பாண்டிச்சேரி பல்கலையில் பேராசிரியர் பணிக்கு 10% பிராடு ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். இதற்கு முன்பு Associate Professorஆகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தான் Professor பணிக்குத் தேர்வாவார்கள். இந்தப் பணிகளுக்குப் பரிந்துரைக்கும் சம்பளம் என்ன என்பதையும் படத்தில் காணலாம். ஏற்கனவே மாதம் 2 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் Associate Professor ஒருவர் எப்படி ஏழை ஆவார்? அதெல்லாம் தெரியாது பாஸ்! மோடி சொன்னார்! நாங்க உயர் சாதியினருக்குத் தனி இட ஒதுக்கீடு கொடுப்போம்! இனி எல்லா […]
அரசியல்
சில புதிய புரட்சியாளர்கள் கோருவது என்ன?
சில புதிய புரட்சியாளர்கள் கோருவது என்ன? திராவிட இயக்கத்தவர்கள் திருமாவைக் கொண்டாட வேண்டுமாம். ஆனால், ஆ. ராசாவைக் கொண்டாடக் கூடாதாம்! என்ன ஒரு வேடிக்கை! தலித்களுக்குத் திராவிட இயக்கத்தில் வளர்ச்சியும் இல்லை வாய்ப்பும் இல்லை என்ற மாயையை உருவாக்கி, தலித்களைப் பொது நீரோட்ட அரசியலில் இருந்து தனிமைப்படுத்துவது தான் உங்கள் Agendaவா? இல்லை, அவர்களை ஓரணியில் திரட்டுகிறோம் என்ற பெயரில் எல்லா சாதிக் கட்சிகளையும் போல் அதிகாரப் பேரம் நடத்துவது தான் உங்கள் செயல் திட்டமா? இதே […]
மோடி அரசில் 89 செயலாளர்கள்
மோடி அரசில் 89 செயலாளர்கள். இவர்களுள் SC – 1ST – 3OBC – 0 இட ஒதுக்கீட்டின் மூலம் எல்லோரும் பணியில் சேரும் போது, உயர் சாதியினர் மட்டும் உயர் பொறுப்புகளைப் பெறுவது எப்படி? இது தான் சாதிப் பாகுபாடு. அதனால் தான் பதவி உயர்வுகளில் கூட இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். ஆனால், நடப்பது என்ன? ஏற்கனவே உயர் சாதியினர் ஒட்டு மொத்தமாகக் குத்தகை எடுத்துள்ள அதிகாரத்தில் அவர்களுக்கு மேலும் 10% இடத்தை உறுதி […]
அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்!
அஞ்சல் துறையில் பல EWS வேலைகளை நிர்வாகக் காரணமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்! அது என்ன காரணம் என்று அஞ்சல் துறை தெளிவுபடுத்த வேண்டும். SC, ST, OBC வேலை எதுவும் இப்படி காலியாக இல்லை. ஒரு வேளை, அரிய வகை ஏழைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லையோ? இனிமேல் பிறந்து வரப் போகிற முன்னேறிய சாதியினர் யாரும் 42க்கு கீழாக மதிப்பெண் பெற்றால் தருவார்களோ? பார்க்க… முகநூல் உரையாடல்
பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவு
பாண்டிச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10% பிராடு ஒதுக்கீட்டின் விளைவைப் பாரீர்! SCஐ விடக் குறைவான மதிப்பெண், 196/720 நீட் மதிப்பெண் பெற்ற அரிய வகை ஏழைகளுக்கு எல்லாம் இடம் உறுதி! அதாவது, அனிதாவுக்குக் கிடைக்காத இடம் ஸ்வாதிக்குக் கிடைக்கும்! பார்க்க… முகநூல் உரையாடல்
OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா?
கேள்வி: OBCக்கள் பற்றியே பேசுகிறீர்களே? நீங்கள் சாதி வெறியரா? பதில்: யார் OBC? அது என்ன ஒரே சாதியா? இல்லை, நான் பிறந்த சாதியா? உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், சிலை வடிப்பவர்கள், நகை செய்பவர்கள், ஆடு/மாடு மேய்ப்பவர்கள், காட்டிலும் மேட்டிலும் வேலை செய்பவர்கள் என்று நூற்றுக் கணக்கான சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள். பல மொழி பேசுகிறவர்கள். கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள், இந்துக்கள் என்று பல மதங்களைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் மக்கள் தொகையில் 70% OBC […]
EWS என்றால் என்ன?
EWS என்றால் என்ன? 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள். OBC என்றால் என்ன? அவர்களும் இட ஒதுக்கீடு பெறும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றாலும், 8 இலட்சத்துக்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் தான். ஆண்டு வருமான அடிப்படையில், EWS = OBC. அரிய வகை ஏழைகளின் Cut-off SC/ST cut-offக்கு இணையாகவாவது அல்லது கூடுதலாகவாவது இருக்க வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அப்போ, EWS போல் அதே வருமானம் உள்ள OBC மட்டும் என்ன தக்காளி […]
அரிய வகை ஏழைகளே!
ஒரு காடு வாழ் பழங்குடி தொலைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு தலித் சாதியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு BC/MBC, தலித் அளவு இல்லாவிட்டாலும் சாதியாலும் செய்யும் தொழிலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு மாற்றுத் திறனாளி உடலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அரிய வகை ஏழைகளே! இவர்கள் எல்லோரையும் விட நீங்கள் எதனால் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? உங்கள் வீடு எங்கே இருக்கிறது சொல்லுங்கள். நீங்கள் வசிக்கிற குடிசையையும் குடிக்கிற கஞ்சியையும் போட்டிருக்கிற கிழிந்த துணியையும் பார்க்க விரும்புகிறேன். பார்க்க… முகநூல் உரையாடல்
இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள்.
இந்தியாவில் இனி கல்வி முதற்கொண்டு எல்லாம் தனியார்மயம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள். யார் இந்தத் தனியார்? நம்ம ஊர் நாடாரும் பொட்டிக் கடைச் செட்டியாருமா ரயில் விடப் போகிறார்? Reliance போன்ற பெருநிறுவனங்கள் அல்லவா NEET தேர்வு பயிற்சி நடத்துவது முதற்கொண்டு செங்கோட்டையை வாடகைக்கு எடுப்பது வரையான அனைத்திலும் ஈடுபடுகிறார்கள்? யார் இந்தப் பெரு நிறுவனங்கள்? 92% உயர் சாதியினர். பார்ப்பனர் + பனியா கூட்டணி. கார்ப்பரேட் நிறுவன உயர் பதவிகளில் உயர் சாதியினர் 92% […]
மாநிலங்கள் மத்திய அரசிடம் தருகிற மருத்துவப் படிப்பு இடங்களில் 27% OBC இட ஒதுக்கீடு தர வேண்டும்.
மாநிலங்கள் மத்திய அரசிடம் தருகிற மருத்துவப் படிப்பு இடங்களில் 27% OBC இட ஒதுக்கீடு தர வேண்டும். ஆனால், எவ்வளவு தருகிறார்கள் தெரியுமா? 2%! மிச்ச 25%ஐயும் பொதுப்போட்டிக்கு நகர்த்தி விட்டார்கள். ஆமாம் கவுண்டா! ஆமாம் வன்னியா! ஆமாம் தேவா! நீயும் தான் அந்த OBC. இந்த OBC இட ஒதுக்கீடு கேட்டுத் தான் 70 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், ஐயர், ஐயங்கார் போன்ற உயர் சாதிகளுக்கு ஒதுக்கப்பட்ட 10% இடங்கள் Swiggy delivery போல் […]