இங்கு கல்வி, மருத்துவம், இதர சேவைகளில் தனியார் எதிர் அரசு என்று மடை மாற்றப்படுகிற பிரச்சினைகள் பலவும் உண்மையில் மத்திய அரசு எதிர் மாநில அரசு என்னும் மாநில சுயாட்சிப் பிரச்சினையாகும். நமக்குக் கூடுதல் நிதியும் அதைத் திரட்டுவதற்கு உரிமையும் இருந்தால் தனியாருக்கு நிகராக வசதிகள் தர முடியும். கவனிக்க: வசதிகள் தான். சேவை ஏற்கனவே மிகச் சிறப்பாகத் தான் உள்ளது. தற்போது வருகிற புதிய புதிய தேசிய கொள்கைகளையும் முறைகளையும் ஒட்டு மொத்த மக்களின் மாநில […]
அரசியல்
ஏழைகள் குறைவாக இருப்பது உயர் சாதியினரே
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இரண்டாவது ST, ஒவ்வொரு மூன்றாவது SC, இசுலாமியர் ஏழைகள். பணத்தால் மட்டும் அல்ல. பல்வேறு பரிணாமங்களிலும் ஏழைகள். இருப்பதிலேயே ஏழைகள் குறைவாக இருப்பது உயர் சாதியினர். அவர்களுள் 15% பேர் தான் இன்னும் ஏழைகளாக இருக்கிறார்களாம். சொல்வது யார்? ஐக்கிய நாடுகள் மன்றம்! பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுப்பது தவறு. அப்படியே கொடுப்பது என்றால், தமிழகத்தில் உள்ள 3% உயர் சாதியினருக்கு, 0.15*3= 0.45% வேண்டுமானால் இட ஒதுக்கீடு கொடுக்கலாம். இப்போது […]
அரசியல் Vs NGOத்தனம் வேறு பாடு என்ன?
கேள்வி: அரசியல் Vs NGOத்தனம் வேறு பாடு என்ன? பதில்: GST கொண்டு வருகிறார்கள். மாநில அரசு வரி விதிப்பை விட அந்த முறை நன்றாக இருந்தால் எல்லா தொழில் நிறுவனங்களும் அதை ஏற்றுக் கொள்வார்கள். நாளையே சீனாக்காரன் நம்மை அடிமைப்படுத்தி அதை விடச் சிறப்பான வரி விதிப்பு முறையைக் கொண்டு வந்தால் அதையும் ஏற்றுக் கொள்வார்கள். தேசியக் கல்விக் கொள்கை, தேசியத் தேர்வு என்று கொண்டு வரப்படுகிறவற்றில் அனைத்துக் கூறுகளும் நன்றாக இருந்தால், இப்போது பேசுகிற […]
எங்க ஊரில் நடந்தது
இது எங்க ஊரில் நடந்தது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேப்பம்பட்டி மாம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த மலைவாழ் மாணவி 434 நான்கு மதிப்பெண் எடுத்து, எங்க அரூர் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளியில் தருமபுரி ஆட்சியர் உதவியுடன் படிக்க வைத்து அந்த பெண் +2 வில் 1140 மதிப்பெண் எடுத்து 2009 ஆம் ஆண்டு Stanley Medical Collegeல சேர்ந்தார். அந்தப் பெண் M.b.b.s படித்து முடித்தார்கள். அவர்கள் குடும்பம் காரப்பாடி என்ற மலைப்பகுதியில் வாழ்ந்து […]
SC, OBC, GEN எல்லோருக்கும் எப்படி ஒரே cut-off? GENஐ விட SC, OBCக்குக் cut-off குறைக்க முடியாதா?
கேள்வி: SC, OBC, GEN எல்லோருக்கும் எப்படி ஒரே cut-off? இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது? GENஐ விட SC, OBCக்குக் cut-off குறைக்க முடியாதா? பதில்: Cut-off யாரும் தீர்மானிப்பதில்லை. இடங்கள் கூடுதலாக இருந்து போட்டி குறைந்தால் cut-off தானாகக் குறையும். 3% ஆட்களுக்கு 10% தந்ததால் தான் cut-off 28.5 ஆனது. அதாவது 333% இட ஒதுக்கீடு! ஆகவே, OBC, SC, STக்கு ஏற்கனவே இருக்கிற இட ஒதுக்கீட்டை 333 % ஆக கூட்டிக் […]
தனியார் கல்லூரியில் படிப்பு நேர்காணல்
1997. Ro Si தனியார் கல்லூரியில் MBBS படிப்பு நேர்காணலுக்குச் சென்றிருக்கிறார். 1. நல்ல பாம்புக்கு ஏன் நல்ல பாம்பு என்று பெயர்?2. பொள்ளாச்சி சந்தையிலேயே பாடலைப் பாடியது யார்? என்று இரு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். ஓர் உயிர் காக்கும் மருத்துவருக்குத் தெரியவேண்டிய இந்த முக்கியமான அறிவு இல்லாததால் MBBS வாய்ப்பை இழக்கிறார். என் சித்தப்பா பாலிடெக்னிக்கில் சேரவே பெரிய இடத்து சிபாரிசு எல்லாம் தேடிக் கொண்டு போனதாகச் சொல்வார். 1990கள் வரையே தொழிற்படிப்புகளில் சேர நேர்காணல் இருந்தது. […]
இந்தியாவின் மக்கள் தொகையில் குறைந்தது ~50% OBC
இந்தியாவின் மக்கள் தொகையில் குறைந்தது ~50% OBC என்று எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அதாவது, குறைந்தது 60 கோடி பேர். இந்தியாவில் வருமான வரி கட்டுகிற 5 கோடி பணக்காரர்களும் OBC என்று வைத்துக் கொண்டால் கூட, எஞ்சியுள்ள 55 கோடி பேர் ஏழைகள் தான். யார் பணக்காரர்கள் என்ற விவரம் ஏற்கனவே அரசிடம் இருக்கும் போதும், இந்த 55 கோடி மக்களும் தாங்கள் ஏழைகள் தான், தங்களுக்கும் OBC இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று சான்றிதழ் […]
10% பிராடு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைவதாக யாரும் எண்ணக்கூடாது
10% பிராடு ஒதுக்கீட்டில் பார்ப்பனர்கள் மட்டுமே பயனடைவதாக யாரும் எண்ணக்கூடாது என்று இப்படி விசமத்தனமாக Fake News பரப்புகிறார்கள். தமிழகத்தின் 99% கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் மக்கள் தொகை BC, MBC, BCM பட்டியலின் கீழ் வருகிறார்கள். ஓதுவார் என்பது தொழில். அத்தொழிலை மேற்கொள்ளும் பல்வேறு சாதிகள் பிற்படுத்தப்பட்டவர்களே. வெள்ளாளர்கள், செட்டியார்களிலும் பல பிரிவுகள் பிற்படுத்தப்பட்டவர்களே. மேலும் தகவல் அறிய திராவிட ஆய்வுக் குழுவுக்கு வாருங்கள். (குழுவுக்கான இணைப்பு மறுமொழியில்) பார்க்க… முகநூல் உரையாடல்
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!
அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா! பார்க்க… முகநூல் உரையாடல்
இந்த 10% பிராடு ஒதுக்கீடு பற்றி அதிகம் படிப்பறிவு கொண்ட பிற மாநில மக்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன் சார்?
கேள்வி: இந்த 10% பிராடு ஒதுக்கீடு பற்றி அதிகம் படிப்பறிவு கொண்ட பிற மாநில மக்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே ஏன் சார்? பதில்: ஏன் என்றால் சமூக நீதி என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. புரியாது. சிகப்பாக இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல், படித்தவன் நியாயமாக நடப்பான் என்ற உங்கள் எதிர்பார்ப்பு தான் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளது. ஊரெல்லாம் ஊழல் குற்றவாளி என்றும் படிப்பறிவற்ற முட்டாள் என்றும் நினைக்கிற லாலு […]