங்களுக்குத் தெரியுமா? வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள இந்த நாட்டில், அண்மைக்காலம் வரை இலட்சக்கணக்கான SC/ST/OBC அரசுப் பணிகளை நிரப்பாமலேயே வைத்திருந்தார்கள். கேட்டால் 125 கோடி மக்கள் உள்ள நாட்டில் தகுதியான ஆட்கள் இல்லை என்றார்கள். இப்போது முட்டை மதிப்பெண் வாங்கினாலும் அரிய வகை ஏழைகளான ஐயர், ஐயங்கார் போன்ற உயர்சாதிகளை மட்டும் ஏன் தேடித்தேடி வேலை தருகிறீர்கள்? இன்னும் 9,000க்கு மேற்பட்ட SC/ST/OBC பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏன் SC/ST/OBC பிரிவில் முட்டை மார்க் வாங்கியவர்களே இல்லையா? […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு!

July 25, 2019

ஆண்ட பரம்பரைகளின் மீது அடுத்த குண்டு! சூன் 2019ல் நடந்த UGC NET தேர்வில் உதவிப் பேராசிரியர் பணிக்கான cut-off பாருங்கள். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் நாவிதர், வண்ணார் போன்ற சாதிகள், காட்டிலும் மேட்டிலும் உழைக்கும் வேளாண்மை பார்க்கும் சாதிகள் எல்லாம் OBC. தமிழகத்தில் இவர்கள் மக்கள் தொகை ~70%. ஆனாலும் 27% தான் இடம் ஒதுக்கீடு. இவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையாகப் படித்து வருகிறவர்கள்! மாறாக, * ஆண்டுக்கு 8 லட்சம் வருமானமும்* 5 ஏக்கர் […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

திமுகவை ஏன் ஆதரிக்கிறோம்?

July 25, 2019

முந்தாநேற்று – SBI தேர்வில் 10% பிராடு குறித்து மக்கள் சமூக ஊடகங்களில் குமுறினார்கள். நேற்று – தலைவர் அறிக்கை விடுகிறார். இன்று – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புகிறார்கள். இது வேறு எந்தக் கட்சியிலாவது சாத்தியமா? அதனால் தான் திமுகவை ஆதரிக்கிறோம்! பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

தமிழ்நாட்டில் SBI clerk தேர்வு இடங்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?

July 25, 2019

தமிழ்நாட்டில் SBI clerk தேர்வுக்கு 425 இடங்கள். இது எப்படி பிரிக்கப்படுகிறது? 42 இடங்கள் – ஐயர், ஐயங்கார் போன்ற உயர்சாதியினர். (EWS 10%) 31 இடங்கள் – மலைவாழ் பழங்குடி மக்கள் (ST 7.5%) 62 இடங்கள் – பட்டியல் சாதியினர் (SC 15%) 114 இடங்கள் – கவுண்டர், வன்னியர், தேவர், நாடார் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர் (OBC 27%) 172 இடங்கள் – பொதுப்பிரிவில் திறந்த போட்டி (GEN 40.5%) நடந்து முடிந்தது […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

SBI மீது வழக்கு தொடுக்கலாமா?

July 25, 2019

கேள்வி: SBI மீது வழக்கு தொடுக்கலாமா? பதில்: இது தேவையில்லாத ஆணி. குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் அறிவிக்காமல் தேர்வு நடத்தியதற்கு வேண்டுமனானால் விளக்கம் கேட்கலாம். ஆனால், இது தான் சாக்கு என்று கேள்வித்தாளைக் கடினமாக்கி நம்ம ஆட்களையும் சேர்த்து தோல்வியுறச் செய்வார்கள். மற்றபடி, இது ஒரு SBI தேர்வில் மட்டும் நடக்கவில்லை. BHEL தேர்வு, அஞ்சல் துறைத் தேர்வு, உதவிப் பேராசிரியர் தேர்வு என்று பல இடங்களிலும் இதே போக்கு தான். BHEL தேர்வு முடிவு பாருங்கள். […]

Filed Under: இட ஒதுக்கீடு, அரசியல், சாதி

SBI எழுத்தர் தேர்வில் சென்ற ஆண்டு வரை கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள்.

July 25, 2019

SBI எழுத்தர் தேர்வில் சென்ற ஆண்டு வரை கூட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த இந்த ஆண்டு அந்த விதியைத் தூக்கி விட்டார்கள். அதனால் தான் மேற்கு வங்கத்துப் பார்ப்பனர்கள் முட்டை மதிப்பெண் பெற்றாலும் வேலை பெறுகிறார்கள். தங்களுக்குத் தேவை என்றால் விதியையும் மாற்றுவார்கள். தகுதி என்ற சொல்லின் பொருளையும் மாற்றுவார்கள். இந்த விதி மாறியதன் பின்னணி என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டும். பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

இத்தனை நாள் இட ஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர் இடம் கிடைத்த போது சும்மா இருந்தீர்களே!

July 25, 2019

கேள்வி: இத்தனை நாள் இட ஒதுக்கீட்டில் குறைவான மதிப்பெண்கள் பெற்றோர் இடம் கிடைத்த போது சும்மா இருந்தீர்களே! இப்போது ஏன் குதிக்கிறீர்கள்? பதில்: இத்தனை நாள் இட ஒதுக்கீட்டை விமர்சித்தவர்கள் என்ன சொன்னார்கள்? “எங்களுக்குத் தகுதி இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முன்னேறிய சாதியாகப் பிறந்ததால் எங்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் வாய்ப்பு பெறுகிறார்கள். இதனால் படிப்பு, வேலையின் தரம் கெடுகிறது, நாட்டின் முன்னேற்றம் பாதிக்கிறது” என்றார்கள். இவ்வளவு பேசியவர்கள் இப்போது SC, ST, OBCஐ விட […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது?

July 25, 2019

கேள்வி: SBI Clerk தேர்வில் எப்படி GEN, SC, OBC cut-off ஒன்றாக இருக்கிறது? பதில்: குறைவான இடங்கள், கடுமையான போட்டி இருந்தால் cut-off ஒன்றாக வர வாய்ப்பிருக்கிறது. SC, ST, OBC பாவம் என்று யாரோ ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ இத்தனை நாள் குறைவான cut-off முடிவு செய்யவில்லை. இருக்கிற இடங்களுக்கு எத்தனைப் பேர் போட்டியிடுகிறார்கள் என்பதைப் பொருத்து cut-off மாறும். மருத்துவப் படிப்புக்குப் போட்டி அதிகம். அதனால் cut-off அதிகம். கலை, அறிவியல், பொறியியல் […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு

பணம் ஒரு மூலதனம். அது போலவே சாதியும் ஒரு மூலதனம்.

July 24, 2019

பணம் ஒரு மூலதனம். அதைச் சும்மா வைத்திருந்தாலே வட்டி மூலம் குட்டி போடும். அது போலவே சாதியும் ஒரு மூலதனம். நீங்கள் OBCஆகப் பிறந்தால் 70 ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்குப் போராட வேண்டும். இன்று வரை 27% OBC இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், 10% பிராடு ஒதுக்கீடு உத்தரவு வந்த சூட்டில் ஆறே மாதங்களில் பட்டையைக் கிளப்புகிறது. Rich get richer போல் ஏற்கனவே சாதியின் உயர் அடுக்கில் இருப்பவர்கள் அந்தச் சாதியை வைத்தே […]

Filed Under: அரசியல், இட ஒதுக்கீடு, சாதி

  • « Go to Previous Page
  • Page 1
  • Interim pages omitted …
  • Page 3
  • Page 4
  • Page 5
  • Page 6
  • Page 7
  • Interim pages omitted …
  • Page 15
  • Go to Next Page »

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

2287